For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் ரிலீஸ்!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

அதிமுகவினரிடமிருந்து காப்பாற்ற மதுரை கல்யாண மண்டபத்தில் பாதுகாப்பாகவைக்கப்பட்டிருந்த பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்கள் விடுவிக்கப்பட்டு அவரவர்தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்களை அதிமுகவினர்கடத்திச் சென்று மிரட்டியும், பண ஆசை உள்ளிட்ட பல்வேறு ஆசைகளைக் காட்டியும்போட்டியிலிருந்து விலக வைக்கப்பட்டனர்.

இப்படியாக 3 வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகினர். ஒரு வேட்பாளர்தற்கொலையே செய்து கொண்டார். கார்த்திக்கும், அவரது குடும்பத்தினரும் கூடமிரட்டலுக்கு ஆளாகினர்.

இதைத் தொடர்ந்து தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் மதுரைக்குவரவழைக்க முயன்றார் கார்த்திக். இதில் பாதியே வெற்றி கிடைத்தது. சுமார் 35 பேர்மட்டுமே வந்தனர். மற்றவர்கள் அதிமுகவினரின் பிடியில் இருந்ததால் வர முடியாமல்போய்விட்டது.

வந்தவரை வேட்பாளர்களைக் காப்பாற்றி, திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்யாணமண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தார் கார்த்திக். அவர்கள் வெளியில் செல்லஅனுமதிக்கப்படவில்லை.

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்து, பார்வர்ட்பிளாக் கட்சி வேட்பாளர்களுக்கு சிங்கம் சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்துஅனைத்து வேட்பாளர்களும் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வேட்பாளர்கள்அனைவரும் தங்களது தொகுதிகளுக்குக் கிளம்பிச் சென்றனர்.

சிங்கம் வெல்லும், கோட்டைக்குச் செல்லும்:

அதற்கு முன் வேட்பாளர்கள் மத்தியில் பேசிய கார்த்திக்,

நம்மை விலை கொடுத்த வாங்க முயன்றவர்கள் தோற்றுப் பாய் விட்டார்கள். மக்கள்தேவையை மனதில் கொண்டு தேர்தலில் பணியாற்றி வெற்றிக்காக பாடுபடுங்கள்.

நம்மைச் சீண்டிப் பார்த்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டுங்கள். சிங்கம் வெல்லும்,கோட்டைக்குச் செல்லும் என்றார் கார்த்திக்.

பின்னர் தனது பிரசாரத்தைத் தொடங்கிய கார்த்திக் முதுகுளத்தூரில் தனிக்கொடித்தேவரை ஆதரித்துப் பேசினார். அப்போது, நமது இயக்கம் சுபாஷ் சந்திரபோஸ்,முத்துராமலிங்கத் தேவர், மூக்கையா தேவர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அந்தஇயக்கத்தின் சிங்கச் சின்னத்தை அழிக்கப் பார்த்தார்கள். ஆனால் தோல்வியையேதழுவினார்கள்.

நமக்கு இளைஞர்கள், மக்கள் ஆதரவு மட்டுமின்றி இறைவனின் ஆசியும் உள்ளது.எனவே இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள்.எனக்கு உயிர் பயம் கிடையாது.

நமது குடும்பங்கள் வளமாக வாழ எத்தனை இடையூறுகள் வந்தாலும் மனஉறுதியோடு பாடுபடுவேன். சிங்கம் சிலிர்த்து எழுந்து விட்டது. அதன் வெற்றி உங்கள்கையில்தான் உள்ளது என்றார் கார்த்திக்.

உசிலையில் சிங்கம் முடக்கம்:

இந் நிலையில் உசிலம்பட்டி தொகுதியில் மட்டும் சிங்கம் சின்னம்முடக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சிக்கே சிங்கம் சின்னத்தை ஒதுக்கதேர்தல் ஆணையம் சமீபத்தில் முடிவு செய்தது. அதன்படி கார்த்திக் கட்சிவேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் சிங்கம் சின்னம் நேற்றுஒதுக்கப்பட்டது.

ஆனால் உசிலம்பட்டியில் மட்டும் இச்சின்னம் முடக்கி வைக்கப்பட்டது.உசிலம்பட்டியில் பார்வர்ட் பிளாக் சார்பில் முத்தையா பசும்பொன்நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தனக்கு அதிகாரப்பூர்வமான சிங்கம் சின்னத்தை ஒதுக்ககடிதம் கொடுத்திருந்தார்.

அதேசமயம், இதே தொகுதியில் பாட்டியிடும் சுரேந்திரன் என்பவரும் சிங்கம்சின்னத்தைக் கோரியிருந்தார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் அவர் வழக்குதொடர்ந்துள்ளார்.

மேலும், கோவாவில் உள்ள மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி சார்பில் தான்போட்டியிடுவதாகவும், அக்கட்சியின் சின்னம் சிங்கம் என்பதால் எனக்கும் அதேசின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். (இந்த விவகாரத்தைநாம் முன்பே சொல்லியிருந்தோம்)

இதனால் சிங்கத்தை யாருக்கு ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து யாருக்கும் சிங்கச் சின்னம் கிடையாது என்றும் இருவரும் தனித் தனிசின்னங்களை ஒதுக்கவும் தொகுதி தேர்தல் அதிகாரி திணேஷ் பொன்ராஜ ஆலிவர்உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கார்த்திக் கட்சி வேட்பாளர் முத்தையா பசும்பொன்னுக்கு அரிவாள்சின்னமும், சுரேந்திரனுக்கு மணியும் ஒதுக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X