For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

200 தொகுதிகளில் வெல்வோம்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று திகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கரூரில் இன்று செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், காவிரி நடுவர்மன்றத்தின் புதிய உத்தரவு காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே, தீவிரப் பிரசாரத்திற்கு இடையேயும்,சென்னையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

வரும் 4ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இதுகுறித்துபேசப்படும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் மத்திய அரசு தலையிடுவதுஅவசியமாகியுள்ளது.

கடந்த சட்டசபை இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்ற பின்னர்ஜெயலலிதா, ரேஷன் அரிசியின் விலையை ரூ. 6 ஆக உயர்த்தினார். எதிர்க்கட்சிகளின்கடும் எதிர்ப்பையடுத்து அதை ரூ. 3.50 ஆக குறைத்தார்.

இன்னும் விலை குறைவாக ரேஷன் அரிசி வழங்கப்பட வண்டும் என்பதற்காகத்தான்நாங்கள் கிலோ அரிசி ரூ. 2 என்று கூறியுள்ளோம். அதை ஆட்சிக்கு வந்த பின்னர்நிச்சயம் நறைவேற்றுவோம்.

வரும் சட்டசபைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றிகிடைக்கும். 200 தொகுதிகள் குறையாமல் வெற்றி பெறுவோம் என்றார் கருணாநிதி.

சிங்கத்துக்கு தடையா?:

முன்னதாக நேற்று முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில்திமுக வேட்பாளர் சீமானை ஆதரித்துப் பிரசாரம் செய்தார் கருணாநிதி. அவர்பேசுகையில்,

சொன்னதைச் செய்வோம் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறோம்.விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம். நிலமற்றவிவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் நிச்சயமாக வழங்கப்படும்.

தாய்மார்களுக்கு பொழுதுபோக்க கலர் டிவி தரப்படும். மொத்தமாக கலர் டிவியைவாங்கும் போது அதன் விலை 2,000 ரூபாயாகத்தான் இருக்கும். கலர் டிவியைவாங்கும் திட்டத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுதான் அமல்படுத்தும்.

பெண்களுக்கு திருமண உதவித் தொகை ரூ. 10,000 வழங்கப்பட்டு வந்தது. அதைபின்னர் வந்த அதிமுக அரசு ரத்து செய்து விட்டது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்குவந்தால் அத்தொகையை ரூ. 15,000 ஆக உயர்த்திக் கொடுப்போம்.

தம்பி கார்த்திக் இன்று படாதபாடு பட்டு வருகிறார். அவர் சில தொகுதிகளில்வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். ஆனால் அவர்களை வாபஸ் பெறச் சொல்லிமிரட்டுகிறார்கள்.

படாதபாடு படுத்துகிறார்கள். சிலர் ஓடி ஒளிகிறார்கள், சிலர் கடத்தப்படுகிறார்கள்,ஒருவர் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளார்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் கூட அக்கட்சி வேட்பாளரை வாபஸ் பெறவைத்துள்ளனர். கார்த்திக் கட்சியின் சிங்கம் சின்னத்தைப் பார்த்துத்தான் இப்படிப்பயப்படுகிறார்கள்.

நாட்டில் சிறுத்தைகள் நடமாடலாம், சிங்கங்கள் நடமாடக் கூடாதா? சிங்கம்சின்னத்தைத் தடை செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.

வெட்டுவேன், குத்துவேன் என்று பார்வர்ட் பிளாக் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள்.

கார்த்திக் என்ற வாலிபருக்காக, சாதாரண நடிகருக்காக பயந்து போய்,போலீஸாரையும், குண்டர்களையும் ஏவத் துணிந்துள்ள இந்த அரசு நீடித்தால் நாடுஎன்னவாகும் என்பதை எண்ணிப் பாருங்கள் என்றார் கருணாநிதி.

கணிப்புக் கருத்தில் தவறில்லை:

பின்னர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

திமுகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளதாகக் கூறுகிறீர்கள். அதைத்திருப்பிப் போட்டுப் பாருங்கள், அதாவது கணிப்புக் கருத்து. இதில் தவறில்லை.மக்கள் கருத்துதான் எல்லாவற்றையும் விட முக்கியம். மக்கள் கணிப்பு எங்கள்பக்கம்தான். 200க்கும் மேல் வெற்றி உறுதி.

நாங்கள் வன்முறையைத் தூண்ட யற்சிப்பதாக புகார் கூறினார் ஜெயலலிதா. அதைஅத்தனை எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக எதிர்த்ததால் இப்போது அதுகுறித்துப்பேசுவதை விட்டு விட்டார்.

மதுரையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தியுடன், நான்மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு பேசவுள்ளனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X