For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவுக்கு சிம்ரன், விந்தியா ஆதரவு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் சிம்ரன் தனது கணவர், குழந்தையுடன் சந்தித்துஅதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னர் ஏராளமான நடிகர், நடிகைகள்ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தனர்.

பலர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். முரளி, விஜயக்குமார், காமெடி செந்தில்,இயக்குனர் மனோபாலா என ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர். இவர்களில்செந்தில் தேர்தலில் சீட் கேட்டு மனுவும் கொடுத்தார். ஆனால் அம்மா அவருக்குகருணை காட்டவில்லை.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னாள் கனவுக் கன்னி சிம்ரன் தனது கணவர்தீபக் பாகா மற்றும் குழந்தையுடன் ஜெயலலிதாவை சந்தித்தார்.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர்ஜெயலலிதா விழுப்புரத்திலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கும் முன்பாக நடிகைசிம்ரன், அவரது கணவர் தீபக், நடிகை விந்தியா, டான்ஸ் மாஸ்டர்கள் கிரிஜா, அவரதுகணவர் ரகுராம், தாரா, டி.வி.அந்தோணி ஆகியோர் சந்தித்தனர்.

வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.அதனை முதல்வர் ஏற்றுக்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை சிம்ரன் அதிமுகவுக்காக தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.இதேபோல நடிகை விந்தியாவும் அதிமுக மேடைகளை கலக்குவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X