For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடராஜ்: ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

அதிமுக மிரட்டல்-பார்வர்ட் பிளாக் வேட்பாளர்
தற்கொலை முயற்சி: மதுரையில் பதட்டம்!

மதுரை திருமங்கலம் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் செந்தில் அதிமுகவினரின் பயங்கர மிரட்டலால் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயேந்திரர்.. கைவிலங்கு-மந்திரி மீது வழக்கு
காஞ்சி சங்கராச்சாரியாரை முதல்வர் ஜெயலலிதாவின் மேற்பார்வையில் போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வது போல பேனர் வைத்த அமைச்சர் சோமசுந்தரம், அதிமுக எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நாளையுடன் முடிகிறது வேட்பு மனு தாக்கல்
தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் மனுதாக்கல் முடிவடைகிறது.

தாம்பரம் தேமுதிக வேட்பாளர் திடீர் விலகல்
தாம்பரம் தொகுதி தே.மு.தி.க.வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயந்தி, கட்சி நிர்வாகிகளின் நெருக்கடி காரணமாக போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அதன் தலைவர் நடிகர் விஜயகாந்த்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

துண்டு சீட்டும்.. வைகோவின் பல்டியும்: தயாநிதி
வைகோ மீது வழக்குப் போட்டதன் மூலம் நான் மீசை வைத்த ஆண் மகன் தான் என்பதை நிரூபித்துவிட்டேன். ஆனால், ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் ஏறி என்னை எதற்காக பொடாவில் கைது செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பி தானும் ஒரு ஆண் மகன் தான் என்பதை வைகோ நிரூபிப்பாரா என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.

தமிழகம் வந்த 234 தேர்தல் பார்வையாளர்கள்
234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் இன்று தமிழகம் வந்தனர்.

நாடார்களை நான் வெறுக்கவில்லை-கருணாநிதி
நாடார் சமுதாயத்தினரை நான் விரோதிகள் போல நினைக்கவில்லை, அவர்களை நான் வெறுக்கவும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஐயா வாங்க.. அய்யோ பாவம் வேட்பாளர்!
வேட்பு மனுவை முன்மொழிய போதிய ஆட்கள் வராததால், விரக்தியடைந்து மனுவைத் தாக்கல் செய்யாமலேயே திரும்பினார் தி.நகர் தொகுதி சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் தேவேந்திரன்.

தட்டில் போடும் நோட்டுக்கும் கணக்கு வேணும்!
பொது மக்கள் ஆரத்தி எடுக்கும்போது அந்தத் தட்டில் போடும் பணத்திற்கும் வேட்பாளர்கள் கணக்கு காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கிடுக்கிப் பிடி போட்டுள்ளது.

நடராஜ்: ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை மாற்ற உத்தரவிட்டும், மாற்றாக 3 அதிகாரிகளின் பெயர்களைப் பரிந்துரைக்க கோரியும் அனுப்பப்பட்ட உத்தரவுக்கு தமிழக அரசு எந்த பதிலும் அளிக்காமல் மெளனம் சாதிப்பதால் தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் முக்கிய முடிவை எடுக்கவுள்ளது.

தாஜா: மீண்டும் காங்கிரசில் செல்லக்குமார்!
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி சமீபத்தில் கட்சியை விட்டு நீக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. டாக்டர் செல்லக்குமார் மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எளிமை.. எளிமை.. வித்தியாச ஹண்டே!
முன்னாள் அமைச்சரும், அண்ணா நகர் தொகுதி பாஜக வேட்பாளருமான டாக்டர் எச்.வி.ஹண்டே படு எளிமையாக நடந்து சென்றே வாக்கு சேகரிப்பது தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தோல்வியை ஜெ உணர ஆரம்பித்துவிட்டார்-வாசன்
கடந்து ஐந்து ஆண்டுகளில் 10 கிலோ இலவச அரிசியைக் கொடுக்காமல் இப்போது கொடுக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது சுத்த ஏமாற்று வேலை என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. தொழிலாளர் நலனுக்கு அதில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ஜெ எப்படி இலவச அரிசி தருவார்? ஸ்டாலின்
1 கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தரப்படும் என அறிவித்த திமுகவை விமர்சித்து வரும் ஜெயலலிதா மட்டும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பது எந்த வகையில் நியாயம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெவின் மயக்க பிஸ்கட்: ராமதாஸ் நக்கல்!
ரயிலில் மயக்க பிஸ்கெட் தந்து பயணிகளிடம் நகை, பணத்தை திருடிச் சென்றார்கள் என்று நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோமே.. அதே வேலையைத் தான் முதல்வர் ஜெயலலிதாவும் செய்ய ஆரம்பித்திருக்கிறார் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஏப்ரல்18, 2006

