For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப.சி தரும் புள்ளி விவர டென்சன்-ஜெ. பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காகவும் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகவும் மத்திய அரசால்அளிக்கப்பட்ட உதவிகள் குறித்து தப்பும் தவறுமாக புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்வெளியிட்டு வருவாத முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காகவும் சுனாமி நிவாரணப்பணிகளுக்காகவும் அளிக்கப்பட்ட உதவி குறித்து தப்பும் தவறுமாக புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறார்.

சிதம்பரத்தின் பசப்பு, பாசாங்கு வார்த்தைகளால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் வேதனைக்குஉள்ளாக்கப்படுகின்றனர் என்ற வலி தெரியாமல் மேட்டுக்குடி பிரபுத்துவ மன நிலையோடு பொய்க் கூற்றுக்களைவேடிக்கையாக வீசிக் கொண்டே போகிறார்.

சொன்னதையே சொல்லும் கிளிப் பிள்ளை போல தமிழக அரசுக்கு மத்திய அரசு சுனாமி நிவாரணத்துக்காக ரூ.5,025.56 கோடி வழங்கியதாக திரும்பத் திரும்ப தவறான தகவலை பேசி வருகிறார்.

அவரது கபடத்தனத்தை நான் சட்டமன்றத்திலேயே தோலுரித்துக் காட்டினேன். தமிழக அரசு பெற்ற கடனைக் கூடமத்திய அரசு வழங்கியது மாதிரி பொய்க் கதை கட்டி வருகிறார் சிதம்பரம்.

மத்திய அரசு அளிப்பதாக உறுதியளித்த தொகை ரூ. 2,347.19 கோடி. ஆனால், தந்தது வெறும் ரூ. 820.31 கோடிமட்டுமே. இதன்மூலம் தமிழ்நாட்டை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார் சிதம்பரம்.

அதே போல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை தமிழக அரசு ஒரு வீடு கூட கட்டித் தரவில்லைஎன்றும் கூறியிருக்கிறார் சிதம்பரம். ஆனால், மாநில அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதுவரை7,835 வீடுகளைக் கட்டி உள்ளன (தமிழக அரசு மட்டும் கட்டிய வீடுகள் எத்தனை? இதில் ஏன் தன்னார்வநிறுவனங்கள் கட்டிய வீடுகளையும் தமிழக அரசு தனது கணக்கில் சேர்க்க வேண்டும்??) என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

சிதம்பரத்தின் பிரச்சார பாணி:

இதற்கிடையே ப.சிதம்பரம் தனது ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும், கையில் பேப்பருடன் தமிழக அரசுக்குஅனுப்பப்பட்ட நிதி, கடன் தொகை, மானியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் கிடைக்கச் செய்த கடன்தொகை, இதில் தமிழக அரசு பயன்படுத்திய நிதி, பயன்படுத்தாத நிதி என புள்ளி விவரங்களுடன் விளக்கிக் கூறிவருகிறார்.

நர்சரி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருவது மாதிரி சிக்கலான நிதி விஷயங்களை மிக எளியாைக விளக்கிபுட்டுப் புட்டு வைத்து வருகிறார் சிதம்பரம். இது மக்களிடையே எளிதாகவும் ரீச் ஆகி வருகிறது.

குறிப்பாக கடலூர் போன்ற சுனாமி பாதித்த பகுதிகளில் பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குதமிழக அரசு இதுவரை ஒரு வீடு கூட கட்டித் தரவில்லை என்பதை தனது பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தினார்சிதம்பரம். அவரது பேச்சுக்கு பெரும் வரவேற்பு இருந்தது.

ஜெ. குழப்புவது ஏன்?

இந் நிலையில் தான் ஜெயலலிதாவிடம் இருந்து பாய்ச்சல் அறிக்கை பறந்து வந்துள்ளது. ஆனால், அதில் கூடசுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு கட்டிய வீடுகள் எத்தனை என்ற விவரம் இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசும் சேர்ந்து 7,935 வீடுகள் கட்டியுள்ளதாக பொத்தம்பொதுவாகவே கூறியுள்ளார் ஜெயலலிதா.

உண்மையிலேயே அரசு வீடுகளைக் கட்டித் தந்திருந்தால் அந்த எண்ணிக்கையை மட்டும் தெளிவாக, குழப்பாமல்சொல்லிவிடலாமே?

கருணாநிதி தொகுதியில் மே 3ல் பிரசாரம்:

இதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா மே 3ம் தேதி பிரசாரம் செய்கிறார்.

தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, வெளிமாவட்ட பிரசாரத்தை முடித்து விட்டு மே 3ம் தேதி சென்னைதிரும்புகிறார்.

அடுத்த மூன்று நாட்களும் சென்னையில் உள்ள 14 தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஐ.ஜி. அலுவலகத்திலிருந்து 3ம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி,பிராட்வே, ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக பிரசாரம் மேற்கொள்கிறார்.

4 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் அவர் சென்னையில் பிரசாரம் செய்கிறார். 5ம் தேதி அவர் ஓய்வு எடுக்கிறார். 6ம் தேதியுடன் தனது பிரசாரத்தைமுடிக்கிறார் ஜெயலலிதா. அன்றோடு தேர்தல் பிரசாரமும் முடிவுக்கு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X