ஸ்டாலின் பிரச்சாரம் நாளை துவக்கம்
சென்னை:
திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின் நாளை (ஏப்ரல் 6) துவங்கி மே 6ம் தேதிவரை ஒரு மாதம் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
அதிமுக கூட்டணியில் ஜெயலலிதாவும், வைகோவும் பிரச்சாரத்தை துவங்கிஎதிர்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.எதிர் முகாமில் வைகோ கேட்கும் கேள்விகளுக்கு இதுவரை தொலைக்காட்சியில்பதிலதித்து வந்த திமுக இனி மேடைகளில் பதிலளிக்க துவங்கியிருக்கிறது.
நேற்று சென்னை புரசைவாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலர் டிவிக்குகருணாநிதி விளக்கம் அளித்தார். ஏப்ரல் 9ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தேர்தல்பிரச்சாரத்தை துவக்குவதாக அறிவித்துள்ளார்.
இந் நிலையில் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை இன்று துவங்குகிறார். இன்று துவங்கிமே 6ம் தேதி வரை தமிழக மாவட்டங்களுக்கும் சென்னைக்கும் பறக்கும் வகையில்அவரது பிரச்சார பயணம் வகுக்கப்பட்டுள்ளது.
பிரச்சார விவரம்:
இன்று ஆயிரம் விளக்கில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
ஏப்ரல் 7- திருவள்ளூர்
ஏப்ரல் 9- சேப்பாக்கம்
ஏப்ரல் 10- பொன்னேரி பொதுக் கூட்டம்
ஏப்ரல் 11- ஆயிரம் விளக்கு
ஏப்ரல் 12- கன்னியகுமரி
ஏப்ரல் 13- தூத்துக்குடி
ஏப்ரல் 14- திருநெல்வேலி
ஏப்ரல் 15- விருதுநகர்
ஏப்ரல் 16,17,18- ஆயிரம் விளக்கு தொகுதி
ஏப்ரல் 19- திருவாரூர், நாகப்பட்டிணம்
ஏப்ரல் 20- திருச்சி
ஏப்ரல் 21,22- ஆயிரம் விளக்கு
ஏப்ரல் 23- வேலூர்
ஏப்ரல் 24- ஆயிரம் விளக்கு
ஏப்ரல் 25- நீலகிரி
ஏப்ரல் 26- கோவை
ஏப்ரல் 27- ஈரோடு
ஏப்ரல் 28- நாமக்கல்
ஏப்ரல் 29- கரூர்
ஏப்ரல் 30, மே 1- ஆயிரம் விளக்கு
மே 2- சிவகங்கை
மே 3- காஞ்சிபுரம்
மே 4- புதுச்சேரி
மே 5,6- ஆயிரம் விளக்கு தொகுதி
தான் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் மட்டும் மொத்தம் 11 நாட்களுக்குஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார்.
INDIA NEWS |