For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று கோவிலிலிருந்து பிரச்சாரம் தொடங்கும் ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை சைதாப்பேட்டை கோவிலில் இருந்து தனதுபிரச்சாரத்தை துவக்குகிறார்.

தொகுதி பட்டியலையும், அதன் பின்வேட்பாளர் பட்டியலையும் முதலில் வெளியிட்டஜெயலலிதா கனஜோராக பிரச்சாரத்தையும் முதலில் துவங்குகிறார்.

சென்னையில் சைதாப்பேட்டையில் தாரை தப்பட்டை முழங்க இளங்காளியம்மன்கோயில் அருகே 3.30 மணியவில் ஜெயலலிதா பிரச்சாரத்தை துவங்குகிறார்.

அங்கு அதிமுக வேட்பாளர் செந்தமிழனை ஆதரித்து வேனிலிருந்த படியேபேசுகிறார். பிரச்சாரம் துவங்கும் இடம் கோயில் என்பதால் அங்கு அவருக்குசிறப்பான வரவேற்பு கொடுக்க அதிமுக மகளிர் அணியினர், இளைஞர் அணியினர்சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

சைதாப்பேட்டையில் முதல்வருக்கு பூரண குப்ப மரியாதை அளிக்கப்படுகிறது.இதனால் சைதாப்பேட்டை பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

சைதாப்பேட்டையில் பிரச்சாரத்தை முடிக்கும் ஜெயலலிதா அடுத்து கிண்டி செல்கிறார்.அங்கு அவருக்கு கத்திப்பாரா சந்திப்பில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்படுகிறது.

ஆலந்தூர் தொகுதியின் வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.அதன்பிறகு மீனாம்பாக்கம், பல்லாவரம், திரிசூலம், குரோம் பேட்டை பகுதியில்வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்கிறார்.

அதன்பின் தாம்பரம் செல்லும் முதல்வர் மதிமுக வேப்பாளர் பாலவாக்கம் சோமுவைஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இங்கு மதிமுகவினரும, அதிமுவினரும்ஜெயலலிதாவை வரவேற்ற சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அதன்பிறகு முதல்வர் பெருங்குளத்தூர் செல்கிறார். அங்கு திருப்போரூர் தொகுதிஅதிமுக வேட்பாளர் தனபாலை ஆதரித்து, வண்டலூர், ஊரபாக்கம், கூடுவாஞ்சேரிபகுதிகளில் வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்கிறார்.

பின் மறை மலைநகர் வழியாக சென்று சிங்கம் பெருமாள் கோயில் சென்று பேசுகிறார்.அதன்பின் செங்கல்பட்டு வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து பேசுகிறார்.

மாமண்டூர், பட பாலம் கூட்டுச்சாலை வழியாக மதுராந்தகம் செல்கிறார். அங்குமதுராந்தகம் வேட்பாளர் அப்பாத்துரைக்கு பிரச்சாரம் செய்கிறார்.

பின் அங்கிருந்து மேல்மருவத்தூர் அச்சிரபாக்கம் செல்கிறார். அங்கு அதிமுகவேட்பாளர் சரஸ்வதி முத்துகிருஷ்ணணுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். பின்அங்கிருந்து பெரும்பேரி, ஒங்கூர், ஒலக்கூர், கூட்டுரோடு, சாலம், சலையாவதிவழியாக திண்டிவனம் செல்கிறார்.

திண்டிவத்தில் அமைச்சர் சண்முகத்திற்கு பிரச்சாரம் செய்யும் முதல்வர்விக்கிரவாண்டியில் பிரச்சாரத்தை முடிக்கிறார். பின்னர் இன்று இரவு விழுப்புரத்தில்தங்குகிறார்.

நாளை விழுப்புரத்தில் பிரச்சாரத்து துவக்கி கோவிலூர், வளவனூர் வழியாகபாண்டிச்சேரியில் பிரச்சாரம் செய்கிறார்.

பின்னர் அரியாங்குப்பம் வழியாக தமிழக எல்லையான ரெட்டிச்சாவடி வந்து மஞ்சனகுப்பத்தில் பிரச்சாரத்தை முடிக்கிறார்.

ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை முன்னிட்டு சென்னையின் நுழைவு பகுதிகள்விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல்வர் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் அலங்காரவளைவுகள் தோரணங்கள், கொடிகள் என எல்லா இடங்களிலும் தொணடர்கள்அசத்தியுள்ளனர்.

சென்னையிலிருந்து திண்டிவனம் வரை ஜிஎஸ்டி சாலையில் கொடிகள்தோரணங்களும், அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X