• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீயெல்லாம் ஆம்பளையா? வைகோவுக்கு தயாநிதி மெட்ராஸ் பாஷையில் டோஸ்!

By Staff
|

சென்னை:

வைகோவே, நீ சரியான ஆம்பளையாக இருந்தால், என்னை ஏன் 19 மாதம் பொடாசட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தாய் என்று ஜெயலலிதாவிடம் கேள், பார்க்கலாம்..உனக்கு அதற்கு தைரியம் இருக்கா என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்சென்னையில் நடந்த திமுக கூட்டணி பிரசாரக் கூட்டத்தில் மெட்ராஸ் பாஷையில் படுஹாட்டாக பேசினார்.

சட்டசபைத் தேர்தல் அரசியல் மேடைகள் நாறத் தொடங்கியுள்ளன. ஒருவரை ஒருவர்ஒருமையில், பேசிக் கொள்ளும் தமிழக கீழ்மட்ட அரசியல் மேடைப் பேச்சாளர்களின்பாணி, பிரபல தலைவர்களிடமும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

இதை ஆரம்பித்தது வைத்தது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தான் என்பது தான்வேதனையான விஷயம்.

தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறனுக்கு மதுரை மேடையில்வைகோ பதிலளிக்கையில்,

ஏய் பைத்தியக்காரா, யாரைப் பார்த்து மன்னிப்பு கேட்கச் சொல்கிறாய்? நீ சரியானஆண்மகனாக இருந்தால் வழக்குப் போட்டுப் பார், உன்னை கோர்ட்டில் சந்திக்கிறேன்,உன்னை கூண்டில் ஏற்றுவேன். நானே வந்து வாதாடுவேன், உன்னை குறுக்குவிசாரணை செய்வேன் என்று பேசினார்.

வைகோவுக்கு இப்போது தயாநிதி மாறன் சென்னை மேடையில் பதிலளித்துள்ளார்.அதுவும் எப்படி? மெட்ராஸ் பாஷையில்.

ஏய், வைகோ (இப்படித்தான் தயாநிதி மாறன் ஆரம்பித்தார்!) உனக்கு மட்டும்தான்பேசத் தெரியுமா? எங்களுக்குப் பேசத் தெரியாதா? நீ சரியான ஆம்பளையாகஇருந்தால், மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால், ஜெயலலிதாவுடன் ஒரேமேடையில் பேசும்போது,

என்னை ஏன் 19 மாதம் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் வைத்தாய் என்று கேள்பார்க்கலாம்.

உன்னோட சவாலை ஏற்கிறேன். எங்கே வேண்டுமானாலும் உன்னை சந்திக்கத் தயார்,தெரு முனையில் சந்திக்கலாமா? நான் ரெடி!.

வைகோ, உனுக்கு மர்ந்து (மறந்து) போச்சா? உன்னோட உறவினர் மகன்அமெரிக்காவில் இறந்தபோது, அவரோட பாடியை அந்த அமெரிக்க நிறுவனத்தின்செலவிலேயே இங்கே கொண்டு வர உதவினேனே?

மர்ந்து போச்சாப்பா உனுக்கு? அப்ப தெரியாதா, இந்த தயாநிதி மாறன் யார்னு?

(பின்னர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு) மத்திய அமைச்சர் பதவி குறித்துபேச்சு வந்தபோது, 2 அமைச்சர் பதவி வேண்டுமானால் தயாநிதி மாறனிடம் சொல்லி,சோனியாவிடம் கூறி வாங்கித் தருவதாக வைகோவிடம் தலைவர் கலைஞர் கூறினார்.

செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோருக்கு பதவி வாங்கித் தரலாம் என்றுகலைஞர் கூறியபோது, செஞ்சி ராமச்சந்திரன் நிறைய சம்பாதித்து விட்டார்.எல்.கணேசனுக்கு ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியும். அவர் அமைச்சரானால்கட்சியின் தலைவராகி விடுவார் என்று கூறி மறுத்து விட்டார் வைகோ.

இப்போது மதிமுகவையும் கணக்கு காட்டி அமைச்சர் பதவியை திமுக வாங்கி விட்டதுஎன்று அவதூறாகப் பேசி வருகிறார். இப்படிப் பேசுவதை அவர் நிறுத்தாவிட்டால்நாங்களும் பதிலுக்குப் பதில் பேசுவோம், பதிலடி கொடுப்போம்.

வைகோ என்ன பாஷையில் பேசுகிறாரோ அதே பாஷையில் எங்கள் பதிலும்இருக்கும்.. ஜாக்கிரதை என்றார் தயாநிதி மாறன்.

தயாநிதி மாறனின் பேச்சை கூடியிருந்த தொண்டர்கள் வெகுவாக ரசித்து கைதட்டினர்.ஆனால் தயாநிதியின் தாத்தா கருணாநிதி மட்டும் அதை ரசிக்கவில்லை.

தயாநிதிக்கு கருணாநிதி அறிவுரை:

கருணாநிதி தனது பேச்சின்போது தயாநிதி மாறனுக்கு இதுபோல பேசக் கூடாது என்று அறிவுரை கூறினார். அவர் கூறுகையில், ஒரு மத்திய மந்திரி இப்படிகோபமாக பேசக்கூடாது, கோபம் வராவிட்டால் இளமைக்கு அர்த்தம் இல்லை. தயாநிதி மாறனின் வாலிப துடிப்பு எனக்கு புரியும். ஆனால் இப்படிபட்ட தாக்குதல்களை எல்லாம் தாங்கி பழக்கப்பட வேண்டும்.

அதற்காகத்தான் பெரியார் வளர்த்த இயக்கத்தில், அண்ணாவால் பயிற்சியளிக்கப்பட்ட இயக்கத்தில் நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைசுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் இப்படியெல்லாம் பேசக் கூடாது. இது பேரனுக்கு தாத்தா தரும் அட்வைஸ் என்றார்.

அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியனும், தயாநிதியின் பேச்சைக் கண்டித்தார்.

வைகோவையும் திமுகவையும் மோதவிட்டு, தன் மீது திமுகவின் அம்பு பாயாமல் தப்பித்துக் கொண்டு, குளிர் காய்ந்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதாஎன்பது இங்கு மிகவும் குறிப்பிட வேண்டிய விஷயம்.

இதனால் தான் வைகோவை கூட்டணிக்குள்ளேயே இழுத்துப் போட்டாரோ என்ற சந்தேகம் திமுக தலைவர்களிடம் எழ ஆரம்பித்துள்ளது. இதை திமுகதலைவர்களுடன் நாம் பேசும் பேசும் புரிந்து கொள்ள முடிந்தது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

INDIA NEWS

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X