For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 100 கோடிக்கு பிரபல நடிகரிடம் பேரம்பேசிய அதிமுக: கருணாநிதி பரபரப்பு தகவல்!

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:

பிரபல திரைப்பட நடிகரை அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறும்,இதற்காக ரூ. 100 கோடி வரை கொடுக்க அதிமுக முன் வந்ததாகவும் திமுக தலைவர்கருணாநிதி பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடியிலிருந்து இன்று மாலை தென் மாவட்ட பிரசாரத்தை தொடங்கினார்கருணாநிதி. முன்னதாக ரயில் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்த கருணாநதிக்குதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தகருணாநிதி,

ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் இலவச அரிசி, அது,இது என்று போட்டா போட்டி வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றஆரம்பித்துள்ளார்.

அதிமுகவுக்கு பெரும் தோல்வி கிடைக்கப் போகிறது என்பதை உணர்ந்து விட்டஜெயலலிதா, தமிழகத்தின் பிரபல நடிகர் ஒருவரை அதிகவுக்கு ஆதரவாக பிரசாரம்செய்ய வருமாறு வலை வீசிப் பார்த்துள்ளார். இதற்காக ரூ. 100 கோடி வரைதருவதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நடிகர் வர மறுத்துவிட்டார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படாது. அப்படியே கூட்டணி ஆட்சி தவிர்க்கமுடியாது என்றால் அதை திமுக எதிர்க்காது. இப்போதைய நிலையில் திமுக தனித்துஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார் கருணாநிதி.

இன்று மணிக்கு தூத்துக்குடியிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கும் கருணாநிதி.அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து காயல்பட்டனம்,திருச்செந்தூர், பாளையங்கோட்டை, நெல்லை ஆகிய இடங்களில் அவர் பிரசாரம்மேற்கொள்கிறார்.

கருணாநிதி குறிப்பிடும் அந்த நடிகர் யார் என்று தெரியவில்லை.

நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெற அதிமுக முன்பு பிரம்மப்பிரயத்தனம்செய்ததும், அவர் ஒப்புக் கொள்ள மறுத்ததால் அவரது ரசிகர் மன்றத்தை உடைத்துஆட்களை இழுக்க முயன்றதும் நினைவுகூறத்தக்கது. ஆனால், பெருவாரியானரசிகர்களை ரஜினி அடக்கிவிட்டார்.

ஆங்காங்கே ஒரு சில மன்றத்தினரே பாமக தவிர்த்து ஏதாவது ஒரு கட்சிக்காகபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருணாநியின் இன்றைய பேட்டியில் மிக முக்கியமானது, கூட்டணி ஆட்சி குறித்து அவர் கூறியுள்ள கருத்து.முதலில் தனித்தே ஆட்சி என்றவர் பின்னர் தேவைப்பட்டால் வெளியில் இருந்து ஆதரவைப் பெறுவோம்என்றார். இப்போது அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் (யாருக்கும் மெஜாரிட்டி இல்லாமல்) மக்கள் வாக்களித்தால் அந்தத்தீர்ப்பை ஏற்று கூட்டணி ஆட்சி அமைக்கவும் திமுக தயங்காது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X