For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜய்காந்த் கட்சிக்கு முரசு, மோதிரம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தே.மு.தி.க கொடிகள், பேனர்களை போலீஸார் தேவையில்லாமல் அகற்றி வருவதற்குஎதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்புமறியல் செய்தார் நடிகர் விஜயகாந்த்.

வட சென்னை தொகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். துறைமுகம் தொகுதியில்அவர் பிரசாரம் மேற்கொண்டபோது, போலீஸார் தேவையில்லாமல் கட்சிக்கொடிகளையும், பேனர்களையும் அகற்றி விட்டதாக தொகுதி நிர்வாகிகள்விஜயகாந்த்திடம் புகார் கூறினர்.

இதைக் கேட்டதும் கோபமடைந்த விஜயகாந்த். பிரசாரத்தை நிறுத்தினார். மைக்கில்,போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து நான் ஆணையர் அலுவலகம் முன் மறியல்செய்யப் போகிறேன் என்று கூறி விட்டு பிரசார வேனிலேயே தொண்டர்களுடன்ஆணையர் அலுவலகத்தை நோக்கி விரைந்தார்.

ஆணையர் அலுவலக வாசலில் விஜயகாந்த்தும் மற்றவர்களும் மறியலில்ஈடுபட்டனர். பின்னர் ஆணையரை சந்தித்துப் புகார் மனு கொடுக்க விஜயகாந்த் முடிவுசெய்து உள்ளே செல்ல முயன்றார்.

ஆனால் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரை உள்ளேஅனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டம்தொடர்ந்தது.

இதைத் தொடர்ந்து உதவி ஆணையர்கள் விட்டல்ராமன், இளங்கோ ஆகியோர்விஜயகாந்த்தை வாசலுக்கு வந்து சந்தித்தனர்.

அவர்களிடம் நான் ஆணையரைப் பார்த்து புகார் மனு கொடுக்க வேண்டும் என்றுவிஜயகாந்த் கூறினார். அதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பின்னர் விஜயகாந்த் ஆணையர் லத்திகா சரணை சந்தித்துப் புகார் கொடுத்தார்.வெளியில் வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எங்களது கட்சி கொடிகளையும், பேனர்களையும் போலீஸார் தேவையில்லாமல்அகற்றி வருகிறார்கள். மற்ற கட்சிகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதை நான்பலமுறை கண்டிததும் போலீஸார் தங்களது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

இதனால்தான் ஆணையரை சந்தித்துப் புகார் கொடுத்தேன்.

ஆணையர் நல்ல முறையில் பேசினார். சட்டவிதிகளுக்கு உட்பட்டு பேனர்கள்,கொடிகள் கட்ட அனுமதி அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

நாங்கள் ஏழைக் கட்சி. சிறிய அளவில்தான் பேனர்கள், கொடிகளை கட்டுகிறோம்.அத்தனையும் தொண்டர்களின் சொந்தக் காசில் செய்யப்படும் செலவுகள். எனவேகொடி, பேனர் கட்டுவதற்கு போலீஸார் எங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்றார்விஜயகாந்த்.

முன்னதாக திமுகவினரின் பேனர்களிலும் இதே போல போலீசார் கை வைக்கப் போய்அவர்கள் கும்பலாக வந்து பிரச்சனை செய்ததால் அந்த வேலையை விட்டுவிட்டனர்.

இப்போது விஜய்காந்த் பேனர் பின்னால் அலைவதை போலீசார் ஒரு வேலையாகவைத்துள்ளனர்.

கேப்டனுக்கு முரசு சின்னம்:

இதற்கிடையே விருதாசலத்தில் போட்டியிடும் நடிகர் விஜயகாந்த்துக்கு முரசு சின்னம்ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கு முரசு மற்றும் மோதிரம்சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை 6 தேசியக் கட்சிகளும், 4 பிராந்தியக் கட்சிகளும்உள்ளன. இவற்றுக்கு அவற்றிற்குரிய நிரந்தர சின்னங்கள் ஒதுக்கப்படும். இவை தவிரபார்வர்ட் பிளாக் போன்ற பிற மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும்அக்கட்சிகளுக்குரிய சின்னம் ஒதுக்கப்படும். அதுபோல மொத்தம் 11 கட்சிகள்உள்ளன.

மற்றவர்களுக்கு சுயேச்சைகளுக்கான சின்னங்கள்தான் ஒதுக்கப்படும்.சுயேச்சைகளுக்கு ஒதுக்குவதற்காக 71 சின்னங்கள் தயாராக உள்ளன. நடிகர்விஜயகாந்த் கட்சி வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களாகவேகருதப்படுவார்கள்.

இருப்பினும் விஜயகாந்த் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவுசெய்யப்பட்டிருப்பதால் அவர்கள் கோரும் சின்னங்களை ஒதுக்குவதில் அவர்களுக்குமுன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

ஒருவேளை அவர்கள் கேட்கும் சின்னத்தை வேறு யாராவது கேட்டால் குலுக்கல்முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

விஜயகாந்த் தனது கட்சிக்கு முரசு, ஆலயமணி, மோதிரம் ஆகியவற்றில் ஒன்றைபொதுவான சின்னமாக ஒதுக்க கோரியிருந்தார். இதில் முரசும் மோதிரமும் அந்தக்கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X