• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுகவிலிருந்து சரத் விலகல்-கருணாநிதிக்கு காட்டமான கடிதம்

By Staff
|

சென்னை:

திமுகவிலிருந்து நடிகர் சரத்குமார் இன்று விலகினார்.

திமுகவில் தனக்கு உரிய இடமும் மரியாதையும் அளிக்கப்படாததால் கட்சியை விட்டு விலகுவதாக அவர்அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் இது தொடர்பாக ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார். அதில்,

அன்புத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு:

நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நடிகர்சரத்குமார் எழுதும் கடிதம்.

சில நினைவுகள் மறக்க முடியாதவை. 1997ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சூரியவம்சம் என்கிற மாபெரும் வெற்றியைத் தந்த நான், அரசியல் களத்தில் பிரசாரம்செய்ய இறங்குகிறேன்.

திமுக ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கோடு தமாகா, திமுக கூட்டணிக்குஆதரவாக களம் இறங்கினேன். எந்த எதிர்பார்ப்ப்போ, வேண்டுகோளோ இன்றிதங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனும் ஒரே குறிக்கோளோடுசெயல்பட்டேன்.

எந்த ஒரு பிரதிபலனும் பாராமல், இரவு பகல் பாராமல் எப்படி சூறாவளியாக பிரசாரம்செய்தேன் என்பதைத் தாங்களும் அறிவீர்கள், தங்களது இயக்க முன்னோடிகளும்அறிவார்கள்.

தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர உதவினேன் என்கிற ஒரே ஒரு மகிழ்வானஉணர்வோடு இருந்தவன், தங்களால் ஈர்க்கப்பட்டு தங்களது இயக்கத்திலும் 1998ம்ஆண்டு அடிப்படை உறுப்பினராக இணைந்தேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லையில் நிறுத்தப்பட்டேன். இயக்கத்தில் சிலரின்ஒத்துழையாமையினால் தோற்கடிக்கவும் பட்டேன்.

நான் அன்று தங்கள் இயக்கத்தில் இணைந்ததை நான் சார்ந்திருக்கும் சமுதாயம்வரவேற்கவில்லை. காரணம் மெர்க்கண்டைல் வங்கி விவகாரத்தில் தாங்கள்பிரச்சினைக்கு சரிவர தீர்வு காணவில்லை என்ற உண்மை அனைவரையும்பாதித்ததால்.

இருப்பினும் நம் இயக்கத்தின் கொள்கைகளான கடமை, கண்ணியம்,கட்டுப்பாட்டினை முழு மூச்சாக கொண்டு உண்மை உணர்வோடு, மரபு மாறாமல்இயக்கத்திற்காக உழைத்து வந்திருக்கிறேன்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இயக்கத்திற்கு நான் ஊறு விளைவித்ததில்லை என்பதனைஇவ்வுலகமே அறியும்.

இது ஒருபுறம் இருக்க எத்தனையோ சந்தர்ப்பங்களில் தங்களைச் சார்ந்த சிலரேஎன்னை அவமானத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.

அதனை தங்களுக்காகவும், இயக்கத்திற்காகவும், என் மனைவி ராதிகாசரத்குமாருக்காகவும் சில காலம் தாங்கிக் கொண்டிருந்தேன். அதையும் மீறி ஒருகட்டத்தில் எனது உண்மையான உணர்வுகளை வெளிகாட்டியிருக்கிறேன்.அப்பா என்று பாசத்தோடு தங்களிடம் வந்தேன். என்ன என்று கேட்டீர்கள் ..சொன்னேன். எனது வேதனைகளுக்கும், நான் பட்ட காயங்களுக்கும் காரணம்தங்களது நெருங்கிய சொந்தங்களே என்பதை தெளிவாக உணர்ந்தீர்கள்.

எனினும் அவர்களை அழைத்து சுப்ரீம் ஸ்டார் தம்பி சரத்குமார் நமக்குஉண்மையானவன், உழைப்பவன் அவனது மனைவி ராதிகா நம் வீட்டுப் பெண்.இருவரையும் எக்காரணம் கொண்டும் வேதனைப்படுத்தாதீர்கள் என்று தங்களால்சொல்ல இயலவில்லை. தங்களது சூழ்நிலை அதற்கு வழி வகுக்கவில்லை என்றேஅதனை நான் எடுத்துக் கொள்கிறேன்.

