For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் இன்பாவுக்கு உயர்நீதிமன்றம் "சூடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெண் பஞ்சாயத்து தலைவரை அதிகார வரம்பை மீறி நீக்கிய தமிழக அமைச்சர்இன்பத் தமிழனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தவர்சீனியம்மாள். இவர் மீது பஞ்சாயத்துக் கூட்டத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்கொண்டு வரப்பட்டு பின்னர் அவர் நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்டவருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்திருந்தார்.

இந்த நீக்கத்தை எதிர்த்து சீனியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமானஇன்பத் தமிழன் கடந்த 2001ம் ஆண்டு முதல் என் மீது துவேஷத்துடன் செயல்பட்டுவந்தார்.

தான் கூறும் ஆட்களுக்கே பஞ்சாயத்து யூனியன் ஒப்பந்தங்களைத் தர வேண்டும் எனவற்புறுத்தினார். அதற்கு நான் மறுக்கவே என்னைப் பழிவாங்கும் விதமாகஉறுப்பினர்களைத் தூண்டி விட்டு என் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரச் செய்தார். இதைத் தொடர்ந்து நான் பதவி நீக்கம் செய்யப்பட்டேன்.

அமைச்சர் இன்பத் தமிழனின் தூண்டுதலின்பேரிலேயே எனது பதவிபறிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்றுகோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தர்மாராவ், அமைச்சர் இன்பத் தமிழன் அதிகாரவரம்பை மீறி, ஜனநாயக நெறிறைகளை சீர்குலைக்கும் விதமாகசெயல்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது, அமைச்சர் இன்பத் தமிழனின்செயல்பாடுகள் சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமாக அவர்செயல்பட்டுள்ளார். சீனியம்மாளை பதவியிலிருந்து நீக்கியது செல்லாது. இந்தவிவகாரத்தில் அமைச்சர் இன்பத் தமிழன் தலையீடு அதிக அளவில் இருந்திருப்பதுஆவணங்களைப் பரிசீலித்துப் பார்க்கையில் தெளிவாகத் தெரிகிறது.

அவர்தான் உறுப்பினர்களைத் தூண்டி, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரச்செய்து, பின்னர் அதன் அடிப்படையில் கோட்டாட்சியர் பதவி நீக்கம் செய்துஉத்தரவிட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, பொறுப்பான அமைச்சர் பதவியில் உள்ளஒருவர் இதுபோல செயல்படுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது, அனுமதிக்கவும்கூடாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படடவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குரியமரியாதையை அளித்தே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாககுறிப்பிட்டுள்ளது.

ஆனால் பொதுமக்கள் தேர்ந்தெடுத்த பஞ்சாயத்து யூனியன் தலைவருக்கு அநீதிஇழைக்கப்பட்டுள்ளது, அவரது மரியாதைக்கு பங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது என்றுதீர்ப்பில் நீதிபதி தர்மாராவ் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X