For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலை நிறுத்த திமுக சதி-ஜெ அதிரடி புகார்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுகவுக்கு சாதமாக இருப்பதால், தமிழகத்தில் சட்டம்ஒழுங்கை சீர்குலைத்து தேர்தலை நிறுத்த திமுக சதி செய்கிறது என முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை நகரில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா செய்தியாளர்களிடம்பேசுகையில்,

எப்படியாவது தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்க திமுகதலைவரும், அவரது கூட்டாளிகளும் பயங்கர சதித் திட்டத்தை தீட்டியிருக்கிறார்கள்.

பல்வேறு பத்திரிகைகள், நிறுவனங்கள் நடத்தி வரும் கருத்துக் கணிப்பு முடிவுகள்அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதால், தேர்தலைய நடத்த விடாமல் செய்வதேஅவர்களது இப்போதைய ஒரே திட்டமாக உள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு அத்தனை கருத்துக் கணிப்புகளிலும் அதிமுககூட்டணிக்கு சாதகமாக முடிவுகள் வந்து கொண்டுள்ளன. அதிமுக மிகப் பெரியமெஜாரிட்டியோடு ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன.

எனவே திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் பெரும் தோல்வியை சந்திக்கும் என்பதைஉணர்ந்ததால் திட்டமிட்டபடி மே 8ம் தேதி தேர்தலை நடத்த விடாமல் செய்யவேண்டும் என்று அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

அவர்களுடைய திட்டமே இதுதான். கூலிப்படைகளை வைத்து தமிழகம் முழுவதும்வன்முறையைக் கட்டவிழ்த்து விட வேண்டும். அதன் பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முடியாது என்றுசொல்லி தேர்தலையே ஒத்திப்போட வேண்டும்.

இதுதான் அவர்களுடைய திட்டம். கருணாநிதியின் திட்டம்.

மே 21ம் தேதி வரை தேர்தல் நடைபெறவில்லை என்றால் மே 21ம் தேதிக்குப் பிறகுகுடியரசுத் தலைவர் ஆட்சி தானாகவே வந்து விடும். அதன் பின்னர் ஆளுனர்தான்ஆட்சி செய்வார்.

அத்தகைய சூழ்நிலையில் தேர்ததல் நடத்தப்பட்டால் தங்களுக்கு சாதகமாக இருக்கும்என்று அவர்கள் நம்புகிறார்கள். இதுதான் அவர்களுடைய திட்டம்.

இதற்கு முதல்படியாகத்தான் பசுபதி பாண்டியன் மீது கொலை வெறித் தாக்குதல்நடத்தப்பட்டது. அதில் அவர் தப்பி விட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரதுமனைவி இறந்து விட்டார். இதுதான் அவர்களது திட்டத்தின் முதல்படி.

அவர்கள் எதிர்பார்த்தபடி இந்த சம்பவம் அமையவில்லை.

இந்த சதித் திட்டம் நம்பகமான சில தகவல்கள் மூலம் எனக்குஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் இதனை மக்களுக்குத் தெரிவிக்கிறேன்.மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.

எங்கேயும் வன்முறை சம்பவத்துக்கு இடம் அளித்து விடக் கூடாது. காவல்துறையினர்நிச்சயம் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். ஆனால் கருணாநிதியும், அவரதுகூட்டாளிகளும் எவ்வளவு கீழ்த்தரமான அரசியல் நடத்தத் துணிந்து விட்டார்கள்என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்என்றார் ஜெயலலிதா.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X