• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக தரத்தில் புதிய சென்னை-ஊழல் அதிகாரிகள் சொத்து முடக்கம்: விஜய்காந்த் தேர்தல் அறிக்கை

By Staff
|

விருத்தாச்சலம்:

உலகத் தரததில் புதிய சென்னை நகரம் நிர்மாணிக்கப்படும், கிராமங்களுக்கும் லாரிகள்மூலம் குடிநீர் வினியோகம், ஏழைகளுக்கு மாதந்தோறும் 15 கிலோ இலவச அரிசி,மாணவ, மாணவியருக்கு இலவச ரயில் மற்றும்

பஸ் பாஸ், ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறுஉறுதிமொழிகள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் விஜயகாந்த் தான்போட்டியிடும் விருத்தாச்சலத்தில் வெளியிட்டார்.

அறிக்கையை அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

- சென்னைக்கு அருகே 40 மைல்களுக்கு அப்பால், உலகத் தரத்திற்கு இணையானநவீன வசதிகளுடன் கூடிய புதிய சென்னை என்ற பெயரில புதிய நகரம்உருவாக்கப்படும்.

- தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை இணைத்து தமிழகத்தை தன்னிறைவுகொண்டதாக மாற்றுவோம்.

- கிராமங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கி எல்லாக் கிராமங்களுக்கும் முதல்ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவின் முதன்மை கிராமங்களாக உருவாக்குவோம்.

- சத்தான, தரமான, சுத்தமான அளவு குறையாத ரேஷன் பொருட்கள் ஒவ்வொருவீட்டிற்கும் வினியோகிக்கப்படும்.

- நீர் நிலை ஆதாரங்களே இல்லாத கிராமங்களுக்கு நகரங்களைப் போல லாரிகள்மூலம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படும்.

- மாவட்டந்தோறும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு அனைத்து வசதிகளும்செய்து தரப்பட்டு பெற்ற தாய், தந்தையரைப் போல முதியோர்கள் பாதுகாக்கப்படுவர்.

- வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை.

- மாவட்டந்தோறும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுவேலையில்லாதோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

- 10 மாவட்டங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்துவசதி ஏற்படுத்தப்பபடும்.

- லஞ்ச, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள், அரசு ஊழியர்களைத் தண்டிப்பதோடுநில்லாமல் அவர்களது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய தனிக் குழுஅமைக்கப்படும்.

- ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

- ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ. 500, அந்தக் குடும்பத் தலைவியின் பெயரில்அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குடும்ப நிதியாக வழங்கப்படும்.

- ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் வகையில் ரூ.10,000 வழங்கப்படும்.

- மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை.

- 3 முதல் 5 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு சத்துணவுடன், பாலும்கல்வியும் வழங்கும் குழந்தைகள் நல மையங்கள்.

- ரயில் மூலம் சென்று படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச ரயில் பாஸ்.

- கல்லூரி வரையில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ்.

- விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன்கள் படிப்படியாக ரத்து செய்ய நடவடிக்கை.

- பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் போன்றவை வீடு தேடி வரும்.

- கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.

- கிராமந்தோறும் கணிப்பொறி மையங்கள்.

- ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சென்னையைப் போல அதிநவீன வசதிகள்கொண்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள்.

- 60 வயது நிரம்பிய கட்டடத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 500 ஓய்வூதியம்.

- திரைப்படத் தொழிலுக்கு பல்வேறு சலுகைகள்.

- வெளிப்புறப் படப்பிடிப்புக்குரிய கட்டணங்களை வெகுவாகக் குறைக்கப்படும்.

- திருட்டு வீடியோ, சிடி விற்பனையை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்.

- திரைத் துறையினருக்கு ஆண்டுதோறும் தவறாமல் விருதுகள்.

- திரைப்படங்களுக்கு தரும் மானியத்தை ரூ. 10 லட்சமாக உயர்த்துவோம்.

- பழம் பெரும் கிராமியக் கலைகள் அழியாமல் காக்க அந்தக் கலைஞர்களுக்குஊக்கத தொகை தந்து, ரயில் பயணங்களுக்கு இலவச பாஸ்.

- அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் புதுப்பிக்கப்படும்.

- டெஸ்மா, எஸ்மா சட்டம் ரத்து செய்யப்படும்.

- கிறிஸ்தவ ஏழைகளுக்கு இலவச பைபிள், முஸ்லீம் ஏழைகளுக்கு இலவச குரான்,இந்துக்களுக்கு இலவச கீதை வழங்கப்படும்.

- மகளிரைப் போலவே அரவாணிகளுக்கும் எல்லா உரிமைகளும், சலுகைகளும்வழங்கப்படும்.

- திருக்குறளை நீதிமன்றங்களில் சத்தியப் பிரமாண நூலாக அங்கீகரிகக் நடவடிக்கைஎடுக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில்கூறப்பட்டுள்ளன.

Mail this to a friend  Post your feedback  Print this page 

INDIA NEWS

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X