For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைசி நேரம் வரை நடராஜை காக்க முயற்சி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவிக்கு கடைசி நேரத்தில் 3 பேர்கொண்ட பட்டியலை தமிழக அரசு அனுப்பி வைத்தது. அதில் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரியான லத்திகா சரணை தேர்தல் ஆணையமே முடிவு செய்து ஆணையராகநியமித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசி சர்ச்சையில் சிக்கிய ஆணையர்நடராஜை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தேர்தல்ஆணைய உத்தரவுக்கு தமிழக அரசு கட்டுப்படத் தேவையில்லை, ஆனாலும்ஆணையத்துடன் பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்நிலையில் நடராஜ் குறித்து தங்களுடன் தமிழக அரசு பேச முன் வராததால் அவரைமாற்றுமாறு அரசுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் உத்தரவிட்டது.

மாற்று அதிகாரியை நியமிக்க 18ம் தேதிக்குள் 3 பேரை பரிந்துரைக்குமாறும்உத்தரவிட்டது. ஆனாலும் தமிழக அரசு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

இந் நிலையில் நேற்று மாலை வரை தமிழக அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது.இதையடுத்து நேற்று அவசர அவசரமாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியானகே.வி.எஸ். மூர்த்தி, டிஜிபி லத்திகா சரண், டிஜிபி நாஞ்சில் குமரன் ஆகியோரின்பெயர்களை தமிழக அரசு பரிந்துரைத்தது.

அதில் லத்திகா சரணை தேர்வு செய்த தேர்தல் ஆணையம் அவரை சென்னைகமிஷ்னராக நியமிக்குமாறு உத்தரவிட்டது.

ஆனாலும் இதுதொடர்பாக தமிழக அரசு மாலை வரை எந்த பதிலும் தராமல் அமைதிகாத்தது. நிலைமையின் தீவிரத்தை உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா தலைமைச்செயலாளர் நாராயணனுக்கு விளக்கியதாகவும்,

தேர்தல் ஆணைய உத்தரவை மீறினால் நாம் தான் பதில் சொல்ல வேண்டி வரும்.இதனால் இந்த உத்தரவை நானே அமலாக்கும் நிலைக்குக் கொண்டு போய்விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவிடம் நாராயணன் பேசியதாகவும்அதையடுத்தே நடராஜனை விலகச் செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து மாலையில், லத்திகா சரண் புதிய ஆணையராக பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் பதவி விலகிச் செல்லும் நடராஜ் பொறுப்புகளை ஒப்படைத்துவிடைபெற்றார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பதவியேற்கும் முதல் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி லத்திகா சரண் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் தலைமையககூடுதல் டிஜிபியாக இருந்து வந்தார். தற்போது அந்தப் பொறுப்பில் நடராஜ்நியமிக்கப்பட்டுள்ளார்.

90வது போலீஸ் கமிஷனர்:

சென்னை மாநகரின் 90வது ஆணையராக லத்திகா சரண் பதவியேற்றுள்ளார். கடந்த1856ம் ஆண்டசு சென்னை மாநகர காவல்துறையின் முதல் ஆணையராகஆங்கிலேயரான போல்டர்சன் என்பவர் பதவியேற்றார். 150 ஆண்டு காலபாரம்பரியம் மிக்க சென்னை மாநகர காவல்துறையின் 90வது ஆணையர் என்றபெருமை லத்திகா சரணுக்குக் கிடைத்துள்ளது.

சென்னை மாநகரின் முதல் பெண் ஆணையர் லத்திகா சரண் என்பதும் விசேஷமானஅம்சம். அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல் பெண் போலீஸ் கமிஷனரும்லத்திகா சரண்தான் என்பது இன்னும் சிறப்பான விஷயம்.

லத்திகா சரண் கேரளாவைச் சேர்ந்தவர். 1952ம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கிமாவட்டத்தில் பிறந்த லத்திகா சரண், படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.சென்னை கிறிஸ்தவ பெண்கள் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் சென்னைபல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்தார்.

பின்னர் 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார். முதல் பணி சேலத்தில். உதவிஎஸ்.பியாக பணியைத் தொடங்கிய லத்திகா சரண், பின்னர் திருப்பத்தூருக்குமாற்றப்பட்டார்.

தொடர்ந்து கோவை மாவட்ட எஸ்.பியாகவும், சென்னையில் தலைமையக துணைஆணையராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் சிபிசிஐடி எஸ்.பியாக இருந்தார். லஞ்சஒழிப்புப் பிரிவு டிஐஜியாகவும் பணியாற்றியுள்ளார்.

பதவியேற்றுக் கொண்டதும் லத்திகா சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மீதுநம்பிக்கை வைத்து இந்த மிகப் பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.மகிழ்ச்சியாக உள்ளது. தேர்தல் நேரம் இது. எனவே தேர்தல் பணிகளுக்குமுக்கியத்துவம் கொடுப்பேன்.

சட்டம் ஒழுங்கை காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்தல்நேர்மையா, அமைதியாக நடப்பதை உறுதி செய்வேன் என்றார் லத்திகா.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச-ஊழல் ஒழிப்புப் பிரிவில் இருந்த லத்திகா,முதல்வர் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரித்தவர் என்பது

குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின் சென்னை கமிஷ்னராகும் 7வது அதிகாரி லத்திகா.முதலில் காளிமுத்து, பின்னர் முத்துக்கருப்பன், விஜய்குமார், நட்ராஜ், நடராஜன்,மீண்டும் நட்ராஜ் ஆகியோர் பதவியில் இருந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X