For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரட்டை அரங்கத்துக்கு சன் டிவி ஆப்பு!: எஸ்வி சேகர் தூண்டில்- அதிமுகவில் விசு!

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

நாடக, சினிமா நடிகர், இயக்குனரான அரட்டை அரங்கம் புகழ் விசு, முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இணைந்த கையோடுஎதிர்பார்த்தது மாதிரியே சன் டிவி மீது பல்வேறு புகார்களை அடுக்கினார்.

விசுவை அதிமுகவுக்குக் கொண்டு வரும் வேலையை அவரது சிஷ்யரானஎஸ்.வி.சேகரிடம் அதிமுக தலைமை தந்திருந்தது.

அரட்டை அரங்கத்தை ஜெயா டிவிக்கு ஷிப்ட் செய்யலாம், துட்டும் ஜாஸ்தி தரப்படும்,அரசியல்ரீதியாகவும் உதவிகள் கிடைக்கும், பதவியும் தரப்படும் போன்றஉறுதிமொழிகளைத் தந்து அவரை கொண்டு வந்துள்ளார் எஸ்.வி.சேகர் என்கிறார்கள்.

S.V.Saker&Visu

நாடக நடிகராக இருந்த எஸ்.வி.சேகரை சினிமாவுக்குக் கொண்டு வந்தது விசு தான்என்பது குறிப்பிடத்தக்கது. விசுவும் அப்போது நாடகங்களில் பிரபலமாக இருந்தார்.எஸ்.வி.சேகரைப் போலவே விசுவும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மணல் கயிறு படத்தில் (இதில் தான் ஹீரோவாக அறிமுகமானார் எஸ்வி சேகர்) ஆரம்பித்துசம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி என பல வெற்றிப் படங்களைதந்தவர் விசு. திரைப்பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த பின்னர் சன் டிவியில்அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கினார்.

இந் நிகழ்ச்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் வெகு பிரபலமானது.ஞாயிறுதோறும் காலை இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சன் டிவிதொடங்கப்பட்டது முதலே இந்த நிகழ்ச்சி வந்து கொண்டுள்ளது.

இந் நிலையில் விசு நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில்இணைந்தார் (சேரப் போவதை நாம் குறிப்பிட்டிருந்தோம்).

இது குறித்து அதிமுக தரப்பில் கூறப்பட்டதாவது: ஈரோட்டில் தங்கியிருந்த புரட்சித்தலைவி இதய தெய்வம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த விசு தன்னை அதிமுகவில்சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டினார்.

அதை ஏற்ற அம்மா அவருக்கு உறுப்பினர் அட்டையைக் கொடுத்தார். விசுவுடன்அவரது மனைவி, அண்ணன் மகன் மது, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் உடன்இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் விசு பேசுகையில் (அரட்டை அரங்கத்தில் பேசுவதுமாதிரியே பேசினார்),

முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்கும். அதனால்தான்அதிமுகவில் சேர்ந்துள்ளேன். இப்போது நான் சந்தோஷமாக, நிம்மதியாகஇருக்கிறேன்.

மீண்டும் முதல்வராக ஜெயலலிதா வர வண்டும். அவர் அனுமதி கொடுத்தால்பிரசாரம் செய்யத் தயாராக இருக்கிறேன்.

சன் டிவியில் இனிமேல் அரட்டை அரங்கம் வராது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் 601வது பகுதியை முடித்து விட்டேன். சன் டிவிதொடங்கியது முதலே இந்த நிகழ்ச்சி வந்து கொண்டுள்ளது.

அரட்டை அரங்கம் மக்களின் குறைகளை சுட்டிக் காட்டி நிவர்த்தி காணத்தான்ஆரம்பிக்கப்பட்டது. அந்த நோக்கத்தை நாங்கள் பலமுறை நிறைவேற்றியுள்ளோம்.

ஆனால் சில அரசியல் காரணங்களினால், பலமுறை, நிகழ்ச்சியில் சன் டிவிநிர்வாகத்தின் குறுக்கீடு இருந்தது. தவறான அதிகாரிகள் குறித்து மட்டுமே நாங்கள்சொல்ல வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டோம். நல்ல அதிகாரிகள் குறித்தநிகழ்ச்சிகள் வந்தால் அந்தக் காட்சிகளை வெட்டி விடுவார்கள்.

அவர்கள் மனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள். தவறு செய்பவர்களை தட்டிக்கேட்கும்போது நல்லது செய்பவர்களை தட்டிக் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்குஅவர்கள் அனுமதி மறுத்தார்கள்.

அரட்டை அரங்கம் நகழ்ச்சிக்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. அதைநீட்டிப்பது தொடர்பாக அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. (அதானே..இப்போ தெரியுதா விசுவின் தாவலுக்குக் காரணம்).

எனவே இனிமேல் அரட்டை அரங்கம் வராது. அப்படியே வந்தாலும் அது சன்டிவியில் வராது. வரவும் கூடாது.

சுனாமியின்போது ரூ. 2 லட்சம் திரட்டி முதல்வரிடம் வழங்கினேன். உடனே என்னைக்கூப்பிட்டு அவர்களுக்கு மட்டும் தருகிறீர்களே, எங்களுக்கு கிடையாதா என்றுகேட்டது சன் டிவி நிர்வாகம்.

சன் டிவியால்தான் அரட்டை அரங்கம், நானும் புகழ் பெற்றோம் என்பது போல சிலர்அங்கு பேசி வந்தனர். என்னை பிரபலப்படுத்தியது கலாநிதி மாறன் அல்ல, தமிழகமக்கள்தான்.

நான் பிரபலமானவன் என்பதால்தான் சன் டிவி என்னை அரட்டை அரங்கம்நிகழ்ச்சியை நடத்தக் கோரியது. கலாநிதி மாறனை நான் இதுவரை ஒரேஒருமுறைதான் சந்தித்துள்ளேன். அதுதான் உண்மை என்றார் விசு.

சன் டிவியில் முக்கிய நிகழ்ச்சிகளைக் காடுத்து வரும் ராதிகாவைத் தொடர்ந்துவிசுவையும் அதிமுக இழுத்துள்ளது.

இதனால் பல முக்கிய நிகழ்ச்சிகள் சன் டிவியிலிருந்து ஜெயா டிவிக்கு இடம்மாறவுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X