For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா ஆச்சி மர்படியும் வர்ணும்: சிம்ரன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அம்மா மர்படியும் ஜெயிக்கணும், அவரது ஆச்சியில்தான் குழாய்லே தண்ணீ வர்ற.அத்னாலே அம்மா ஆச்சியே மர்படியும் வர்ணும் என்று சென்னையில் நடந்தபிரசாரக் கூட்டத்தில் நடிகை சிம்ரன் பேசினார்.

மக்கள் ஜனநாயகக் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ள அதிமுக கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்து ஏகப்பட்ட நடிகர், நடிகையர், இயக்குநிர்கள் பிரசாரத்தில்குதித்துள்ளனர்.

லேட்டஸ்டாக நடிகைகள் சிம்ரன், விந்தியா, கோவை சரளா ஆகியோரும் பிரசாரத்தில்இறங்கியுள்ளனர்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் அதிமுக வேட்பாளர் சேகர் பாபுவை ஆதரித்து மூன்றுநடிகைகளும் சென்னையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசினர்.

இக்கூட்டத்தில் சிம்ரனை அதிமுகவுக்குக் கூட்டி வந்த நடன இயக்குனர் ரகுராமின்மனைவி கிரிஜா, இயக்குனர் பாரதிராஜாவின் உறவினரான இயக்குனர் மனோஜ்குமார்,சசிகலாவின் உறவினரான பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சிம்ரன் தமிழிலேயே பேசினார் (பாக்யராஜ் ரொம்ப ஆர்வமாக இருந்தார்இவரது தமிழைக் கேட்க!).

எல்லார்க்கும் வணக்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சின்னம், புரட்ஷித் தலைவிஅம்மாவின் சின்னம், நமது சின்னம், உங்கள் சின்னம் ரட்டை இலே. உங்கள் ஓட்டுரட்டை இலேக்கே.

ரட்டை இலேக்கே மீண்டும் ஓட் போடுங்க. அம்மா ஆச்சியில் தண்ணீ பிரச்சனேஇல்லே. ரோட் நல்லா இருக்கு. ரவுடீத்தனம் இல்லே. குழாய்லே தண்ணீ வருது.

அதனால அம்மாவுக்கே ஓட் போடுங், அம்மா சின்னம், நம்மோ சின்னம் ரட்டே இலே,வணக்கம் என்று அழகிய தமிழில் பேசினார் பஞ்சாபைச் சேர்ந்த சிம்ரன்.

தொடர்ந்து விந்தியா பேசுகையில், எனது பிறந்த நாள், படப்பிடிப்புக்காக முதல்முதலாக மேக்கப் போட்ட நாள் போல இந்த பிரசார நாளும் எனக்கு மறக்க முடியாதநாளாக அமைந்து விட்டது என்று பேசிய விந்தியா குட்டிக் கதை ஒன்றையும் சொல்லிஅசத்தினார்.

ஒரு பையன் தனது அப்பாவிடம் நான் அரசியலுக்கு போக விரும்புகிறேன் என்றான்.அதற்கு அப்பா, அப்படியானால் நான் சொல்வதைக் கேள் என்று கூறி ஒரு ஏணியைஎடுத்து வந்து அதை சுவரில் சாய்த்து அதில் மகனை ஏறச் செய்தார்.

சுவரில் ஆணியை கொடுத்து சுத்தியலால் அடிக்கச் செய்தார். ஆணி அடிக்கும்போதேபிடித்துக் கொண்டிருந்த ஏணியை தந்தை விட்டு விட்டார். இதனால் மகன் கீழேவிழுந்தான்.

ஏம்ப்பா என்னை கை விட்டு விட்டீர்கள் என்று மகன் கேட்டான்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அரசியலுக்கு வந்தால் அப்பாவைஇருந்தாலும் நம்பக் கூடாது, அம்மாவைத் தான் நம்ப வேண்டும்.

அப்பா என்றால் யார், அம்மா யார் என்பது உங்களுக்கேத் தெரியும். எனவேதான்அம்மாவை நம்பி நான் வந்து விட்டேன். (அப்ப, விஜய்காந்த் கட்சியில கொ.ப.செ.பதவி கேட்டு அவர் தர முடியாதுன்னு சொல்லி விரட்டி விட்டது?) சாகும் வரைஇங்கேதான் இருப்பேன். அடுத்து வெற்றி விழாவிலும் வந்து பேசுவேன் என்றார்.

கோவை சரளா தனது வெண்கலக் குரலில் சுத்தத் தமிழில் அழகாகவே பேசினார்.

அம்மா மாதர்கள் போற்றும் தங்கத் தலைவி, காவிரித் தாய், தங்கத் திருமகள், எங்கள்தங்கம், மழை நீர் வற்றினாலும் பாச நீர் வற்றாத ஜீவநதி, பெருகி ஓடும் அருவி, தமிழ்மக்களின் உயிர் என்று ஆரம்பித்து ஜெயலலிதாவின் பல்வேறு சாதனைகளைஅடுக்கிய கோவை சரளா, இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு , பொங்கி முழங்கினார்.

சிம்ரன், விந்தியா, கோவை சரளா வருகிறார்கள் என்ற தகவலால் பெரும் திரளானபெண்களும், அவர்களுக்கு இணையாக ஆண்களும் திரண்டிருந்தனர். அனைவரும்முப்பெரும் தேவியரை பார்த்து கையசைத்தவாறும், விசிலடித்தவாறும் இருந்தனர்.

பதிலுக்கு 3 நடிகைகளும் இரட்டை விரலைக் காட்டி வாக்கு சேகரித்தனர்.

TAMILNADU NEWS INDIA NEWS
[an error occurred while processing this directive]
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X