• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சத்தியமூர்த்தி பவனில் கலாட்டா ஆரம்பம்!

By Staff
|

சென்னை:

சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்துள்ள பல்வேறுகோஷ்டிகளைச் சேர்ந்த காங்கிரஸார் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில்அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோஷ்டிப் பூசலுக்கு பெயர் போன காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்சென்னையில் தயாராகவில்லை. இங்கு தயார் செய்யப்பட்டால் ரத்தக்களறி நிச்சயம்என்பதால், டெல்லியில் வைத்து அந்தத் தேர்வு நடந்தது.

எப்படியும் பட்டியலில் இடம் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பலகாங்கிரஸ் கோஷ்டிகள் ரன் வட்டிக்கு பணம் வாங்கிக் கொண்டு ரயிலிலும்பிளேனிலுமாக டெல்லிக்குச் சென்றன.

காங்கிரஸ் பட்டியல் தயாரான கட்டடத்தின் வெளியே மூட்டை முடிச்சுகளுடன்உட்கார்ந்து கொண்டு வேர்கடலையும், சுக்கு காப்பியும் குடித்தபடி பொழுதைக்கழித்தன. கூடவே அலுவலகத்துக்கு அவரும் காங்கிரஸ் தலைவர்களின் கார்களைப்பார்த்து கும்பிடுவது, சும்மா வேடிக்கை பார்ப்பது, ரொம்ப டயர்டாக இருந்தால்அப்படியே மர நிழலில் சாய்ந்து தூங்குவது என்று காலத்தை ஓட்டினர்.

இதில் பல கோஷ்டிகள் டெல்லியில் நெடுநேரம் பழகியதால் ரொம்பநெருக்கமாகிவிட்டனவாம். இவர்கள் டெல்லிக்கு காவடி எடுத்தாலும் கட்சியின்பெருந் தலைகள் தங்கள் பலத்துக்கு ஏற்ற தொகுதிகளை வாங்கிக் கொண்டு வேண்டியவேட்பாளர்களை போட்டும் விட்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மகன் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத்திற்குசெய்யாறு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. குமரி ஆனந்தனின் தம்பியும், தமிழககாங்கிரஸ் வர்தக பிரிவு செயலாளருமான வசந்த குமாருக்கு நாங்குநேரி தொகுதிஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரசில் பலமுறை எம்பி எம்எல்ஏக்களாக இருந்தவர்களும் சீட்வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் வேலூர் தொகுதியில் ஞானசேகரனுக்கும்,தொண்டமுத்தூர் தொகுதி எஸ்ஆர் பாலசுப்பிரமணியதற்திற்கும், பீட்டர்அல்போன்சுக்கு கடையநல்லூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வாசனின் தீவிர ஆதரவாளர்களான ராயபுரம் மனோவுக்கும் விடியல் சேகருக்கும் சீட்கிடைத்துள்ளது.

வள்ளல் பெருமாள், போளூர் வரதன், பாரமலை, வேல்துரை, விருதுநகர் தாமோதரன்போன்ற பழம் பெரும் ஆட்களுக்கும் சீட் கிடைத்துள்ளது.

பட்டியலில் டாக்டர் காயத்திரி தேவி, யாசோதா, மகேஸ்வரி, ராணி வெங்கடேசன்ஆகியோர் பெண்கள்.

தற்போது வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்களில் 50 சதவீதததிற்கும்அதிகமானோர் வாசனின் தீவிர ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது.

பட்டியலில் பெயரை எதிர்பார்த்து ஏமாந்து போன கோஷ்டிகளின் தொண்டர்கள் இன்றுசென்னை சத்தியமூர்த்தி பவனில் கூடினர்.

வாசன் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய இருவரும் ரகசிய ஒப்பந்தம்செய்து கொண்டு தங்களது ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட் வாங்கிக் கொடுத்துவிட்டனர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து காங்கிரஸில்இணைந்தவர்களுக்குத்தான் அதிக அளவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது என்றுஅவர்கள் கோஷமிட்டனர்.

வாசன், இளங்கோவன் ஆதரவு வேட்பாளர்களை வாபஸ் பெற்று அனைத்துப்பிரிவினருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். ஒவ்வொரு கோஷ்டியாக வந்து ஆர்ப்பாட்டம் செய்ததால் சத்தியமூர்த்திபவனில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஆனால் கடந்த முறையைப் போல வன்முறைச் சம்பவம் ஏதும் நடைபெறவில்லை.

கடந்த முறை வீரப்ப மொய்லிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வந்து, போலீஸ் உதவியுடன்கலாட்டா செய்து, ராயபுரம் மனோ கோஷ்டியிடம் அடி, உதை வாங்கிய செல்லக்குமார்கோஷ்டி இன்று அந்தப் பக்கவே வரவில்லை.

தனது எதிர்ப்பாளர்களை ட்யூப் லைட், உருட்டுக் கட்டைகளள் விரட்டி விரட்டி அடித்தமனோவை வேட்பாளர் பட்டியலில் திணிக்க வாசனும் வீரப்ப மொய்லியும் தீவிரஆர்வம் காட்டினார்களாம்.

இப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் ராயபுரம் மனோ. அடிஉதவுவது மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க என்ற பழமொழி மனோவுக்குகச்சிதமாகப் பொறுந்தும்.

அது எப்டீங்க ரெடியா டியூப் லைட், கட்டைகள், ஆட்களுடன் தயாராக இருந்தீங்கஎன்று மனோவின் ஆட்களிடம் கேட்டால்,

கட்சி அலுவலகத்தில் அதிமுக, உளவுப் பிரிவு, தமிழக போலீஸ் தூண்டுதலோடுசெல்லக்குமார் ஆட்கள் கலாட்டா செய்யப் போகிறார்கள் என்பதை மத்திய அரசின்கட்டுப்பாட்டில் உள்ள இன்டெலிஜென்ஸ் பீரோ மோப்பம் பிடித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தந்துவிட்டது. ஐ.பி. கொடுத்த அந்த வார்னிங்கை டெல்லியில்இருந்து வாசனுக்கும் கிருஷ்ணசாமிக்கும் அனுப்பி வைத்தார்கள்.

இதன் பின்னரே மனோவை ரெடியாகச் சொன்னார் வாசன். இதையடுத்தே நாங்கள்எங்களை தயார் செய்து கொண்டு காத்திருந்தோம். வந்து நல்லா வாங்கிட்டுபோனானுக என்கின்றனர்.

எப்பா,.. திரைக்குப் பின்னால் என்னென்ன நடக்குது...

Mail this to a friend  Post your feedback  Print this page 

INDIA NEWS

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X