For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தப்பியோடிய கைதி சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

விக்கிரவாண்டி அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பி சென்ற கைதி போலீஸ்காரர்துப்பாகியால் சுட்டுக் கொன்றார். மற்றொரு கைதியை போலீசார் வளைத்து பிடித்தனர்.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் ரங்கநாதன்(45). வழிப்பறிகளில் ஈடுபட்டுவந்த இவருக்கு கூட்டாளியாக இருந்தவர் மதுரையை சேர்ந்த புல்லட் நாகராஜ்(43).

இவர்கள் மீது சென்னை அண்ணாநகர், வடபழனி, கோயம்பேடு, மாம்பழம், மற்றும்சேல்ம் உட்பட தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கைதிகள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்மீதான வழக்கு சென்னை கோர்ட்டுகளில் நடந்து வருகிறது. இந்த வழக்குவிசாரணைக்காக கைதிகள் இருவரையும் போலீஸ்காரர்கள் சிவசங்கரன், முருகவேல்ஆகியோர் ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

வழக்கு விசாரணை முடிந்து, அவர்களை சேலத்திற்கு பஸ்சில் போலீஸார் திரும்பஅழைத்து சென்றனர். விக்கிரவாண்டி அருகே பஸ் நின்றதும், ரங்கநாதன் சிறுநீர்கழிக்க வேண்டும் என கூறினார். போலீஸ்காரர் சிவசங்கரன், ரங்கநாதனுக்குஅணிவிக்கப்பட்டிருந்த கைவிலங்கை அவிழ்த்து விட்டு உடன் சென்றார்.

இருட்டுக்குள் நுழைந்ததும் ரங்கநாதன் தப்பி ஒடி ஆரம்பித்தார். இதை எதிர்பாராதசிவசங்கரன் கூச்சல் போடவும் பஸ்சில் இருந்த மற்ற போலீசாரும், ரங்கநாதனைதுரத்த ஆரம்பித்தினர்.

இதைப் பார்த்த புல்லட் நாகராஜனும் தன் பங்குங்கு தப்பி ஒடினான். இருவரும் ஒரேதிசையில் ஒடவே போலீசார் அவர்களை துரத்திச் சென்றனர். இதையடுத்து கைதிகள்இருவரும் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து போலீஸ்காரர் சிவசங்கரன் தனது துப்பாகியால் கைதிகளை நோக்கிசுட்டார். இதில் ரங்கநாதன் மேல் குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே ரங்கநாதன்இறந்தார்.

இதையடுத்து புல்லட் நாகராஜனும் நின்றுவிட்டான். போலீசார் அவனைப் பிடித்தனர்.

சம்பவம் தொடர்பாக உடனடியாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல்கொடுக்கப்பட்டது. இறந்த ரங்கநாதன் உடலை விக்கிரவாண்டி போலீஸசார் பிரேதபரிரிசோதனைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

காயமடைந்த போலீஸ்காரர் சிவராமன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.விழுப்புரம் எஸ்பி பெரியய்யா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X