For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெவை எதிர்க்கும் வைரமுத்து உறவினர் சீமான்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் திமுக சார்பில் டுடோரியல்கல்லூரி அதிபரும், திரைப்பட வினியோகஸ்தரான சீமான் போட்டியிடுகிறார்.

திமுகவின் முக்கியத் தலைவர்கள் அத்தனை பேரும் இத் தேர்தலிலும்போட்டியிடுகின்றனர். ஒரு சிலருக்கு தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. மற்றபடிபழைய தொகுதிகளிலேயே அனைவரும் போட்டியிடுகின்றனர.

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில் சீமான் என்பவர்நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் சென்னை உள்பட பல இடங்களில் சீமான் டுடோரியல் கல்லூரி என்ற பெயரில்பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். அத்தோடு திரைப்பட வினியோகஸ்தராகவும்உள்ளார்.

முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சீமான் கவிஞர் வைரமுத்துவின் உறவினர் ஆவார்.

25 ஆண்டுக்கும் மேலாக திமுகவில் உறுப்பினராக உள்ள சீமான், தி.நகர் தொகுதியில்போட்டியிட சீட் கோரி விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் அவரை ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் களம் இறக்கியுள்ளதுதிமுக தலைமை. கம்பம அருகே உள்ள உத்தமபுரத்தைச் சேர்ந்த சொந்த ஊராகக்கொண்டவர் சீமான்.

வைரமுத்துவின் ரெக்கமன்டேசனில் ஜெயலலிதாவை எதிர்த்து சீமான்களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவருக்காக வைரமுத்து பிரச்சாரம் செய்யவும்வாய்ப்புள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X