For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவின் பண பலம்-கெளன்டர் செய்யும் திமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தேர்தல் பணிகளை கண்காணித்து, துரிதப்படுத்த மத்திய அமைச்சர்களைக்கொண்ட ஐந்து குழுக்களை திமுக தலைவர் கருணாநிதி நியமித்துள்ளார்.

பணத்தை வைத்து வாக்குகளை அள்ளும் திட்டத்தில் அதிமுக இருப்பதால் அதை பணபலத்தை வைத்தே எதிர்கொள்ளவும் திமுக முடிவு செய்துள்ளது.

இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுக தலைமை பண விஷயத்தில்தாராளத்தைக் கடைபிடித்து வருகிறது. அதிமுக தரப்பில் கடந்த சில மாதங்களாகவேபூத் கமிட்டிகளுக்கு பெரும் தொகையும் மாதாமாதம் ஊதியமும் தரப்பட்டுவருவதாகக் கூறப்பட்டு வருகிறது.

இதையடுத்து திமுக தரப்பில் இருந்தும் பூத் கமிட்டிகளுக்கு பணம் போய்ச்சேர்ந்துள்ளது. கீழ் மட்டத்தில் உள்ள திமுகவினர் தேர்தல் வேலைகளைசுணக்கமில்லாமல் பார்க்கவும், அதிமுகவினரின் பண பலத்தை சமாளிக்கவும்திமுகவும் தீவிரமாக உள்ளது.

தொகுதிக்கு குறைந்தபட்சம் ரூ. 2 கோடி வரை செலவிட அதிமுகதிட்டமிட்டுள்ளதால், திமுகவுக்கும் தன் பங்குக்கு தொகுதிக்கு ரூ. 1 கோடி வரைசெலவிடவும் அதற்கான நிதி திரட்டும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளது.

இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாவட்டந்தோறும், ஒன்றியங்கள்தோறும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும்தொகுதிதோறும் சென்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள்,அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிற கட்சி முன்னோடிகள், செயல்வீரர்கள்ஆகியோரை சந்தித்து தேர்தல் பணிகளை நேரில் பார்வையிடப்பட வேண்டும்.

இந்தப் பணிகளை கண்காணித்து, தேவையான நேரத்தில் முடுக்கி விடவும்,துரிதப்படுத்தவும் நான்கு தேர்தல் பணி ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்தல் தொடர்பான பொதுவான பணிகளை ஆற்காடு வீராசாமி கவனித்து வருகிறார்.

பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட தலைமைக் கழகத்துடன் தொடர்புவைத்தவாறு தேர்தல் சம்பந்தமான பணிகளை துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்கவனித்து வருகிறார்.

தலைமை மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் போன்றவற்றுடன் தயாநிதி மாறன்தொடர்பு கொண்டு பிரச்சினைகளை எடுத்துரைத்து உரிய முடிவுகளைக் காணஉதவிடுவார்.

இவர்கள் தவிர ஐந்து தேர்தல் பணிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

முதல் குழுவில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஆலந்தூர் பாரதி, ஏ.கிருஷ்ணசாமிஎம்.பி ஆகியோரும், 2வது குழுவில் அமைச்சர் ஆ.ராஜா, கடலூர் புகழேந்தி, குழந்தைதமிழரசன் ஆகியோரும்,

3வது குழுவில் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், விஜயன், சண்முகம்ஆகியோரும், 4வது குழுவில் அமைச்சர் ரகுபதி, ஏ.எல்.சுப்ரமணியம், தென்னவன்ஆகியோரும்,

5வது குழுவில் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, சுகவனம்,கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஏப்ரல் 14ம் தேதி முதல் இவர்கள் தங்களது பணிகளைத் தொடங்கிடுவர். இக்குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் 11ம் தேதி காலை 10 மணிக்கு எனதுதலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் என்று கருணாநிதிகுறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செலவு பண பட்டுவாடாவுக்கு அமைச்சர்களை பொறுப்பில் அமர்த்தியுள்ளார்முதல்வர் ஜெயலலிதா என்கிறார்கள். அதே பாணியில் தன் பங்குக்கு மத்தியஅமைச்சர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து அதிமுகவினருக்கு கெளன்டர்கொடுத்துள்ளது திமுக.

இன்று முதல் ஸ்டாலின் பிரசாரம்:இதற்கிடையே திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் இன்று மாலை முதல்தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். 6வதுமுறையாக இத்தொகுதியில் அவர் களம் காண்கிறார். இன்று மாலை 4 மணிக்குஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இன்று மாலை தனது பிரசாரத்தை கக்கன் காலனியில் தொடங்கி தொகுதி முழுவதும்தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனது பிரசாரத்தை ஸ்டாலின்மேற்கொள்ளவுள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் மட்டும் மொத்தம் 11நாட்களுக்கு ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X