தங்களிடம் சொல்லி விட்டேன் என்பதற்காகவே என்னை எதிரியாக நடத்தத்தொடங்கினார்கள். எனது உண்மையான உழைப்பு கேலிக் கூத்தாக்கப்பட்டது. நான்தங்களிடம் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் தங்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுக்கருத்தாகவே தெரிந்ததால் அதன் பாதிப்பும், தாக்கம் என் மனைவி ராதிகாசரத்குமாருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தாங்கள் மகளாக பாவிக்கும் ராதிகா சரத்குமாரையும் தங்களால்பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி. நாங்கள் சொல்கின்றநியாயமான கருத்துக்களும், கோரிக்கைகளும் ஏற்கப்படக் கூடாதெனஎங்களுக்கெதிராக பலர் செயல்படும்போது இனியும் தங்களை வேதனைக்குள்ளாக்கநான் விரும்பவில்லை.

ஆனால் சுய மரியாதை உணர்வுகளோ, கருத்துச் சுதந்திரமோ இல்லாதவன் மனிதனேஅல்ல என்பது என் கருத்து. தங்களது இயக்கத்திலோ, தற்போது அவற்றுக்குவரவேற்பு இல்லை, வாய்மையும் பேசாத, வாயும் பேசாத அடிமைகளேதேவைப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதுதான்எனக்கு ஒரே வழி. இதுகாலம் வரை தங்களிடம் கற்ற அரசியல் பாடம், என்னைவளர்த்த ரசிகர்களும், தாய்மார்களும், நண்பர்களும், கலை உலகத் தாழர்களும்,என்னைச் சார்ந்த சமுதாயமும், தமிழக மக்களும் இனி எனது அரசியல் வாழ்க்கைக்குதுணை நிற்பர்.

தமிழக மக்கள் என்னை அவர்கள் மடியில் விழுந்த பிள்ளையைப் போல கருதி, நான்பட்ட காயங்களுக்கு மருந்திட்டு விட்ட பணிகளைத் தொடர எனக்கு வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு.

எனவே இன்று முதல் என்னை தங்களது இயக்கத்தில் இருந்து விடுவித்துக்கொள்கிறேன். தாங்கள் செய்யவிருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

இக் கடிதத்தையே எனது அடிப்படை உறுப்பினர் பதவிக்கான ராஜினாமாகாவும்ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சாதி, மத, மொழி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவோம்.

வணக்கத்துடன் ஆர்.சரத்குமார்

இவ்வாறு தனது கடிதத்தில் சரத்குமார் கூறியுள்ளார்.

தனக்கு மத்தியில் அமைச்சர் பதவி வாங்கித் தராததால் சில காலமாகவே திமுகவில் ஒட்டும் ஒட்டாமல் இருந்துவந்தார் சரத்குமார். கட்சியை விட்டு விலகுவேன், பிரச்சாரத்துக்குப் போக மாட்டேன் என்று தலைமையை அவர்மிரட்டியும் பார்த்தார்.

இதையடுத்து திமுக தரப்பில் அவரை சமாதானப்படுத்த ஸ்டாலின், நெப்போலியன், கருணாநிதியின் மகள்செல்வி உள்ளிட்டோர் பேசிப் பார்த்தனர். இதைத் தவிர்க்க கருணாநிதியை நேரில் ஒரே ஒருமுறை வந்துபார்க்குமாறு நடிகர் நெப்போலியன் கூப்பிட்டுப் பார்த்தார். அதை சரத்குமார் ஏற்கவில்லை.

அதே போல ராதிகா மூலமும் சரத்தை சரி செய்ய முயற்சி நடந்தது. ஆனால், இதில் தலையிட்டால் உன்னைடைவர்ஸ் செய்யவும் தயங்க மாட்டேன் என்று சரத்குமார் கூறிவிட்டதாக திமுக தலைமையிடம் ராதிகாதெரிவித்துள்ளார்.

