For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தயாநிதி மீது சரத் தாக்கு-கடும் விளைவு ஏற்படும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த 8 ஆண்டு காலமாக திமக என்ற சிறையில் சிக்கித் தவித்த நான் இன்றுவிடுதலை பெற்றுள்ளேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை அதிபர், சசிகலாவின் கணவர் நடராஜன்ஆகியோரின் தீவிர முயற்சியால் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில்இணைந்துள்ளதாகக் கூறப்படும் நடிகர் சரத்குமார் தனது தேர்தல் பிரசாரத்தைசென்னையில் தொடங்கினார்.

சிங்கப்பூரில் வைத்து ராதிகா-குமாரை, நடராஜன் சந்திப்பதற்கு முன், அந்தப்பத்திரிக்கை அதிபரும் சரத்குமாரை சிங்கப்பூரில் வைத்து சந்தித்துப் பேசியதாகக்கூறப்படுகிறது.

நம் சமூகத்தினர் நடத்தி வந்த பத்திரிக்கையை சன் டிவி வாங்கிவிட்டது. அதே போலநாம் நடத்தி வரும் பிற பிஸினஸ்களிலும் இவர்கள் தலையிட வாய்ப்புள்ளது என்றுசரத்திடம் கூறிய பத்திரிக்கை அதிபர் ஒரு கட்டத்தில் கண் கலங்கிவிட்டதாகவும்,இதையடுத்தே திமுகவில் இருந்து விலகி விட சரத்குமார் முடிவு செய்ததாகவும்தகவல்கள் வருகின்றன.

மேலும் முன்னதாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் தினகரன் பத்திரிக்கைகுறித்தும், நடிகர் விஜய்யை அழைத்துப் போய் டெல்லியில் ஸ்டாம்ப் வெளியிட்டதுகுறித்தும் சரத் நேரடியாவே கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு மாறன் நேருக்கு நேர்முகத்தில் அடித்தது மாதிரி பதில் தந்துவிட்டதாகவும் தெரிகிறது.

உங்கள் ரசிகர் மன்ற வேலை, கட்சி வேலை, சினிமா வேலையை மட்டும் நீங்கள்பாருங்கள். எங்கள் விஷயத்தில் எல்லாம் தலையிட வேண்டாம் என்றுகூறிவிட்டாராம் தயாநிதி.

இதனால் கடுப்பில் இருந்த சரத்தை பத்திரிக்கை அதிபர், நடராஜன் மூலம் அப்படியேதிமுகவில் இருந்து உருவிவிட்டது அதிமுக என்கிறார்கள்.

ராதிகாவை தேர்தலுக்குப் பின் சன் டிவி வெளியேற்றும் என்று திடமாக நம்புகிறது சரத்தரப்பு. இதனால் தமிழக பத்திரிக்கை அதிபரே ஒரு டிவி ஆரம்பிப்பதாகவும் அதைராதிகாவே நடத்தலாம் என்றும் உறுதி தரப்பட்டுள்ளதாம். கூடவே சரத்தின் ரூ 20கோடி கடன் விஷயமும் கவனிக்கப்படுமாம்.

இந் நிலையில் அதிமுகவுக்கு ஆதரவாக தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்சரத்குமார். முதல் கட்டமாக வட சென்னைக்கு உட்பட்ட ஆர்.கே. நகர்தொகுதியிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.

முன்னதாக பிராட்வே காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டார் சரத்.

வீதி வீதியாகசென்று பிரசாரம் செய்த சரத்குமார் பேசுகையில்,

கடந்த எட்டு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்தேன். இப்போது விடுதலைபெற்று வெளியே வந்து விட்டேன். அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த என்னைஅதிமகவில் இணைத்துக் கொண்ட புரட்சித் தலைவிக்கு எனது முதல் வணக்கம்.

நான் சேர்ந்த இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயக முறையில்இயக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போத அது தயாநிதிமாறன் முன்னேற்றக் கழகமாகி விட்டது.

திரைப்படத் துறையில் பத்திரிக்கைத் தொடர்பாளர் என்று ஒருவர் இருப்பார். அவரைப்பார்க்க வேண்டும் என்றால் எல்லாப் புகைப்படங்களிலும் பார்த்தால் அத்தனையிலும்அவர் இருப்பார்.

புகைப்படம் எடுக்கும்போது எல்லோருடைய பக்கத்திலும் வந்து நின்றுகொண்டிருப்பார். அதேபோலத்தான் இன்று புகைப்படம் எடுக்கும் இடங்களில்எல்லாம் நின்று கொண்டு இருக்கும் ஒருவர் உண்டு என்றால் அவர்தான் தயாநிதிமாறன்.

திமுகவில் தயாநிதி மாறனுக்கு ஒரு கனவு, தளபதி என்று அழைக்கப்படுகிறஸ்டாலினுக்கு ஒரு கனவு, இவர்களுடைய கனவு தமிழகம் நன்றாக இருக்க வேண்டும்என்பதாக இல்லை, யார் முதலில் நாற்காலியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான்அவர்களது கனவு.

தலைவர் இருக்கும்போதே, இப்போதே திட்டம் தீட்டி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை மிகவும் வேதனையோடு சொல்கிறேன்.

