For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விருதாசலத்தில் இன்று விஜய்காந்த் கட்சி தேர்தல் அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை தான் போட்டியிடும் விருத்தாச்சலம்தொகுதியில் இன்று விஜயகாந்த் வெளியிடுகிறார்.

சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. தனித்துப்போட்டியிடுகிறது.

விஜயகாந்த் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.வன்னியர்களின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கடலூர் தொகுதியில் மிகவும்துணிச்சலாக களமிறங்கியுள்ளார் விஜயகாந்த்.

வன்னியர்கள் தொகுதி என்றாலும் கூட தெலுங்கு பேசும் ரெட்டியார், நாயுடுசமூகத்தினரும் இங்கு கணிசமான அளவில் உள்ளனர். விஜய்காந்தின் மனைவிபிரேமலதா இங்கு தங்கி இருந்து பிரச்சாரம் செய்ய வசதியாக ரெட்டியார் இன பஸ்ஓனர் ஒருவர் தனது பங்களாவை வழங்கியுள்ளார்.

இந் நிலையில் குக்கிராமங்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் இன்று தனது கட்சியின்தேர்தல் அறிக்கையை விஜயகாந்த் வெளியிடவுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளவிஜயகாந்த், பிரசாரத்தின் ஒரு பகுதியாக தேர்தல் அறிக்கையையும் வெளியிடுகிறார்.கட்சி அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ராமு வசந்தன்உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

கடைசி வேட்பாளர் பட்டியல் வெளீயீடு:

இதற்கிடையே தேமுதிகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியலை அதன் தலைவர்விஜயகாந்த் வெளியிட்டார்.

234 தொகுதியிலும் போட்டியிடும் ஒரு கட்சி விஜயகாந்த்தின் தேமுதிகதான். அக்கட்சிமுதற்கட்டமாக 140 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது.அதில் விஜயகாந்த விருத்தாச்சலத்தில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

இரண்டாவது வெளியிட்ட 77 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலில் கேப்டன் மச்சான்சதீஷ் குடியாத்த்தில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

இந் நிலையில் 17 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. 234 வேட்பாளர்களில் 22 பெண் வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர்.

தேமுதிக வேட்பாளர்கள் விபரம்:

திருவல்லிக்கேணி- சிவக்குமார்

கும்மிடிப்பூண்டி- சேகர்

பூந்தமல்லி- சந்திரசேகர்

வந்தவாசி- சிவசண்முகம்

குறிஞ்சிப்பாடி-சுந்தரமூர்த்தி

திருப்பூர்-பழனிச்சாமி

ஜெயங்கொண்டம்- கவியரசன்

அறந்தாங்கி-முகமது அலி ஜின்னா

முதுகுளத்தூர்-சிவா

பரமக்குடி- திருமாமலைராஜா

திருப்புத்தூர்- மருது அழகுராஜ்

அருப்புக்கோட்டை- நமச்சிவாயம்

திருநெல்வேலி- கிருஷ்ணகுமார்

பாளையங்கோட்டை- கலீல் ரஹ்மான்

நாங்குநேரி- சண்முகசுந்தரம்

பத்மாநாபபுரம்- செல்வின்

கிள்ளியூர்- ரிச்மோகன்ராஜ்

விருத்தாச்சல ரகசியம்?:

5ம் எண் ராசியின் காரணமாகத்தான் தலைவர் விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிகிறார் என தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.

முதலில் அருப்புக்கோட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. பிறகு தனது சொந்த மாவட்டமான மதுரை நகர்பகுதியில் ஏதாவது தொகுதியில் போட்டியிடுவார் எனவும் கூறப்பட்டது.

ஆனால் யாருமே எதிர்பார்காத வகையில் விருத்தாச்சலத்தில் போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்தார்.

விஜயகாந்தின் ராசி எண் ஐந்தாம். விருத்தாச்சலம் விருத்தீஸ்வரர் கோயிலில் உள்ள கோபுரங்களின் எண்ணிக்கை 5, அந்த கோயிலின் கொடி மரம் 5, நந்தி 5,தேர் 5, பிரகாரம் 5, தீர்தம் 5, காவல் தெய்வம் 5 என எல்லாமே விஜயகாந்திற்கு ராசியாக அமைந்துள்ளதாம்.

அது மட்டுமல்ல, விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தது செப்டம்பர் 14ல் (கூட்டுத் தொகை 5), முதலில் வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 140.(கூட்டுத் தொகை 5)

"அம்மாவுக்கு ராசி எண் 9 (சில நேரம் 6ம் வந்து போகும்). அந்த வகையில் விஜய்காந்துக்கு 5.

மனு தாக்கல் ஏப்ரல் 14ம் தேதியா கேப்டன்?

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X