• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நம்பிக்கை இழக்கும் அதிமுக-ஸ்டார்களுக்கு வலை

By Staff
|

சென்னை:

சட்டசபைத் தேர்தல் களம் களை கட்டத் தொடங்கி விட்ட நிலையில் அதிமுக தரப்பில்நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவதை கண்கூடாகவே பார்க்கமுடிகிறது.

முன்பெல்லாம் முதல்வர் ஜெயலலிதா போகும் பகுதியில் எல்லாம் ஓட்டு விழுகிறதோஇல்லையோ பெரும் கூட்டம் கூடும். ஆனால், இந்த முறை அது மிஸ்ஸிங்.

இன்று 7வது நாள் பிரச்சாரத்தில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த 4நாட்களாகவே அவர் பயனிக்கும் இடங்களில் வழக்கமாகக் கூடும் கூட்டம் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு வந்த கூட்டம் கூட இப்போது இல்லை. இதைஉளவுத்துறை மோப்பம் பிடித்து ஜெயலலிதாவுக்கு சொல்லிக் கொண்டிருப்பதாகத்தெரிகிறது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தை கவனிக்கும் செங்கோட்டையனில்ஆரம்பித்து அந்தந்தப் பகுதி அதிமுக நிர்வாகிகளைப் பிடித்து ஜெயலலிதா டோஸ்விடுவது அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கட்சிக்கு கூட்டம் சேர்க்க நடிகர், நடிகைகள் தான் ஒரே ஆயுதம்என்பதால் அவர்களை கட்சிக்குள் இழுக்கும் வேலையில் அதிமுக மிகத் தீவிரமாகவேஇறங்கியுள்ளது.

தமிழ் தெரியாத சிம்ரன், தமிழ்நாடே சரியாகத் தெரியாக அவரது கணவர் தீபக் பாகாஆகியோரை கட்சிக்குள் இழுக்க வாய்பிழந்த நடிகை காயத்ரியின் தந்தையான டான்ஸ்மாஸ்டர் ரகுராமின் உதவியை நாடியது அதிமுக.

எப்போதுமே ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் ரகுராம் குடும்பத்தினர்விசுக்கென களத்தில் இறங்கி சிம்ரனை கட்சிக்குள் இழுத்து வந்துவிட்டனர்.

எதிலுமே காசு கணக்குப் பார்க்கும் சிம்ரன் அதிமுக பிரச்சாரத்துக்கு வரவும் காசுவிஷயத்தில் கறாராகப் பேசிவிட்டார் என்கிறார்கள்.

ஒரு நாள் பிரச்சாரத்துக்கு, சராசரியாக சுமார் 5 மணி நேரம், ரூ. 1 லட்சம் என்று ரேட்பேசித் தான் சிம்ரனை பிக்ஸ் செய்துள்ளதாம் அதிமுக. இது போக வேன், தங்கல்,சாப்பாடு இத்யாதி எல்லாம் எக்ஸ்ட்ரா. கிட்டத்தட்ட சூட்டிங்குக்குப் போவது மாதிரிபிரச்சாரத்துக்கு வந்து போகப் போகிறார் சிம்ரன்.

தமிழ் சினிமாவில் சுரண்டியது போக இப்போது அதிமுகவிடம் சுரண்டப் போகிறார்சிம்ரனும் அவரது கணவர் பாகாவும். மறந்து போய்க் கூட இந்தியில் பேசிவிடாதீர்கள்(வர்ற ஓட்டும் வராமல் போயிரும்) என்ற எச்சரிக்கையுடன் தான் சிம்ரனைகளமிறக்கிவிட்டுள்ளதாம் அதிமுக.

சிம்ரன் தவிர்த்து ஏற்கனவே அதிமுகவில் உள்ள மாமா எஸ்.எஸ்.சந்திரன்,மாப்பிள்ளைகள் ராதாரவி, பாண்டியன், குண்டு கல்யாணம், நடிகை சி.ஆர்.சரஸ்வதிஎன பழைய முகங்களோடு புதுசாக சேர்ந்துள்ள காமெடி செந்தில், வில்லன்ஆனந்தராஜ், குணச்சித்திர விஜயக்குமார் (இவர் அதிமுகவில் சேர்ந்தது 3வது முறை),பார் எவர் காலேஜ் ஸ்டூடண்ட் முரளி, மனோ பாலா என ஒரு பட்டாளமே அதிமுகமேடைகளை கலக்கி வருகிறது.

கண்டிப்பாக கடலாடி சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஆரம்பத்தில் அதிமுகமேடைகளில் படு வேகமாக பேசி வந்த காமெடியன் செந்தில் இப்போது சீட்கிடைக்காததால் படு அப்செட்.

சுரம் குறைந்து போய், காத்து போன டியூப் மாதிரி சும்மா மேடைகளில் வந்து போய்க்கொண்டிருக்கிறார்.

திமுகவைப் பொருத்தவரை அவர்களது முக்கிய நடிகரான சரத்குமார் இந்த முறைபிரசாரத்திற்கு வர மாட்டார் என்றே தெரிகிறது. தேர்தலுக்குப் பின் மத்தியில் அமைச்சர்பதவி வாங்கித் தருவீர்களா? அப்படியென்றால் பிரச்சாரத்துக்கு வர்றேன் என்று திமுகதலைமையை மிரட்டி வருகிறார்.

அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று திமுக தலைமை கூறிவிட்டதாம்.

அதேசமயம், நடிகர்கள் நெப்போலியன், சந்திரசேகர், ஓவர் சவுண்டு தியாகு,ஹூஹாஹாஹாஹ குமரிமுத்து, புதிதாக சேர்ந்துள்ள பாக்கியராஜ் என திமுகபக்கமும் சில திரைப்படக் கலைஞர்கள் இருக்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவுக்கு தொடையரசி ரம்பா உள்ளிட்டசில நடிகைகள் குரல் கொடுத்தார்கள். ரஜினி வேறு வாய்ஸ் கொடுத்தார். ஆனால், இந்தமுறை அவர்களுக்கு நட்சத்திர பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதுவரைக்கும் யாரும் வாய்சும் தரவில்லை பிரச்சாரத்துக்கு வரவும் தயாரில்லை.

பார்வர்ட் பிளாக், தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகிய கட்சிகளின்தலைவர்களே நடிகர்கள் என்பதால் அவர்களே அந்தக் கட்சிகளுக்கு பெரிய பலம்.

கார்த்திக் கட்சியில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி திணேஷ் புதிதாக சேர்ந்துள்ளார்.இவர்களைத் தவிர பெரிய நடிகர், நடிகைகள் யாரும் இந்தக் கட்சிகளில் இல்லை.

விஜய்காந்த் தனது கட்சியில் தன்னைத் தவிர சினிமாக்காரர் யாரும் இருக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருப்பதால் யாரையும் சேர்க்கவில்லை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

INDIA NEWS

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X