For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக வேட்பாளர் தேர்வில் வலுக்கும் அதிருப்தி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பல்வேறு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் குறித்த அதிருப்தி வலுத்துவருகிறது.

திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் சீட்கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பலருக்கு சீட் கிடைக்கவில்லை. சில தொகுதிகளும்கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், கட்சியினர் அதிருப்திஅடைந்துள்ளனர்.

திருவிடைமருதூர், முகையூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு வழங்கப்பட்டதால்அங்கு திமுகவினர் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். தினசரி ஏதாவது ஒருபோராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆலந்தூர், சேலம் ஆகிய ஊர்களிலும் அதிருப்தி வெடித்துள்ளது.ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அன்பரசன்நிறுத்தப்பட்டுள்ளார். இது ஆலந்தூர் நகராட்சித் தலைவர் பாரதி ஆதரவாளர்களுக்குபெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஆலந்தூர் பாரதிக்கு தொகுதியில் நல்ல பெயர் உள்ளது. எனவே அவரை நிறுத்தினால்வெற்றி உறுதி என்று கட்சி மேலிடத்திற்கு பாரதியின் ஆதரவாளர்கள் பல முறை கூறிவந்தனர்.

ஆனால் அதையும் மீறி அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் பாரதியின்ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சிங்கநல்லூரில் உள்ள பாரதியின் வீட்டுக்கு தினசரி நூற்றுக்கணக்கான திமுகவினர்வந்து பாரதியை சுயேச்சையாகப் போட்டியிடுமாறு வற்புறுத்தி வருகிறார்கள். அன்பரசனுடன் ஓட்டு கேட்டு வராதீர்கள். தனியாக நில்லுங்கள் என்று கூறி அவரிடம்கோரிக்கை விடுக்கின்றனர். இதற்கு பாரதி எந்தப் பதிலும் சொல்லாமல் மெளனம்காத்து வருகிறார்.

இதேபோல, இன்னொரு திமுக பிரமுகரான கண்டோன்மென்ட் சண்முகம் சீட் கேட்டுஏமாந்தவர்களில் ஒருவர். முன்னாள் எம்எல்ஏவான சண்முகம், சீட் கிடைக்காதஏமாற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பல்லவாரத்தில் நடந்த கொடியேற்று விழாவில்கலந்து கொண்டார்.

அப்போது அவருக்கும் அன்பரசன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது. இதனால் அவரும் அதிருப்தி அடைந்து தேர்தல் பணிகளில் ஈடுபடாமல்அமைதியாக இருந்து வருகிறார்.

வில்லிவாக்கம் தொகுதியின் திமுக வேட்பாளராக அம்பத்தூர் நகராட்சி வார்டுஉறுப்பினர் ஆஸ்டின் பெயர் அடிபட்டது. இவர் சரத்குமார் ரசிகர் மன்ற மாவட்டஆலோசகராகவும் இருக்கிறார். ஆனால் இவருக்கு சீட் கொடுக்காமல் புரசைவாக்கம்ரங்கநாதனுக்குக் கொடுத்துள்ளதால் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆஸ்டின் தான் வகித்து வந்த வட்டச் செயலாளர், மாவட் கழக பிரதிநதி உள்ளிட்டபதவிகளை ராஜினாமா செய்து விட்டார்.

இதற்கிடையே, கும்மிடிப்பூண்டி, திருப்போரூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்குஒதுக்கப்பட்டதால் கோபமடைந்த திமுகவினர் திமுக கொடிகள், பேனர்களை கிழித்தெறிந்தனர். பலர் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைமைக்கு தந்தி அனுப்பினர்.கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 100 பேர்திமுகவிலிருந்து விலகி விஜயகாந்த் கட்சியில் சேர்ந்தனர்.

இதேபோல, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா என்கிறராஜேந்திரன் ஆகியோருக்கு சீட் கொடுத்தற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தந்தைக்கும்,மகனுக்கும் சீட் கொடுப்பதா என்று வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட திருமலைகிரிஊராட்சி திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அனைவரும்அதிமுகவில் சேர்ந்து விட்டனர்.

இதே போல திருச்சி மருங்காபுரி தொகுதி கவிஞர் சல்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.கட்சியில் சேர்ந்து ஒராண்டே ஆனா சல்மாவுக்கு சீட்டா என கொதிப்படைந்த திமுகதொணடர்கள் மருங்காபுரி தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என போஸ்டர்கள்ஒட்டியுள்ளனர்.

இதேபோல மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் தளபதிக்குஎதிராக தொகுதியின் பல்வேறு இடங்களில் எதிர்ப்புகிளம்பியுள்ளது. அதேபோல,இளையாங்குடி தொகுதி வேட்பாளர் ராஜ கண்ணப்பனுக்கு எதிராகவும் குரல்கிளம்பியுள்ளது.

இப்படிப் புற்றீசல் போல கிளம்பி வரும் அதிருப்தியை எப்படி சமாளிப்பது, இவைதானாக கிளம்பும் எதிர்ப்புகளா அல்லது எவரேனும் பின்னணியில் உள்ளார்களாஎன்று திமுக தலைமை கவலை அடைந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X