இந் நிலையில் அதிமுக தரப்பில் இருந்து சரத்துக்கு பல உதவிகள் வழங்கப்படும் என்றுஉறுதியளிக்கப்பட்டுள்ளது. சரத்குமாரை அதிமுகவுக்குக் கொண்டு போகும் வேலையை தமிழகத்தின் முன்னணிபத்திரிக்கையின் அதிபரே முன்னின்று கவனித்து வருகிறார். சரத்குமாருக்கு ரூ. 20 கோடி வரை கடன்இருப்பதாகவும், அதை ஆளும் தரப்பு ஈடு செய்ய முன் வந்தால் கட்சி தாவ ரெடி என்றும் சரத்குமார் பேரம் பேசிவந்ததாக தகவல்கள் வந்தன.

அவருடையே கோரிக்கை ஏற்கப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை. இந் நிலையில்எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே திமுகவில் இருந்து விலகியுள்ளார் குமார். இதனால் திமுக தரப்பில் ஆச்சரியம்ஏதும் இல்லாவிட்டாலும் அதிர்ச்சி நிலவுகிறது.

அதிமுகவில் இணைந்து அந்தக் கட்சிக்கு ஆதரவாக சரத் குதித்தால் தென் மாவட்டங்களில் நாடார் சமூகஓட்டுக்களை அவர் பிரிக்கக் கூடும் என்ற அச்சம் திமுகவில் உள்ளது.

முன்னதாக தனது ரசிகர் மன்றம் மூலமாக திமுகவை மிரட்டினார் குமார். சிலவாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட மன்றக் கூட்டத்தில் ஒரு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. அதில், 1996ம் ஆண்டு முதல் திமுகவின் உயர்வுக்காகபாடுபட்டு வரும் சரத்குமாரின் உணர்வுகளுக்கும், உழைப்புக்கும் உரியமரியாதையை, கெளரவத்தை அளிக்க திமுக தவறி விட்டது. எனவே தேர்தலில் திமுகவேட்பாளர்களுக்கு சரத்குமார் பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது

ரசிகர்கள் நிறைவேற்றியதாகக் கூறப்பட்ட இந்தத் தீர்மானத்தை சரத்குமார் சொல்லித்தான் அவர்கள் நிறைவேற்றினர். அதற்கும் முன் தூத்துக்குடியில் தனது ரசிகர் மன்றமாநாட்டை நடத்தி, எனக்கும் சமூக உணர்வு உண்டு, நான் நம் சமூகத்துக்காக சிலகடமைகளைச் செய்ய வேண்டியுள்ளது என்று பேசினார் சரத்குமார்.

அவரைத் தனிக் கட்சி தொடங்கச் சொல்லி நாடார் சமூக விஐபிக்கள் கோரி வந்தனர்.ஆனால், அது சரிப்படாது என்று கூறிவிட்டார் குமார்.

சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்விகட்சியில் சேர்ந்தபின் தன்னை திமுக தலைமை ஓரங்கட்டியதாக குமார் கருதுகிறார்.அதே போல விஜய்யை வைத்து தயாநிதி மாறன் பிரதமர் முன்னிலையில் ஸ்டாம்ப்வெளியிடவே, தன்னை கட்சி முழுமையாகவே புறக்கணித்துவிட்டதாக குமார்முடிவுக்கு வந்தார்.

இவ்வாறாக எரிச்சலில் இருந்த சரத்தை பத்திரிக்கை அதிபர் மூலமாக வளைத்துதிமுகவை விட்டு வெளியே கொண்டுவிட்டது அதிமுக. சரத்தை அதிமுக பக்கம் போகவிடாமல் தடுக்க இன்னொரு பத்திரிக்கை அதிபர் தீவிரமாக முயன்றார்.

இருவரில் யார் சொல்வதைக் கேட்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்குமார். இதனால் தான் முடிவெடுப்பதில் அவருக்கு இத்தனை நாட்களாது என்றுதெரிகிறது.

அடுத்த சில நாட்களில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் குமார்இணையலாம் அல்லது அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கலாம் என்றுதெரிகிறது.

அதற்கு முன் திமுக வழங்கிய ராஜ்யசபா எம்பி பதவியையும் சரத் ராஜினாமா செய்வாரா என்று தெரியவில்லை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

INDIA NEWS

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X