For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தயாநிதி மீது ஜெயா டிவியில் சோ பாய்ச்சல்ச்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தொழிலதிபர் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிநதி மாறன் மிரட்டியதாகவெளியாகியுள்ள செய்தி குறித்து துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமி ஜெயாடிவியில் தெரிவித்துள்ள கருத்து:

டாடாவையே தயாநிதி மாறன் மிரட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. நாட்டில் யாருமே தொழில் நடத்தக் கூடாது,தங்களைத் தவிர வேறு யாருமே இருக்கக் கூடாது என்று இவர்கள் நினைக்கிறார்கள்.அதற்காகத்தான் இவ்வாறு மிரட்டிப் பணிய வைக்க முனைகிறார்கள்.

தயாநிதி மாறன் அமைச்சராக இருந்து கொண்டு பதவியைத் துஷ்பிரயோகம்செய்கிறார் என்று ஏற்கனவே துக்ளக்கில் நான் எழுதியிருந்தேன். இதுதொடர்பாகஏற்கனவே சில தொழிலதிபர்கள் புகார்கள் கூறியவண்ணம் இருந்தனர். ஆனால்அவர்கள் பகிரங்கமாக வெளியில் சொல்லப் பயப்பட்டார்கள். ஆனால் டாடா இதற்குஎல்லாம் அப்பாற்பட்டவர்.

நாட்டிலேயே கண்ணியமான, மிகவும் நேர்மையான, மிகப் பெரிய வர்த்தகத்தைநடத்தி வருகிறவர்கள் டாடா குழுமத்தினர். அவர்கள் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டுஎதையும் செய்தார்கள் என்று புகார் கூட வந்ததில்லை.

அப்படிப்பட்ட நிறுவனத்தையே மிரட்டத் தொடங்கியுள்ளார்கள் என்றால் மத்தியில்ஆட்சியில் பங்கு வகிக்கின்ற திமுக எவ்வளவு தூரம் அந்த வாய்ப்பை துஷ்பிரயோகம்செய்து வருகிறது என்பது நிரூபணமாகிறது.

டாடா நிறுவனத்தின் டிடிஎச் திட்டத்தில் 33 சதவீத பங்குகளை அதாவது மூன்றில் ஒருபங்கை, அதுவும் அடிமாட்டு விலைக்கு தர வேண்டும், நிர்வாக அதிகாரம் தரவேண்டும், முக்கிய முடிவுகளை எடுக்கிற அதிகாரங்களும் தர வேண்டும் என்றுதயாநிதி மாறனும், கலாநிதி மாறனும் கேட்டுள்ளனர். ஆனால் இதை ஏற்க டாடாநிறுவனம் மறுத்து விட்டது.

இதையடுத்து தயாநிதி மாறன், டாடாவை அழைத்து உங்களது பிசினஸையேதொலைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அப்புறமும், அவர் மசியவில்லை. இதனால் டாடா நிறுவனத்தின் பங்குதாரரானமுர்டோச்சை அழைத்து பேசியுள்ளார் தயாநிதி மாறன். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மறுத்து விட்டார்.

முர்டோச் உலகின் முன்னோடி தொழிலதிபர்களில் ஒருவர், டிவி, பத்திரிக்கை எனபல்வேறு தொழில்களை நடத்துபவர். எத்தனையோ நாட்டு அமைச்சர்களைபார்த்தவர். ஆனால் அந்த உலக அமைச்சர்களுக்கெல்லாம் பெரிய அமைச்சராகநடந்து கொண்டுள்ளார் தயாநிதி மாறன்.

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கலைஞர் குடும்பத்தினர் வேறுஎன்னதான் செய்ய மாட்டார்கள்?. இங்கே ஆட்சிப் பொறுப்பு இல்லை என்பதுதான்அவர்களுக்கு பெரிய தடைக்கல்லாக உள்ளது. வேறு யாரும் பிசினஸ் செய்யக்கூடாது, எதைச் செய்தாலும் அதில் 50 சதவீதம் ஷேர் கொடு என்று மிரட்டலாம்.

இப்படித்தான் கேபிள் டிவிக்காரர்களை மிரட்டியே சுமங்கலி கேபிள் விஷன்நிறுவனத்தை பெரிதாக்கினார்கள். பின்னர் ராஜ் டிவி மீதும் புகார் வந்தது.

அரசியல்வாதிகள், பதவிக்கு வந்த பின்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்வார்கள்.ஆனால் தங்களுக்காக மட்டுமல்லாது, மற்றவர்கள் வாழக் கூடாது, நாங்கள்மட்டும்தான் இருக்க வேண்டும். பிசினஸ் என்றால் அது எங்களது குடும்பம்மட்டும்தான் என்று தயாநிதி மாறன் புறப்பட்டிருக்கிறார். இது மிகவும் விபரீதமானஒரு விஷயம்.

பொருளாதார தாராளமயமாக்கல் என்கிறோம், தனியார் முதலீடுகளுக்காகமெனக்கெடுகிறது மத்திய அரசு. இதுகுறித்து மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும்தினம் தினம் ஏதாவது பேசி வருகிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் தொலைத்துவிடுவேன் என்று தயாநிதி மாறன் போய்க் கொண்டிருக்கிறார்.

இவர்கள் தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் விபரீதத்திற்குத் தடையேஇல்லாமல் போய் விடும்.

வருகிற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட்டால், மத்தியில் இவர்களது செல்வாக்குமங்கி விடும். தயாநிதி மாறன் டாடாவை மிரட்டும் அளவுக்கு வர முடியாது. சோனியாகாந்திக்கு, தமிழக முதல்வர் மீது உள்ள கோபத்தின் காரணமாகவே, திமுகவுக்குபெரிய செல்வாக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடைய செல்வாக்கு பெயரளவில்தான், ஓட்டளவில் இல்லை, தேர்தலில்மக்கள் ஆதரவு கிட்டவில்லை என்று மக்கள் காட்டி விட்டால், மத்தியிலும் இவர்களதுசெல்வாக்கு தானாகவே மங்கி விடும். அது நாட்டுக்கு நல்லது, இல்லையென்றால்யாரையும் வளர விட மாட்டார்கள், தமிழகத்தையும் மிரட்டுவார்கள் என்றார் சோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X