For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் மதமாற்ற தடை சட்டம், பள்ளிகளில் இந்தி: பாஜக தேர்தல் அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மீண்டும்கொண்டு வரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் அதன் தேர்தல்அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. கட்சித்தலைவர் ராதாகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட மாஜி மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் அதைப் பெற்றுக் கொண்டார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

- இந்து ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மத தலைவர்கள், ஆன்மீகசான்றோர்கள், துறவியர்கள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

- ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் கோவில் சொத்துக்களை மீட்க மாவட்டம்தோறும்சிறப்பு நீதிமன்றங்கள்.

- அனைத்துக் கோவில்களுக்கும் ஒரு கால பூஜைத் திட்டம் விஸ்தரிக்கப்படும்.

- அனைத்துக் கோவில்களிலும் சமய வழிபாட்டு வகுப்புகள்.

- கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

- மதம் மாறிய தலித் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படாது.

- ராமேஸ்வரம் புனித தீவாக அறிவிக்கப்படும்.

- தஞ்சை பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள ராஜராஜன் சிலை கோவிலுக்குஉள்ளே வைக்கப்படும்.

- சென்னை கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டு அருங்காட்சியகத்திற்கு உள்ளேவைக்கப்பட்டுள்ள கண்ணகி சிலை மக்கள் தரிசிக்கும் வகையில் பொது இடத்தில்வைக்கப்படும்.

- மாவட்டம்தோறும் பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

- பள்ளிகளில், தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் விருப்பப் பாடமாகவைக்கப்படும்.

- சிறுபான்மையினர் மட்டும் பெற்று வந்த சிறப்புச் சலுகைகள் அனைத்துக் கல்விநிறுவனங்களுக்கும் விஸ்தரிக்கப்படும்.

- வேலை வாய்ப்பு, கல்வித்துறை ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோர்சமூகத்தினருக்கு 69சதவீத இட ஒதுக்கீடு.

- காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை விரைவில் பெற நடவடிக்கை.

- முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக தேக்கி வைக்கநடவடிக்கை.

- தமிழகத்தில் உள்ள முக்கிய நதிகளை இணைப்பதுடன், தென்னிந்திய நதிகளையும்இணைக்க நடவடிக்கை.

- தமிழக மீனவர் நலன் காக்க கச்சத்தீவை மீண்டும் மீட்க நடவடிக்கை.

- இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண சமஷ்டி முறையிலான தீர்வுஅமைந்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

- தென்னையிலிருந்து கள் இறக்க அனுமதி.

- 2,000 மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ரேஷன் கடைகள் என்றுதேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X