For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொன்னதை செய்த விஜய்காந்த்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சமீப கால அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில், புதிய சாதனையைபடைத்துள்ளது நடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி.

அரசியல் தலைவர்கள் வாக்குறுதிகளை கொடுப்பதும், பின்னர் அதை வசதியாகமறந்து போவதும் அரசியல் உலகில் சகஜமான ஒன்று. கொடுத்த வாக்குறுதியை ஏன்மறந்தீர்கள் என்று பொதுமக்களும் கேட்பதில்லை, அப்படியே கேட்டாலும் அதற்குபதிலும் கிடைப்பதில்லை.

ஆனால் விஜயகாந்த் தான் சொன்ன வாக்குறுதிகளில் ஒன்றை மட்டும் இப்போதைேநிறைவேற்றி விட்டார். சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்புஅவர் சொன்ன ஒரு உறுதிமொழி, எனது கட்சி தனித்தே போட்டியிடும். 234தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன் என்பது. அதை நிறைவேற்றிக்காட்டிவிட்டார் கேப்டன்.

திமுக, அதிமுக உள்பட தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சிக்கும் 234 தொகுதிகளிலும்தனித்துப் போட்டியிடும் தைரியம் இல்லை என்பது விஜயகாந்த்தின் வாதம். அந்தவாதத்தை மெய்ப்பிப்பது போல பெரிய கட்சிகள் எதுவும் அனைத்துத்தொகுதிகளிலும் போட்டியிடவில்லை.

கூட்டணிக் கணக்கு, வாக்கு சதவீதக் கணக்கு என்று கணக்குப் போட்டு காலடி எடுத்துவைத்து வருகின்றன. திமுகவா கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன மாதிரி வெறம் 130சொச்சம் தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது.

ஆனால், சொன்னதை அப்படியே நிறைவேற்றி 234 தொகுதிகளிலும்போட்டியிடுகிறது விஜயகாந்த்தின் கட்சி.

பாஜக கூட 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என முதலில்முழங்கியது. ஆனால் இப்போது ஏகப்பட்ட குட்டிக் கட்சிகளை சேர்த்து கூட்டணிஅமைத்துள்ளதோடு, 183 தொகுதிகளில் மட்டுமே களம் காண்கிறது. ஆனால்விஜயகாந்த் சொன்னதை செய்து விட்டார்.

அதே போல மக்களோடு மட்டுமே கூட்டணி என்று வசனம் பேசிய முதல்வர்ஜெயலலிதா வைகோவுடன் கூட்டணிக்காக அலைந்த கதையையும் கட்சிகளைஉடைத்ததையும் ரஜினி மன்றத்தினரை இழுத்ததையும் இப்போது சரத்குமாருக்கு வலைவீசியுள்ளதையும்.. அப்படியே அதைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந் நிலையில் பட்டுக்கோட்டையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய விஜய்காந்த்,

காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம் என்று பாடியகவிஞர் கல்யாண சுந்தரம் பிறந்த ஊர் இது. அவர் எழுதி 40 வருடமாகிவிட்டது.ஆனால், விவசாயிகள் நிலை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.

திமுக, அதிமுகவை தவிர்த்துவிட்டு என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள். இந்தநாட்டை மாற்றிக் காட்டுகிறேன். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே எப்படிகொள்ளையடிக்கலாம் என்ற போட்டி தான் நடக்கிறது.

ஜனவரி மாதத்தில் இருந்து தமிழகத்தின் 70 சதவீத கிராமங்களை சுற்றிவந்துவிட்டேன். எங்குமே அடிப்படை வசதிகளோ, நல்ல சாலைகளோ, குடிநீர்வசதியோ, சுகாதார வசதியோ இல்லை. எனவே இவர்களை மீண்டும் ஆட்சியில்அமர்த்தாதீர்கள் என்றார்.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X