For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் பொற்கால ஆட்சி அமைய வாக்களியுங்கள்:அன்புச் சகோதரி ஜெ. பிரசாரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக அரசின் ஐந்து ஆண்டு கால சாதனைகளை சீர்தூக்கிப் பார்த்து வருகிறசட்டசபைத் தேர்தலில் வாக்களியுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா பிரசாரம்செய்தார்.

வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்து விட்ட முதல்வர் ஜெயலலிதா நேற்று முதல்தனது பிரசாரத்தை தொடங்கினார்.

மாலை 6 மணிக்கு தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து கிளம்பிய ஜெயலலிதா,சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பிடாரி இளங்காளியம்மன் கோவில்அருகே இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.

ஜெயலலிதாவுக்கு கோவில் நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதைஏற்றுக் கொண்ட பின்னர் வேனில் இருந்தபடியே கூடியிருந்த தொண்டர்களிடையேஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.

அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கியும் மத்திய அரசில் உள்ள தமிழகஅமைச்சர்களையும் தாக்கியும் அவர் பிரசாரம் செய்தார்.

ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி அமைக்கவாக்களியுங்கள் என்று 2001ல் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது கேட்டேன்,நீங்களும் எனக்கு வாக்களித்தீர்கள்.

நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீணாகாத வகையில், உங்கள் அன்புச்சகோதரியின் அரசு பல்வேறு சாதனைகளை செய்து பீடு நடை போட்டு வருகிறது.

உங்களது எதிர்பார்ப்புகளை திட்டங்களாக ஆக்கினேன். திட்டங்களை எல்லாம்பணிகளாக ஆக்கினேன். அந்தப் பணிகள் இன்று சாதனைகளாக மாறியுள்ளன. அந்தசாதனைகளை ஒரு சில நிமிடங்களில் பட்டியலிடுவது எளிதான காரியமல்ல.

யாரும் சிந்தித்துக் கூட பார்த்திராத உழவர் பாதுகாப்புத் திட்டம், 1முதல் 12வதுவகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச பாட நூல்கள் வழங்கும்திட்டம், 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவசசைக்கிள் திட்டம்,

ரூ 3.50க்கு ரேஷன் அரிசி, குறைந்த அளவு கட்டணத்தில் மின்சாரம், குடிசைகளுக்குஇலவச மின்சாரம், விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம், பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்தாலும் கூட உயர்த்தப்படாத பேருந்துக் கட்டணம்,

3 கோடியே 28 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, சேலை, வறட்சி, சுனாமி,மழை வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்,

பெண்கள் சொந்தக் காலில் நின்று சாதிக்க மகளிர் சுய உதவிக் குழுக்கள்,திருக்கோவில்கள், தர்காக்கள், தேவாலயங்களில் அன்னதானத் திட்டம் என அதிமுகஅரசின் சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு படைத்து வரும் சாதனைகளுக்குமுட்டுக்கட்டை போடும் வகையில், தமிழக அரசோடு ஒத்துழைக்காத மத்திய அரசின்மாற்றாந்தாய் மனப்பான்மை,

தமிழகத்துக்கு எந்த நன்மையும் வந்து விடக் கூடாது என்று தடுப்பதற்காகவேமத்தியில் அமைச்சர்களாக பதவியேற்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரின் சுயநல மனப்பான்மை ஆகியவற்றையும் தாண்டி உங்கள் அன்புச் சகோதரியின் அரசுசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நான் உங்களுடன் கூட்டணி வைத்திருக்கிறேன். எனது வெற்றி உங்கள் வெற்றி,உங்கள் வெற்றி என் வெற்றி. வாக்களியுங்கள் இரட்டை இலைக்கு, வலிமைசேருங்கள் ஜனநாயகத்திற்கு என்று பிரசாரம் செய்தார் ஜெயலலிதா.

பிரசாரத்தின்போது சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் செந்தமிழன் தனி ஜீப்பில்கும்பிட்டபடியே ஆடாமல் அசையாமல் நின்றிருந்தார்.

சைதாப்பேட்டையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பெருமளவில் தங்களது கட்சிக்கொடிகளுடன் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக மகளிர் அணியின் சார்பில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பூரணகும்பங்களை ஏந்தி நின்று ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

சைதை பிரசாரத்தை டித்துக் கொண்டு ஆலந்தூர், தாம்பரம், திருப்போரூர்,மதுராந்தகம், அச்சரபாக்கம், செஞ்சி, திண்டிவனம், கண்டமங்கலம் ஆகியதொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைஆதரித்துப் பிரசாரம் செய்தார்.

நிறைவாக விழுப்புரத்தில் தனது முதல் நாள் பிரசாரத்தை பொதுக் கூட்டத்துடன்முடித்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா நன்று பேசிய இடங்களில் எல்லாம் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்ததொண்டர்கள் பெருமளவில் திரண்டு ஜெயலலிதாவுக்கு உற்சாகம் கொடுத்தனர்.

வழியெங்கும் இருமருங்கிலும் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

இரவு 10.30 மணிக்கு ஜெயலலிதா திண்டிவனம் வந்து சேர்ந்தார். 10 மணிக்குப் பிறகுமைக் மூலம் பிரசாரம் செய்யக் கூடாது என்பதால் சைகை காட்டி பிரசாரம் செய்தார்ஜெயலலிதா.

இரண்டு விரல்களைக் காட்டி இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் இரவு 10.40 மணிக்கு மண்டியம்பாக்கம் கூட்டுறவுசர்க்கரை ஆலை விருந்தினர் விடுதிக்குச் சென்று தங்கினார்.

வேனில் உட்கார்ந்தடியே அவர் பிரச்சாரம் செய்தார். அட்டைகளில் எழுதி வைத்துக்கொண்டு ஒரு இடத்தில் பேசியதையே திரும்பத் திரும்ப எல்லா இடத்திலும்பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X