For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புண்ணியவதி ஆட்சி நீடிக்க வேண்டும்: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

பட்டினிச் சாவுகளைத் தடுத்து விவசாயிகளைக் காத்த இந்த புண்ணியவதியின் ஆட்சிநீடிக்க வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊர்களில் வைகோபிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது அதிமுக அரசுதான். மாணவ, மாணவியருக்குஇலவச சைக்கிள்கள், உழவர்களுக்கு அற்புதமான பாதுகாப்புத் திட்டம், திறமையானநிர்வாகம் என மக்கள் மனதை கவர்ந்து விட்டார் ஜெயலலிதா.

இந்தியாவில் விவசாயிகள் எங்கு பார்த்தாலும் தற்கொலை செய்து மடிந்தார்கள்.ஆந்திராவில் பட்டினிச் சாவு, கர்நாடகத்தில் பட்டினிச் சாவு, ஒரிஸ்ஸாவில் பட்டினிச்சாவு.

ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் விவசாயிகள் காப்பாற்றப்பட்டார்கள். இதற்குக்காரணம் புரட்சித் தலைவியின் ஆட்சி. அப்படிப்பட்ட புண்ணியவதியின் ஆட்சிநீடிக்க வேண்டும் என்று ஏழை, எளியவர்கள், குடிசைவாசிகள் என அனைவரும்முடிவு செய்து விட்டனர்.

200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும். இதை நான்அகந்தையோடு சொல்லவில்லை, மக்களின் முகத்தைப் பார்த்துச் சொல்கிறேன்,அவர்களின் அகத்தை அறிந்து சொல்கிறேன்.

திமுக கூட்டணிகலங்கிப் போய்க் கிடக்கிறது. அதிமுகவுக்கு ஆதரவாக வீசி வரும்அலையைப் பார்த்து பல தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள், இனியும் செலவுசெய்து பணத்தை வீணடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டதாக நான்கேள்விப்படுகிறேன்.

திமுக தொண்டர்கள் தங்களது உழைப்பு, ஏகபோகமாக ஒரு குடும்பத்திற்கு போவதைவிரும்பவில்லை என்றார்.

முன்னதாக தர்மபுரியில் பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ,

முதல்வர் ஜெயலலிதா மக்கள் கடலில் நீந்தி தான் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். செல்லும் இடமெல்லாம்இரட்டை இலைக்கே என் வாக்கு என மக்கள் கூறுகிறார்கள். திடீரென கருணாநிதி கூட்டணி ஆட்சிக்குத் தயார்என்கிறார். நீங்கள் தயாராக இருக்கலாம். மக்கள் தயாராக இல்லை. எதிர்க் கட்சி வரிசையில் கூட உங்களைஉட்கார வைக்க மக்கள் தயாராக இல்லை.

திமுகவின் சேனாதிபதி என்று கூறப்படும் ஒருவர் (ஸ்டாலின்) சட்டசபைக்கு வருவதும் தெரியாது. போவதும்தெரியாது. அவரது தகப்பனார் வராண்டாவில் வந்து கையெழுத்துப் போட்டுவிட்டு மாத சம்பளத்தை தவறாமல்பெற்று வந்தார்.

ஏழை, எளிய மக்களின் கவலையைத் துடைத்து கண்ணீரையும் துடைத்தவர் ஜெயலலிதா. அரிசி விஷயத்தில்மத்திய மந்திரி சிதம்பரம் டெல்லியில் ஒரு பேச்சு மைலாப்பூரில் ஒரு பேச்சு என்று பித்தலாட்டம் செய்துவருகிறார். அதே போல இலவச கலர் டிவிக்கு கணக்கெடுப்பு நடத்துகிறேன் என்று பித்தலாட்டத்தில்இறங்கியிருக்கிறார் கருணாநிதி.

இதற்காக சிலரை ஏவி விட்டு வீடுதோறும் போகச் சொல்லியிருக்கிறார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்,எக்காரணம் கொண்டும் ரேசன் கார்டுகளை அவர்களிடம் கொடுத்துவிடாதீர்கள், திரும்பி வராது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X