For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

களமிறங்கும் சிம்ரன், விந்தியா

By Staff
Google Oneindia Tamil News

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகைகள் சிம்ரன், விந்தியா ஆகியோர் இன்று(திங்கள்கிழமை) பிரசாரத்தில் குதிக்கிறார்கள்.

Jayalalitha with Simran, Deepak and child

நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், காமெடியன்கள் என திரையுலகைச் சேர்ந்தஏராளமானோர் அதிமுக பிரசார மேடைகளை கலக்கி வருகிறார்கள்.

கலக்கல் கலவை சாதம் போல் இவர்கள் அனைவரும் ஊர் ஊராக வலம் வந்துபிரசாரம் செய்வதால் 70 எம்.எம். சினிமா போல மாறியுள்ளது அதிமுக தேர்தல்பிரசாரம்.

அதிமுகவுக்கு சற்றும் சளைக்காமல் திமுக தரப்பிலும் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள்பிரசார மேடைகளை ற்றுகையிட ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே உள்ள நடிகர்கள்சந்திரசேகர், நெப்போலியன், தியாகு, குமரிமுத்து ஆகியோருடன் புதிதாக சேர்ந்துள்ளஇயக்குனர் பாக்யராஜ் தனது பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார்.

Jayalalitha with Vindhya

சரத்குமார் ஒதுங்கியிருக்கிறார். விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துஅதிமுகவில் ஐக்கியமாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவரைஅதிமுகவுக்குக் கொண்டு செல்லும் வேவையில் தமிழகத்தின் முன்னணி நாளிதழின்உரிமையாளர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அதிமுகவுக்கு சரத்குமார் போவதைத் தடுக்க இன்னொரு பத்திரிக்கை அதிபர்களமிறங்கியிருக்கிறார். வெல்லப் போவது எந்தப் பத்திரிக்கை அதிபர் என்பதைவைத்து சரத்குமாரின் அரசியல் எதிர்காலம் அமையும்.

இந் நிலையில் சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக ஆதரவு தெரிவித்தநடிகைகள் சிம்ரன், விந்தியா, கவிஞர் சினேகன், நடன இயக்குனர் ரகுராம் மற்றும்அதிமுகவில் சேர்ந்துள்ள கோவை சரளா ஆகியோர் நாளை சென்னையில்பிரசாரத்தைத் தொடங்குகின்றனர்.

ரகுராம் தம்பதி தான் (கோலிவுட்டில் காணாமல் போன நடிகை காயத்ரியின்பெற்றோர்) சிம்ரனை அதிமுகவுக்குக் கொண்டு போனதில் முக்கிய பங்கு வகித்ததாம்.

Vindhya

ரகுராமின் சகோதரியான பிரபல பரத நாட்டியக் கலைஞருக்கு பரத முனிவர் கோவில்கட்ட 5 ஏக்கரா அரசு நிலத்தை ஓசியில் அள்ளித் தந்தார் முதல்வர் ஜெயலலிதாஎன்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிரதிபலனாக சிம்ஸை அதிமுகவில்குடும்பத்தோடு போய் சேர்த்து (தள்ளி) விட்டார்களாம்.

இந் நிலையில் இன்று பிரச்சாரம் தொடங்கும் சிம்ரனுக்கு கடந்த சில நாட்களாகஅரசியல் டியூசன் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசவும், அரசியல் பால பாடமும்கற்றுத் தரப்பட்டுள்ளதாம்.

நாளை சென்னை ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து சிம்ரன்,விந்தியா, ரகுராம் தம்பதி, கவிஞர் சினேகன் (இவர் சசியின் தூரத்து சொந்தக்காரர்)ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

சிம்ரன் பேசப் போகும் தமிழைக் கேட்க ரொம்ப ஆர்வமாக இருப்பதாக பாக்யராஜ்ஏற்கனவே கிண்டலடித்திருந்தார். இந் நிலையில் கையில் குழந்தையுடன் வருவாரா,கணவருடன் வருவாரா, இல்லை தனித்து வருவாரா என்று சென்னை நகர மக்கள்சிம்ரன் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தண்டையார்பேட்டையில் இன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளபிரசாரக் கூட்டத்தில் சிம்ரன், கோவை சரளா, விந்தியா உள்ளிட்டோர் கலக்கலாகபேசப் போகின்றனர்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்தப் படை பிரசாரத்தில் குதிக்குமாம்.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X