ஜெவுக்கு எதிராக பா.பிளாக் வேட்பாளர் போட்டி:
மாற்று வேட்பாளராக கார்த்திக்

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் தேனி மாவட்ட பார்வர்ட் பிளாக் செயலாளர் பொன்.முருகன் போட்டியிடுவார். அவர் நாளை மனு தாக்கல் செய்வார். அவருக்கு மாற்று வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். நானும் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்று பார்வர்ட் பிளாக் தலைவரும் நடிகருமான கார்த்திக் கூறியுள்ளார்.

ராதிகா நிறுவனத்தை விலை பேசும் ரிலையன்ஸ்!
சரத்குமாருடன் ராதிகாவும் அதிமுகவில் சேர்ந்துவிட்டதால் சன் டிவியில் அவர் நடத்தி வரும் நிகழ்ச்சிகள் தொடருமா என்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

10 கிலோ அரிசி இலவசம்-அம்மா அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி வாங்கும் போது, அதில் 10கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா திடீரென அறிவித்துள்ளார்.

ஜெ அறிவிப்பால் திமுக கலக்கம்-வைகே
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 10 கிலோ இலவச அரிசி என்ற அறிவிப்பால் திமுக கூட்டணி பெரும் கலக்கமடைந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அரிசி: வைகோவுக்கு ஜெ மூக்கறுப்பு-கருணாநிதி
கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்த திமுகவை விமர்சித்து வரும் வைகோவுக்கு, 10 கிலோ அரிசி இலவசம் என்று கூறி ஜெயலலிதா சரியான மூக்கறுப்பு செய்துள்ளார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தியாகி திண்டிவனத்துக்கு தியாகத்தின் சின்னம்?
தனது கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என தமிழக ஜனநாயக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

திமுக வேட்பாளரை இறக்கிவிட்ட குதிரை!
நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் மலைராஜா குதிரை மீது ஏறி வாக்கு சேகரிக்கச் சென்றார். ஆனால் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் குதிரை நகர மறுத்ததால் அதிலிருந்து இறங்கி நடந்தே சென்று ஓட்டு கேட்டார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப் படியை (டியர்னஸ் அலவன்ஸ்-டி.ஏ) தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

மகா குழப்பத்தில் பாஜகவின் மெகா கூட்டணி!
ஐக்கிய ஜனதா தளத்தின் தமிழ் மாநிலப் பிரிவின் தலைவர் பதவியில் இருந்த ராஜசேகரன் அப்பதவியிலிருந்து விலகி விட்டதாலும், கூட்டணியிலிருந்து அக்கட்சி விலகி விட்டதாலும் அக்கட்சிக்கு ஒதுக்கிய 10 தொகுதிகளை என்ன செய்வது என்று தெரியாமல் பாஜக பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

சொத்து: ஜெவை மிஞ்சினார் கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி தனது சொத்து விவரப் பட்டியலை தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு சொந்தமாக வீடு, கார், நிலம் என எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கோவணத்துடன் வந்த வேட்பாளர் கைது!
மொடக்குறிச்சி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் ஏறி, கோவணம் அணிந்தபடி வந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

11ல் போட்டி; 223ல் திமுகவுக்கு ஆதரவு-டிஆர்
11 தொகுதிகளில் போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மீதமுள்ள 223 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாக இயக்குனர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

ஜெவுக்கு மன்னிப்பே இல்லை -அன்புமணி
தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்த ஜெயலலிதாவை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.

ஜெவின் தோல்வி பய அரிசி: கிருஷ்ணசாமி
தோல்வி பயம் காரணமாகவே 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இதுவரை 1,168 பேர் வேட்பு மனு தாக்கல்
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 1,168 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனோ உள்ளே- களமிறங்கும் கராத்தே
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த வட சென்னை காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அமெரிக்க நாராயணனுக்கு தீரர் மகள் ஆதரவு
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மைலாப்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் அமெரிக்க நாராயணனுக்கு ஆதரவாக தீரர் சத்தியமூர்த்தியின் மகள் பிரசாரம் செய்யவுள்ளார்.

