• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

திங்கள் to

By Staff
|

சென்னை:

ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவதற்காக நான்கு வேட்பாளர்களை தேர்வு செய்துவைத்துள்ளோம். அதில் 4வதாக எனது பெயர் இடம் பெற்றுள்ளது. புதன்கிழமைக்குள்யார் வேட்பாளர் என்பது தெரியும் என்று நடிகர் கார்த்திக் மீண்டும் புதிர்போட்டுள்ளார்.

படங்களில் நடிக்கும்போதே கார்த்திக் சூட்டிங்குக்கு வருவாரா இல்லையா என்பதுகடைசி நேரம் வரை தெரியாது. காரைக்குடியில் சூட்டிங் வைத்தால் வந்தால் வருவார்,இல்லாவிட்டால் ஊட்டிக்குப் போய்விட்டார் என்று தகவல் வரும்.

அது மாதிரியே கட்சியையும் நடத்தி வருகிறார் கார்த்தி. இதற்கிடையே அவரைமேலும் குழப்ப அதிமுக தரப்பில் இருந்து மிரட்டல் வேறு. இதனால் பல வீட்டுபழைய சாதத்தை ஒன்றாகப் போட்டு கலக்கிய மாதிரி நசநசவென்று இருக்கிறதுஅவரது கட்சியும் கார்த்திக்கின் செயல்பாடும்.

இதற்கிடையே பார்வர்ட் பிளாக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை ஆல்டர்நேட்டிவ்டேசில், அதாகப்பட்டது, ஒரு நாள் விட்டு ஒருநாள் வெளியிட்டு வருகிறார் கார்த்திக்.அந்த வகையில் இப்போது 5 வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளார்.

அதன் விவரம்:கோவை மேற்கு -செந்தில்குமார்

மதுரை மத்தி -ஞானப்பிரகாசம்

திருப்பத்தூர் -பாண்டியம்மாள்

பழனி -செல்வராஜ்

வேதாரண்யம் -ராஜா

தேர்தல் அறிக்கை:

பின்னர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார் கார்த்திக். அதன் விவரம்,

- திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை நாட்களில் மது பான

விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.

- அனைவருக்கும் கட்டாயக் கல்வி.

- குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வியோடு கம்ப்யூட்டர் கல்வி.

- அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வசதி.

- கிராமங்கள், நகரங்களில் தரமான சாலைகள். அனைத்து சாலைகளிலும் சிக்னல்வசதி.

- கிராமப் புறங்களில் தரமான மருத்துவ வசதி.

- தொழிலாளர்களுக்கு, மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, கூலித் தொழிலாளிகளுக்குமற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ வசதி.

- பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பெண்களின் வளர்ச்சிக்காக புதியதிட்டங்கள்.

- கூலித் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலத்தில் நிதியுதவி.

- கல்லூரி வரை பயிலும் மாணவ, மாணவிருக்கு இலவச பஸ் பாஸ், ஏழ்மையானமாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை.

- விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

நாலாவதா என் பேரு:

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கார்த்திக் பதிலளிக்கையில்,

இதுவரை 75 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம்.ஆண்டிப்பட்டியிலும் எங்களது கட்சி போட்டியிடும். அத்தொகுதிக்காக 4வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளோம். எனது பெயர் அதில் 4வதாக இடம்பெற்றுள்ளது.

நான் ஆண்டிப்பட்டியில் போட்டியிட வேண்டும் என்று கட்சி மேலிடம் வலியுறுத்திவருகிறது. ஆனால் முடிவு என் கையில்தான். எப்படியும் புதன்கிழமைக்குள்(நாளைக்குள்) வேட்பாளரை அறிவித்து விடுவேன், கவலைப்படாதீர்கள்.

வேட்பாளரை அறிவித்து விட்டு பசும்பொன்னில் இருந்து எனது பிரசாரத்தைத்தொடங்குவேன் என்றார் கார்த்திக்.

ஆண்டிப்பட்டி குறித்து கார்த்திக் தொடர்ந்து சஸ்பென்ஸ் கடைப்பிடித்து வருவதுகட்சியினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கம் சின்னம் கிடைக்குமா?:

இதற்கிடையே சிங்கம் சின்னத்தை கார்த்திக் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது என்று கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்த நீதிபதி இப்ராகிம்கலிபுல்லா, இந்த விவகாரம் தொடர்பாக வரும் 20ம் தேதிக்குள் முடிவெடுக்கமாறுதேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் சின்னத்தை முடக்கக் கோரிய மனுதாரின் கோரிக்கையை அவர்நிராகரித்து விட்டார்.

நாளை முதல் பிரசாரம்:

இந் நிவையில் நாளை பசும்பொன் கிராமம் செல்லும் கார்த்திக் அங்குள்ள தேவர்நினைவிடத்தில் பூஜை நடத்துகிறார். பின்னர் அங்கிருந்து தனது 24 நாள் பிரசாரத்தைத்தொடங்குகிறார்.

11, 12 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள்,

12 முதல் 14 வரை சிவகங்கை, மதுரை மாவட்டங்கள்,

15, 16, 17 ஆகிய நாட்களில் நீலகிரி, ஊட்டி, குன்னூர்,

18ம் தேதி கோவை மாவட்டம்,

19ம் தேதி திண்டுக்கல்,

20ம் தேதி திருச்சி, தஞ்சை

21ம் தேதி கடலூர் மற்றும் புதுவை

22ம் தேதி சென்னை

23 முதல் 25 வரை ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம்

26 முதல் 30ம் தேதி வரை விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி

மே 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மீண்டும் நெல்லை, தூத்துக்குடி, குமரிமாவட்டங்கள்.

இவ்வாறு கார்த்திக்கின் பிரசாரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

TAMILNADU NEWS INDIA NEWS
[an error occurred while processing this directive]

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X