• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலவச கேபிள் இணைப்பும் தருவோம்-கருணாநிதி

By Staff
|

சென்னை:

இலவச டிவி தரும் அதே வேளையில் தேவைப்பட்டால் இலவச கேபிள் இணைப்பும்கொடுப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனநாயகமுற்போக்குக் கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கருணாநிதி பேசினார்.

இக் கூட்டத்தில் ஸ்டாலின், தயாநிதி மாறன், கருணாநதியின் மகள் கனிமொழி, மகன்.தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருணாநிதி பேசுகையில், இங்கே என்னை எதிர்த்துப் போட்டியிடுபவர் (இந்தியதேசிய லீக் கட்சியின் சார்பில் போட்டியிடும் காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான்) எனக்கும் பேரன் மாதிரி தான். மறைந்த காயிதே மில்லத் எனது மூத்த சகோதரர்.இந்தப் போட்டி மூலம் ஒரு பிரச்சினைக்கு விடை கிடைக்கிறது.

குடும்ப அரசியல் நடத்துகிறேன், மகன் எம்.எல்.ஏ, பேரன் எம்.பி, மத்திய அமைச்சர்என்றெல்லாம் பேசுகிறவர்கள் என்னை எதிர்த்து நிறுத்தியிருக்கும் வேட்பாளர் காயிதேமில்லத்தின் பேரன்.

தங்கள் கூட்டணியிலும் பேரனைத்தான் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள்.

காயிதே மில்லத் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநேரம். அப்போது நான் கோவையில் இருந்தேன். அப்போது ஆட்சிப் பொறுப்பில்இருந்தேன்.

காயிதே மில்லத் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் என்று அறிந்ததும் சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்கு விரைந்தேன். ஸ்டான்லிமருத்துவமனைக்குப் போய் காயிதே மில்லத்தைப் பார்த்தேன்.

என்னைப் பார்த்து, எங்கள் சமுதாயத்துக்கு நீங்கள் செய்த நன்மைகளுக்கு நன்றி.இதை எங்கள் சமுதாயம் என்றும் மறக்காது என்று தழுதழுத்த குரலில் கூறினார். அந்தக்குரல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பேரன் எதிர்த்தாலும் சரி, மகன் எதிர்த்தாலும் சரி, என்ன குற்றம் சொன்னாலும் சரி,காயிதே மில்லத் அன்று சொன்னது என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

எத்தனை பேர் உங்கள் பக்கம் இருந்தாலும் காயிதே மில்லத் என் பக்கம் இருந்தால்இந்த சமுதாயமே என் பக்கம் இருப்பதாக அர்த்தம்.

நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியிருப்பதால், இங்குஇருக்கும் செயல் வீரர்கள், ஒரு கருணாநிதி இல்லை என்றால் என்ன, நாம்அனைவருமே கருணாநிதிதான் என்று வாக்கு சேகரிக்கிற பணியில் ஈடுபட வேண்டும்.நடந்து சென்றே வாக்காளர்களை சந்தியுங்கள்.

திமுக தேர்தல் அறிக்கை அகில இந்தியாவையும் ஆச்சரியப்படவைத்துள்ள நிலையில்ஒரு சிலருக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளது. 2 ரூபாய்க்கு தரமான அரிசியா, இலவசடிவியா, கேஸ் அடுப்பா என்று நீ (ஜெயலலிதா) ஏன் கேட்கிறாய்?

அதற்கு என்ன அர்த்தம்? அப்படியெல்லாம் தரக் கூடாது என்றுதானே அர்த்தம்.

கலர் டிவி தர முடியாது என்று கூறுகிறார்கள். முடியாது என்ற வார்த்தை அகராதியில்இருக்க முடியாது. 1971ல் அனைத்து கிராமங்களுக்கும் 5 ஆண்டுகளில் மின் விளக்குபோடுவோம் என்றது திமுக. அது எப்படி முடியும் என்றார்கள். ஆனால், அதை செய்துகாட்டினோம்.

பின்னர் குடிசைகளை ஒழிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது அடுக்கு மாடிக்குடியிருப்புகள் ஏழைகளுக்குக் கட்டிக் கொடுப்போம் என்றோம். அதெல்லாம்சாத்தியமா என்று கேள்வி கேட்டார்கள், கேலி பேசினார்கள்.

ஆனால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி என பல ஊர்களில்பல்லாயிரக்கணக்கான வீடுகளைக் கட்டிக் கொடுத்தோம்.

பிச்சைக்காரர்களை ஒழிக்க மறுவாழ்வு மையங்கள் அமைப்போம் என்றோம்.அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அவற்றை கட்டினோம். ஆனால், இந்தஆட்சியில் அவை இன்று உண்மையிலேயே பிச்சைக்கார இல்லங்களாக மாறிவிட்டன.

கலர் டிவி தருகிறாயே, கேபிள் இணைப்பும் தரலாமே என்று கேட்கிறார்கள். பசு மாடுகொடுத்தால் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டியதுதானே, அதைக் கட்ட கயிறுகொடுப்பாயா என்று கேட்கிறார்கள்.

கேபிள் இணைப்பும் இலவசமாக, அவசியம் ஏற்பட்டால், கொடுப்போம்.தமிழ்நாட்டில், தமிழனாக வாழ்ந்து கொண்டிருக்கிற நான் இதைக் கூடசெய்யாவிட்டால் பிறகு தமிழனாக இருந்து என்ன பயன் என்றார் கருணாநிதி.

இன்று வீதி வீதியாக பிரசாரம்:

இதற்கிடையே கருணாநிதி இன்று சேப்பாக்கம் தொகுதியில் வீதி வீதியாக சென்றுபிரசாரம் மேற்கொள்கிறார்.

இன்று மாலை அவர் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று பிரசாரம்மேற்கொள்ளும் கருணாநிதி நாளையும் சேப்பாக்கத்தில் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து வட மற்றும் மேற்குத் தமிழகத்தில் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

INDIA NEWS

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X