ஏப்ரல்17, 2006

ஜெவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் சரத்:
ராதிகா-சரத்துக்கு கருணாநிதி வாழ்த்து

திமுகவிலிருந்து விலகியுள்ள நடிகர் சரத்குமார் இன்று முதல்வர் ஜெயலலிதாவை தேனியில் வைத்து சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவருடன் ராதிகாவும் அதிமுகவில் இணைந்தார்.

கருணாநிதி, விஜய்காந்த் வேட்பு மனு தாக்கல்
திமுக தலைவர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முசிறியிலும் ஜெயலலிதா போட்டி?
ஆண்டிப்பட்டி தவிர முசிறியிலும் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்ணாகரத்தில் முத்துலட்சுமி மனு தாக்கல்
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரபலங்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பாஜக-ஜனதா கட்சி கூட்டணிக்கு விஎச்பி ஆதரவு
வரும் தேர்தலில் பாஜக-ஜனதா கட்சி கூட்டணிக்கு ஆதரவளிக்கப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூசாரிகள் பேரவை அறிவித்துள்ளன.

நான் யாரு??.. பாட்டிகளிடம் ஜெ கலகல
ஆண்டிப்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, இரண்டு பாட்டிகளைப் பார்த்தவுடன் அவர்கள் பக்கத்தில் வேனை நிறுத்தி அன்புடன் நலம் விசாரித்து அசத்தினார்.

தேர்தலில் போட்டியிடும் அல்-உம்மா தீவிரவாதி
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அல்-உம்மா தீவிரவாதிக்கு பட்டுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திமுகவுக்கு உதவ டிஆருக்கு கருணாநிதி கோரிக்கை
எனது முதல் சுற்றுப் பிரசாரத்தின்போது மக்களிடம் ஐந்து மடங்கு அதிக எழுச்சியைக் கண்டேன். இந்த சுற்றுப்பயணம் பிரமாண்ட வெற்றியாக அமைந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அமைச்சருக்கு கும்மாங் குத்து-வேட்டி உருவல்
கோவை மாவட்டம் பொங்கலூர் அருகே நடந்த அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் அமைச்சர் தாமோதரனுக்கு அடி, உதை விழுந்தது. அவரது வேட்டி-சட்டை கிழிக்கப்பட்டது. சேர்கள் வீசப்பட்டதால் போலீசார் உதவியுடன் உயிர் தப்பி ஓடினார் அமைச்சர்.

ஈஸ்டர்-சர்ச்சுகளை முற்றுகையிட்ட கரைவேட்டிகள்!
இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் அரசியல்வாதிகள் முற்றுகையிட்டு ஓட்டு வேட்டையாடினர்.

பசி,அன்புமணி,கலாநிதி மீது சுவாமி பரபர புகார்
மத்திய நிதி அமைச்சர்கள் ப.சிதம்பரம், அன்புமணி ராமதாஸ், தயாநிதி மாறன் மற்றும் சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம்ன் சுவாமி பரபரப்பு புகார்களை வீசியுள்ளார்.

கடுமையான போட்டி, தெளிவான முடிவு: ப.சி
சட்டசபைத் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கிறது. ஆனால் முடிவு தெளிவாக இருக்கும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

மதுரையில் கேப்டன் மீது கல் வீசிய குடிமகன்!
நடிகர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த வாலிபர் அவர் மீது கல் எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

25 நாளில் கருணாநிதி முதல்வர்: தயாநிதி
நள்ளிரவில் வீடு புகுந்து கருணாநிதியை தரதரவென இழுத்துச் சென்றதை மக்கள் மறக்காமல் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.

அதிமுகவுக்கு படுதோல்வி நிச்சயம்: நல்லகண்ணு
தமிழக நதிகளை இணைப்போம் என்ற சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளை அறிவித்துள்ள ஜெயலலிதா இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்படுவது நிச்சயம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு சமூக அக்கறை இல்லை: திருமா
சமூக அக்கறையே இல்லாமல் கலர் டிவி தருவோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார் கருணாநிதி என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

கம்யூனிஸ்டுகள் வேஸ்ட்: ராதாரவி சொல்கிறார்
இதுவரை சேர்த்து வைத்த சொத்துக்களைக் காக்கவே மீண்டும் முதல்வர் பதவியில் அமர துடிக்கிறார் கருணாநிதி என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

ஒசூர், தளி பகுதிகளில் அத்வானி பிரசாரம்
பாஜக முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி வரும் 24ம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

...மேலும்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X