For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இமையில் இலையை குத்தி பிரச்சாரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேர்தல் நேரம் இது. எங்கு பார்த்தாலும் பிரசார கலக்கல்களுக்கும், காமெடிக்காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.

அவை குறித்த ஒரு தொகுப்பு:

எழும்பூர் தொகுதியில் மதிமுக சார்பில் மல்லை சத்யா போட்டியிடுகிறார். அவருக்குஆதரவாக மதிமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் படு தீவிரமாகவாக்கு சேகரித்து வருகின்றனர்.

மதிமுக மகளிர் அணி சார்பில் வித்தியாசமான முறையில் பிரசாரம் நடந்து வருகிறது.மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் ராட்சச பம்பரத்தை எடுத்துக் கொண்டு வீதி வீதியாகசென்று வாக்கு சேகரிக்கிறார்கள். பம்பரத்துடன் வரும் மகளிரணியினரைவாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

(ஆனால், இதைப் பார்க்கும் திமுக கூட்டணியினர் நடிகை தொப்புளில் விஜய்காந்த்விட்ட பம்பரத்தை இது ஞாபகப்படுத்துகிறதப்பா என்று நக்கல் அடிக்கிறார்கள் என்பதுவேறு விஷயம்!)

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி அதிமுகவினர் வேறு விதமாக கலக்கி வருகின்றனர்.இத்தொகுதியில் போட்டியிடும் சேகர்பாபுவுக்கு ஆதரவாக பெரும் பட்டாளமேகளத்தில் குதித்துள்ளது. ஆளுக்கொரு பாணியில் பிரசாரத்தை தூள் கிளப்பிவருகின்றனர்.

பெரிய ஈச்சை மர இலையை இரட்டை இலை வடிவில் மாற்றி அதை மோட்டார்சைக்கிளில் வைத்துக் கொண்டு வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார்கள்அதிமுகவினர்.

தமிழகத்தில் இப்படி என்றால் புதுவை பாஜகவினர் இன்னும் ஒரு படி மேலே போய்,தாமரை வடிவிலான முகமூடியை (மாஸ்க்) முகத்தில் அணிந்து கொண்டு (கண்தெரிவதற்காக இரண்டு ஓட்டைகள் உண்டு) உங்க ஒட்டு தாமரைக்கே என்று கூவிக்கூவி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

முகமூடியை அணிந்து செல்பவர்கள் பாஜகவின் தொண்டர்கள் அல்ல, வாக்களிக்கும்வயசுக்கே வராத சின்னஞ் சிறுவர்கள் என்பதுதான் இங்கே முக்கியம்.

கண்டமங்கலம் தொகுதி அதிமுக தொண்டர் சிவக்குமார் அத்தனை பேரையும் தூக்கிசாப்பிடும் வகையில் அசத்தலாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தனது இடது கண்இமையில் இரட்டை இலையை ஒரு சேஃப்டி பின்னில் செருகி, அதை இமையில்குத்திக் கொண்டு வீதி வீதியாக வலம் வந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார்.

இதுதவிர, எங்க கட்சி ஜெயித்தால் மொட்டை போடுகிறோம், அவங்க ஜெயித்தால்நாக்கை அறுக்கிறோம், கட்டை விரலை துண்டித்துக் கொள்கிறோம் என்று ரொம்பஎக்ஸ்ட்ரீமான வேண்டுதல்களும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

தேர்தல் முடியும் வரை இப்படித்தான், பொறுத்துக்க வேண்டியதுதான்.

தாயார் வேட்பு மனு தாக்கல்:

இந் நிலையில் கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாசர் என்ற கைதி, கோவை மேற்குதொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் நாசர். இவர் கோவை தொடர்குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பிய அவர் தன்னைபரோலில் அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால்நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து நாசரின் தாயார் அலிமா பீவி மற்றும் குடும்பத்தினர் நாசர் சார்பில்கோவை மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரியிடம் மனுவைத் தாக்கல் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X