For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாடாவை மிரட்டினாரா தயாநிதி?: வைகோ கிளப்பிய புயல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டாடா நிறுவனததின் டிடிஎச் சேவை திட்டத்தை சன் டிவியிடம் ஒப்படைத்து விடுமாறுஇந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் ரத்தன் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மிரட்டியதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது தேர்தல் பிரசாரத்தின்போது டாடா -தயாநிதி மாறன் விவகாரம் குறித்து முதல் முறையாக பரபரப்பான தகவல்களைவெளியிட்டார்.

அதன் விவரம் இது தான்:

டாடா நிறுவனமும், ஸ்டார் டிவி நிறுவனங்களின் அதிபருமான பெரும் தொழிலதிபர்ரூபர்ட் முர்டோச்சும் இணைந்து டிடிஎச் சேவையை இந்தியாவில் தர முடிவு செய்தனர்.எந்தவித கேபிள் இணைப்பும் இன்றி சாட்டிலைட் டிவிகளை பார்க்கும் வகையிலானதிட்டம் இது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் இந்த டிடிஎச் திட்டத்தை செயல்படுத்தடாடாவும், ஸ்டாரும் முடிவு செய்திருந்தன. இதில் டாடா நிறுவனத்தின் பங்கு 80சதவீதம். ரூபர்ட்டின் பங்கு 20 சதவீதமாகும்.

இந்த இடத்தில்தான் சன் டிவி நிறுவனம் குறுக்கிட்டுள்ளது. ஏற்கனவே டிடிஎச்திட்டத்தை அமல்படுத்த உரிமம் பெற்று வைத்துள்ள சன் டிவி நிறுவனம்,இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு சிக்கலை எதிர்கொண்டது.

அதாவது, டிவி நிறுவனத்தை நடத்தி வருவதால், சன் டிவி டிடிஎச் சேவையை நடத்தவேண்டும் என்றால் அத்திட்டத்தில் 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துக் கொள்ளமுடியும். மீதள்ள 80 சதவீத பங்குகளுக்கு வெளியாட்களைத் தேட வேண்டும்.

மேலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களையும் (குறைந்தது ரூ. 3000 கோடிஎன்கிறார்கள்) முதலீடாக போட வேண்டும். இதே பிரச்சினை காரணமாகத்தான் ஸ்டார்டிவி நிறுவனம் 20 சதவீத பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டு மீதமள்ள 80சதவீதத்திற்காக இத்திட்டத்தில் டாடா நிறுவனத்தையும் சேர்த்துக் கொண்டது.

எதிர்காலத்தில் டிடிஎச் சேவைதான் நிலைக்கப் போகிறது என்பதால் தனக்கெனதனியாக ஒரு டிடிஎச் சேவையை வைத்துக் கொண்டாக வேண்டும் என்று நினைத்த சன்டிவி, அதேசமயம், பல ஆயிரம் கோடியை முடக்க மனம் இல்லாமல், டாடாவின்திட்டத்தில் புகுந்து அதன் மூலம் பலன் பெற நினைத்தது.

இதையடுத்து முதலில் கலாநிதி மாறன் களம் இறங்கினார். டாடா நிறுவனத்துடன்தொடர்பு கொண்ட அவர் சன் டிவியையும் இதில் ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொள்ளவேண்டும், 33 சதவீத பங்குகளை தங்களுக்குத் தர வேண்டும், நிர்வாக உரிமையும் தரவேண்டும் மற்றும் இன்ன பிற சலுகைகளையும் தர வேண்டும் என்று அவர் சார்பில்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கலாநிதி மாறன், நேரடியாக டாடாவிடம் தொலைபேசியில் இதுதொடர்பாககோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை உடனடியாக நிராகரித்து விட்டார் டாடா. எங்களுக்கு பங்குதாரர் யாரும்தேவையில்லை. இந்தத் திட்டம் முடிவாகி விட்டது. இதில் சன் டிவியை சேர்க்கவேமுடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இதையடுத்து கலாநிதியின் தம்பியும், டிடிஎச் சேவை தொடர்பான அனுமதியைத் தரும்முக்கியத் துறையைக் கையில் வைத்துள்ளவருமான தயாநிதி மாறன் நேரடியாககளத்தில் இறங்கினார்.

அவரும் டாடாவுடன் பேசியுள்ளார். நெருக்குதல் தரும் வகையில் பேசியதால்அதிர்ந்து போயுள்ளார் டாடா.

இதேபோல ரூபர்ட் முர்டோச்சையும் தொடர்பு கொண்ட கலாநிதி இத்திட்டத்தில் 33சதவீத பங்குகளுடன் பங்குதாரராக சன் டிவியையும் சேர்க்க வேண்டும் என்றுகோரியுள்ளார். ஆனால் ரூபர்ட் இதை மறுத்து விட்டார்.

இதைத் தொடர்ந்து, எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், உங்களது டெலிகாம்பிசினஸை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் என்று தயாநிதி மாறன் மிரட்டினார்.

மேலும் டாடா டெலிகாம் நிறுவனம் தொடர்பான பல்வேறு கோப்புகளை தயாநிதிநிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொலைத்தொடர்புத் துறையில் தற்போது நிலவும் கடும் போட்டியான சூழலில்அமைச்சகத்தின் ஒப்புதல்கள், அனுமதிகள் உடனடியாக கிடைக்காவிட்டால் பெரும்நஷ்டம் ஏற்படும்.

இதை டாடா உணர்ந்திருந்தாலும் கூட, தயாநதி மாறனின் நெருக்கடிக்குப் பணியமறுத்து விட்டார். என்ன வந்தாலும் சமாளிக்க அவர் தயாராகி விட்டார்.

இதுதான் வைகோ தெரிவித்த புகார்.

இந்தப் புகார் குறித்து சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு ஆங்கில நாளிதழ் டாடாகுழுமத்திற்கு நேரடியாகவே கேள்விப் பட்டியல் ஒன்றை அனுப்பி வைத்தது.

அதில் தயாநிதி மாறன் மிரட்டல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

அதற்கு டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர் உடனடியாக பதில் அனுப்பியுள்ளார்.அதில், உங்களது கேள்விகளுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X