For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேட்பு மனு வாபஸ் இன்றே கடைசி: மாலையில் இறுதிப் பட்டியல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். மாலையில் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 13ம் தேதி முதல் 20ம் தேதி வரைநடந்தது. 21ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 3,728 மனுக்களில் 870 மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டன. 2,858 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று மாலை வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.3 மணி வரை மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

மனு வாபஸ் பெறுவதற்கான கெடு முடிந்ததும், சுயேச்சை வேட்பாளர்களுக்கானசின்னங்கள் ஒதுக்கப்படும். அப்போது தான் விஜய்காந்த் கட்சிக்குக் கிடைக்கும்சின்னங்கள் பட்டியல் தெரிய வரும்.பாதுகாப்பில் உதவி ஆணையர்கள்

இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறையின் கீழ் வரும் 19 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தலா ஒரு உதவி ஆணையர் தலைமையில் பாதுகாப்பு பணிகள்மேற்கொள்ளப்படவுள்ளன.

நகரில் உள்ள 14 தொகுதிகளும் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 5 தொகுதிகளும் சென்னை மாநிகர காவல்துறையின் கீழ் வருவதால் மாநகரபோலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இந்தத் தொகுதிகளில் மொத்தம் 5,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 230 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாகஅடையாளம் காணப்பட்டுள்ளன. மாநகர காவல்துறையின் புதிய ஆணையராக பதவியேற்றுள்ள லத்திகா சரண், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முதல் கட்டமாக 19 தொகுதிகளுக்கும் தலா ஒரு உதவி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் தொகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளைமேற்பார்வையிட்டு தக்க நடவடிககை எடுப்பார்கள்.

பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ள சில வாக்குச் சாவடிகளை லத்திகா சரண் நேரில் சென்றும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X