• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

13 வருட கணக்கை முடிக்க வேண்டும்: வைகோ

By Staff
|

சென்னை:

இந்த தேர்தல் ஒரு குருஷேத்திரம். திமுகவிடம் 13 வருட கணக்கை தீர்க்கவேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

தமிழகம் முழுவதும் இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணிகளும் அனல் பறக்கும்பிரச்சாரத்தை துவங்கிவிட்டன.

வைகோ தினசரி தொடுக்கும் கேள்வி கணைகளுக்கு சன் டிவி செய்திகளில் அதிகநேரம் ஒதுக்கி விளக்கம் சொல்லி வருகிறது திமுக. பற்றாக்குறைக்கு நாளெடுகளிலும்விளக்கம் சொல்லி வருகிறது திமுக.

தற்போது அரசியல் மேடைகளில் காவியங்கள் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சில நாட்களுக்கு முன் பரம்பரை எதிரி என ஜெயலலிதா திமுவைகுறிப்பிட்டதற்கு ஆரியமாயை என்ற நூலிலிருந்து கருணாநிதி விளக்கம்அளித்திருந்தார்.

அதன் பின்னர் வைகோவின் சமீபத்திய பிரசாரப் பேச்சுக்களை விமர்சிக்கும் வகையில்யசோதர காவியம் என்ற இலக்கியத்திலிருந்து ஒரு கதையைக் கூறியிருந்தார்கருணாநிதி.

இந் நிலையில் ஸ்ரீரங்கத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ,

ஆடி பதினெட்டாம் பெருக்கில் காவரி கரைபுரண்டு வருவது போல கண்ணுக்குஎட்டிய தூரம் வரை நிற்கும் மக்களாகிய நீங்கள்தான் நீதிபதிகள். நீங்கள் அளிக்கும்தீர்ப்பில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் தொடரும். (புரட்சித் தலைவிஎன்று சொல்வதை வைகோ சில நேரம் தவிர்க்கிறார். இது குறித்து வைகோவிடம்மந்திரி ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியதாகவும் செய்திகள் வருகின்றன)

காவிரியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகளை இழந்து மக்கள் தவித்தனர்.முதல்வர் மின்னல் வேகத்தில் நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். மத்திய அரசோகொடுக்க வேண்டிதை கொடுக்கவில்லை (அப்புறம் ஏன் அந்த அரசை வைகோஆதரிக்கிறா?)

தமிழக அரசு தன்னிடம் இருக்கிற நிதியையும் சேர்த்து நிவாரணம் மற்றும் மீட்டுபணியை செய்தது.

கரிகாலன் கல்லணையை கட்டினான். காவரி கரைகளை பலப்படுத்தினான். அதேபோல முதல்வரும் இந்த திருத்தலத்தையும், மக்களையும் காப்பாற்ற உடனடியாககல்லணையை பலப்படுத்த நிதி ஒதுக்கினார்.

ஒரு சீட்டு கூடுதலாக கொடுத்திருந்திருந்தால் வைகோ சென்றிருக்கமாட்டான் என்றுவருத்தப்பட்டார்களாம் திமுகவினர். அதற்கு மாகாபாரதம் கதையைநினைவூட்டினீர்கள். நானும் அதே மகாபாரதத்தையே கூறுகிறேன்.

பாண்டவர்களுக்காக கண்ணன் துரியோதனிடம் முறையிட்டான். 5கிராமங்களையாவது கொடு என்றான். அதற்கு துரியோதனன் முடியாது என்றான். 5வீடுகளையாவது கொடு என்றான் கண்ணன். அதற்கும் முடியாது என்றே கூறினான்.

நிமிர்ந்து பார்தான் கண்ணன், அன்று தொடங்கியது குருஷேத்ரம். உங்கள் வாக்குப்படிஇதுவும் ஒரு குருஷேத்திரம்தான். நாங்கள் 12 வருட கணக்கை தீர்க்க வேண்டியுள்ளது.

தயாநிதி மாறனுக்கு திமுகவில் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறதுஎன்பதற்கு கருணாநிதியால் விளக்கமளிக்க முடியுமா?. அரசியல் சந்தர்ப்பவாதம்பற்றிப் பேச கருணாநிதிக்கு எந்த அருகதையும் கிடையாது.

மிசா கொடுமையைத் தந்த இந்திரா காந்தியுடன் திமுக கைகோர்க்கவில்லையா? அதுசந்தர்ப்பவாதம் இல்லையா?

அதிமுகவும், மதிமுகவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் போல் உள்ள அரசியல்கூட்டு. எனவே தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அந்தந்த தொகுதிகளில்தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார் வைகோ.

சங்கொலி ஆசிரியர் ராஜினாமா:

இதற்கிடையே மதிமுகவின் அதிகாரப்பூர்வ தினசரியான சங்கொலியின் பொறுப்பாசிரியரான திருநாவுக்கரசு அந்தப் பணியில் இருந்து விலகிக் கொண்டுவிட்டார்.

கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசுவிடம் இனிமேல் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக தினமும் காட்டமாக கட்டி கட்டி எழுதவேண்டும் என்று வைகோ கூறினாராம். ஆனால், அதை திருநாவுக்கரசு ஏற்க மறுத்துவிட்டு பணியை ராஜினாமா செய்துவிட்டார் என்கிறார்கள்.

திருச்சியில் ஒரு வித்தியாச காட்சி:

வைகோவும் திமுகவும் இவ்வாறு நேரடியாக கடும் மோதலில் குதித்திருந்தாலும் திருச்சியில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான காட்சியைக் காணமுடிந்தது.

திருச்சி -1 தொகுதிக்கான திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்பில் பெரியசாமி, சில நாட்களுக்கு முன் தன்னை எதிர்த்து மதிமுக சார்பில்போட்டியிடும் மலர் மன்னனை சந்தித்திருக்கிறார்.

அப்போது மலர்மன்னனுக்கு சால்வையைப் போர்த்திய பெரியசாமி, அண்ணே உங்களை எதிர்த்த நிற்பேன்னு கனவுல கூட நினைச்சதில்லை.. என்னை ஆசிர்வாதம்பண்ணுங்க என்றாராம். இதையடுத்து அவரை வாழ்த்தி அனுப்பியிருக்கிறார் மலர்மன்னன்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

INDIA NEWS

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X