For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5ம் தேதி காங்கிரஸ், 6ல் இ.கம்யூ பட்டியல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை - ஸ்ரீவில்லிபுத்தூர்:

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வரும் 5ம் தேதி வெளியிடப்படுகிறது.

அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 6ம் தேதிவெளியிடப்படும் என அக் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழுஉறுப்பினருமான நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள இந்த இரு முக்கிய கட்சிகள் மட்டுமே வேட்பாளர்பட்டியலை வெளியிட வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் பட்டியல் டெல்லியில் இறுதி செய்யப்பட்டு வருகிறது. வாசன் கோஷ்டிக்குஅதிக சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவரைத் தவிர இளங்கோவன், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, குமரிஅனந்தன் உள்ளிட்ட பிற கோஷ்டிகளுக்கு பலத்தைப் பொறுத்து 1 முதல் 5 சீட்கள்வரை ஒதுக்கப்பட்டுள்ளன. 5ம் தேதி இந்தப் பட்டியல் வெளியாகிறது.

அதே போல 10 இடங்களில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டியல்6ம் தேதி வெளியாகிறது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், 6ம்தேதி திருச்சியில் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.அதில் அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அந்தக் கூட்டத்தின் முடிவில், தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் ஆகியவைவெளியிடப்படும்.

தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும்வகையில் அறிவிப்புகள் இடம்பெறும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X