எனக்கு 40 கோடி கொடுத்து விட்டார்கள், நான் விலை போய் விட்டேன் என்கிறார்கள்.நான் யாருக்கும விலை போகிறவன் அல்ல, பாசத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்.நியாயத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் இத்தனை காலம் திமுகவில் இருந்தேன்.

மக்களுக்கு அவர்கள் அநீதி இழைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால்தான்அங்கிருந்து வெளியேறி விட்டேன் என்றார் சரத்குமார்.

விஜய் மீது சரத் தாக்குதல்:இந் நிலையில் இன்று தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்யச் செல்லும் வழியில் மதுரையில் நிருபர்களிடம் பேசிய சரத்குமார்,

திமுகவில் இப்போது முதல்வர் பதவிக்கு ஸ்டாலினுக்கும் தயாநிதிக்கும் இடையே சண்டை துவங்கி விட்டது.அவர்களையடுத்து உதயநிதி உள்ளார். அந்தளவுக்கு குடும்ப அரசியல் தலைவிரித்து ஆடுகிறது. தரமில்லாதவர்கள் எல்லாம்பதவிக்கு சண்டை போடுகின்றனர்.

மேலும் எல்லா தொழில்களையும், பத்திரிக்கைகளையும், டிவி சேனல்களையும் தாங்களே நடத்த வேண்டும் என்ற சர்வாதிகாரஎண்ணமும் அவர்களிடம் பரவிக் கிடக்கிறது.

நான் அதிமுகவில் இணைந்ததால் தொழில்ரீதியாக எனக்கு நெருக்கடி வரலாம். என் வீட்டில் வருமான வரி சோதனை கூடநடக்கலாம். எதையும் சந்திக்க நான் தயார். எந்த நாட்டிலும் தொழில், பத்திரிக்கை, டிவி சேனல்கள் போன்ற துறைகளில் தனிமனித ஆதிக்கம் வந்து விட்டால் ஜனநாயகமே ஆபத்தாகி விடும்.

அதிமுக ஆட்சியில் நடந்த சாதனைகளை சொல்லி பிரசாரம் மேற்கொள்வேன்.குறிப்பாக மாணவ மாணவியருக்கு இலவச பாட புத்தகம், இலவச சைக்கிள்,மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களைமக்களிடம் சொல்லிபிரசாரம் செய்வேன்.

மத்திய அமைச்சராக இருக்கும் தயாநதி மாறன் அரசியல் நாகரீகமே இல்லாமல்,சென்னை மேடையில் சென்னை பாஷையில் ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா என்றுவைகோவைப் பார்த்து கேட்கிறார். அதை அவரது தாத்தாவும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அவர்களைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் அவர்கள்தான் செய்ய வேண்டும்,எல்லாப் பத்திரிக்கைகளையும் அவர்கள்தான் நடத்த வேண்டும். ஆதிக்கமனப்பான்மை அவர்களுக்கு வந்து விட்டது.

சர்வாதிகாரப் போக்குக்கு அவர்கள் வழி வகுத்து வருகிறார்கள்.

பெரிய நடிகர் ஒருவர் ரூ. 100 கோடிக்குப் பேரம் பேசப்பட்டதாக அரசியல் ஞானிகூறுகிறார். அவரே அந்த நடிகர் யார் என்பதையும் சொல்லட்டுமே. ஏன் தயங்குகிறார்?

முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர் பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குத் தாவஎவ்வளவு பணத்தை திமுக வாங்கியது என்பதையும் அப்படியே சொல்லட்டும். என்றார்.

உங்கள் மனைவி ராதிகா அதிமுகவுக்காக பிரசாரம் செய்வாரா? என்று கேட்டதற்கு,

என் குழந்தைக்கு இப்போது தான் இரண்டு வயதாகிறது. நிர்பந்திக்கப்படும்போது கண்டிப்பாக அவரும் பிரசாரம் செய்யவருவார்.என்றார்.

நிர்பந்தம் என எதை குறிப்பிடுகிறீர்கள்? என்று கேட்டதற்கு, போக போக பாருங்கள். நாகரீகம் கருதி சில உண்மைகளை நான்வெளியிடாமல் அமைதியாக இருக்கிறேன். என்னை சீண்டினால் திமுகவில் நடந்த கொடுமைகளை வெளியிடுவேன். அவற்றைவெளியிட்டால் திமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்றார்.

நீங்கள் அதிமுகவில் இணைந்ததை கண்டித்து உங்கள் மன்ற நிர்வாகிகள் விலகுவதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு,

என்னை பிடிக்காத சில பத்திரிக்கையில் தான் அப்படி செய்தி போடுகிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் ஜாதி கலவரத்தைஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். என் மீது சிறு கீறல் விழுந்தாலும் அதற்கு திமுகதான் காரணம் என்றார்.

நடிகர் விஜயை அழைத்து தபால் தலை வெளியிட்ட பிறகே திமுகவிலிருந்து விலக முடிவு செய்தீர்களாமே? என்று கேட்டதற்கு,மத்தியில் ஆட்சி அதிகாரத்தை திமுகவினர் தவறாக பயன்படுத்துகின்றனர். ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள்இருக்கின்றனர். அவர்களை விட்டுவிட்டு வருமான வரி சோதனைக்குள்ளான ஒரு நடிகரை அழைத்தற்கு என்ன காரணம்?

திமுகவில் இருந்து விலகியதற்கு அதுவும் ஒரு காரணம் என்றார் சரத்குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X