For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விருத்தாச்சலம்: ஒங்குகிறது கேப்டனின் கை!- ஒடுக்க வருகிறது தங்கர்பச்சான் டீம்

By Staff
Google Oneindia Tamil News

விருத்தாச்சலம்:

விருத்தாச்சலம் தொகுதியில் நடிகர் விஜயகாந்த்துக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவுபெருகிக் கொண்டே போவதால் அதிமுக, பாமக ஆகியவை பீதியடைந்துள்ளன.

தனக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத, வன்னியர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளவிருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார் விஜயகாந்த். அவர் இங்குபோட்டியிடுவது பாமக உள்பட பல முக்கியக் கட்சியினருக்கு பெரும்ஆச்சரியத்தையே கொடுத்தது.

விஜயகாந்த்துக்கு என்னாச்சு, பாமக கோட்டையில் கால் வைத்துள்ளாரே என்றுஅவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர்

ஆனால் விஜயகாந்த் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது பிரசார உத்திகளைவகுத்து கட்சியினரை முடுக்கி விட்டுள்ளார். சத்தமே போடாமல் தே.மு.தி.க.வினர்தொகுதியைக் கலக்கி வருகின்றனர்.

வீட்டுக்கு வீடு விஜயகாந்த் படம், கட்சி கொடி, பேனர் காணப்படுகிறது. வீட்டுச்சுவர்களில் சின்னம் வரைவதற்காக விடப்பட்டிருந்த இடத்தில் இப்போது முரசுசின்னத்தை வரைந்து தள்ளி வருகின்றனர்.

இந்தத் தொகுதியில் போட்டியிடும் பாமக, அதிமுக கட்சிகளின் கொடிகள்,போஸ்டர்களை விட தே.மு.தி.க.வின் கொடியும், பேனரும், போஸ்டர்களும்தான்அதிகம் காணப்படுகிறது. தொகுதியில் உள்ள அத்தனை கிராமங்களிலும் தே.மு.தி.க.வேரூண்றி வலுவாக காணப்படுகிறது.

யாரைப் பார்த்தாலும் விஜயகாந்த் குறித்துத்தான் பேசுகிறார்கள்.

இத்தொகுதியில் இதுவரை விஜயகாந்த் தீவிரப் பிரசாரத்தில் இதுவரை ஈடுபடவில்லைஎன்பதுதான் இங்கே விசேஷம்.

கடந்த 7ம் தேதி இங்கு வந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 17ம் தேதிமீண்டும் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அவ்வளவுதான், தமிழகம் முழுக்கதற்போது மின்னல் வேகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய கடந்த 13ம் தேதி முதல் விஜயகாந்த்தின்மனைவி பிரேமலதா விருத்தாச்சலத்தில்தான் முகாமிட்டுள்ளார்.

கிராமம் கிராமமாக அவர் சென்று உங்கள் அண்ணனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றுகூறி தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் பிரேமலதாவுக்குநல்ல வரவேற்பு இருக்கிறது.

குறிப்பாக பெண்கள் மத்தியில் செமத்தியான வரவேற்பு கிடைக்கிறது.

மிகவும் சாதாரணமாக, இயல்பாக, உறவினர் போலப் பேசி வாக்கு கேட்கும்பிரேமலாதவிடம் கிராம மக்களும் படு சகஜமாகப் பழகுகிறார்கள்.

சீமைப் பசு கொடுப்பதாக அண்ணன் சொல்லியிருக்கிறாரே, நெசமாவா தருவாராம்மாஎன்று பிரேமலதாவிடம் படு ஆர்வமாக கிராமத்துப் பெண்கள் கேட்கிறார்கள். அதற்குபிரேமலதாவும், கண்டிப்பாக வழங்குவோம் என்று உறுதி தருகிறார்.

வன்னியர்கள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களும், தெலுங்குமொழி பேசுவோரும் கணிசமான அளவில் உள்ளனர். தெலுங்கு மக்களிடம் தனதுதாய் மொழியான தெலுங்கிலேயே பேசுகிறார் பிரேமலதா.

பாமக சார்பில் வன்னியரான டாக்டர் கோவிந்தசாமி நிற்கிறார். அதிமுக சார்பில்காசிநாதன் போட்டியிடுகிறார். அவரும் வன்னியர்தான்.

இப்படி முக்கியக் கட்சிகளின் சார்பில் வன்னியர்களே களத்தில் நின்றாலும் அவர்களதுபிரசாரத்தை விட 2 படி உயர்ந்து காணப்படுகிறது தே.மு.தி.க.வின் பிரசாரம். அந்தஅளவுக்கு படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்கள் கேப்டனின் தொண்டர்கள்.

தேமுதிகவின் பிரசார வேகத்தால் பாமக, அதிக ஆகிய கட்சிகள் மிரண்டு போயுள்ளன.இதனால் சீக்கிரம் பிரசாரத்திற்கு வருமாறு ராமதாஸுக்கு பாமக தரப்பு கோரிக்கைவைத்துள்ளது.

இதற்கிடையே தங்கர்பச்சானை தேவையில்லாமல் மன்னிப்பு கேட்க வைத்துகேவலப்படுத்திய விஜய்காந்துக்கு பாடம் புகட்ட இயக்குனர் சீமான், கவிஞர்அறிவுமதி, இலக்கியவாதிகள், பெரியாரிஸ்டுகள் கொண்ட ஒரு டீம் விருதாசலத்தில்வந்து இறங்கியிருக்கிறது.

இவர்கள் தமிழரான தங்கர்பச்சானை கேரளத்தைச் சேர்ந்த நவ்யா நாயருக்காகவிஜய்காந்த் எப்படியெல்லாம் கேவலப்படுத்தினார், அதே நேரத்தில் வட நாட்டுமுஸ்லீமான குஷ்பு விஷயத்தில் மட்டும் எப்படி வாயே திறக்காமல் மெளனம்சாதித்தார் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

கூடவே சுப.வீரபாண்டியனும் தங்கர்பச்சானும் களமிறங்கப் போகின்றனர்.பாமகவுடன் சேர்ந்த தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் திருமாவளவனும் அதிமுகவின் சட்ட திட்டத்தையெல்லாம் மீறி இந்தத்தொகுதியில் மட்டும் பாமகவுடன் நேரடியாகவே கைகோர்த்திருக்கிறார்.

இவர்களது பிரச்சாரம் தான் விஜய்காந்த் தரப்புக்கு கொஞ்சம் போல திகிலையும்,பாமகவுக்கு தெம்பையும் தந்துள்ளது.

இப்படியாக பாமகவும் விஜய்காந்தும் நேருக்கு நேர் மோதலில் உள்ள நிலையில் இத்தொகுதியின் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லைஎன்பதை அவரது பிரச்சாரமே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X