For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ 1 கோடி நஷ்டஈடு கேட்டு தினமணிக்கு தயாநிதி நோட்டீஸ்- உயர் நீதிமன்றத்திலும் வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டாடா நிறுவனத்தை நான் மிரட்டியதாக புரளி கிளப்பி வருகிறார்கள், அந்தப் புகார்கள்அனைத்தும் அப்பட்டமான பொய் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்கூறியுள்ளார்.

டாடா நிறுவனத்தின் டிடிஎச் சேவையில் சன் டிவியை 33 சதவீத பங்குதாரராக சேர்க்கவேண்டும், இல்லாவிட்டால் உங்களது டெலிகாம் பிசினஸை ஒழித்துக் கட்டிவிடுவேன் என்று தொழிலதிபர் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்மிரட்டியதாக செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்தியை தற்போது தயாநிதி மாறன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக செய்திவெளியிட்ட த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய பத்திரிக்கைகளுக்கு தனதுவழக்கறிஞர் ரவீந்திரன் மூலம் தயாநிதி மாறன் நிாேட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், தயாநிதி மாறன் பற்றி வெளியான செய்திகள் விஷமத்தனமானது. தயாநிதிமாறனைப் பிடிக்காத சிலரின் கட்டளைப்படி, நேர்மையற்றி முறையில் புரளிகளைக்கிளப்பி, ஆதாயம் அடைவதற்காக இந்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே தயாநிதி மாறனிடம் நபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு, ரூ. 1 கோடிநஷ்ட ஈடு தர வேண்டும். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறப்பட்டுள்ளது.

நெருக்கடிக்கு பயந்து பொய் செய்தி:

மேலும் தயாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தோல்வி பயம் அதிகமாகிஜெயலலிதா கூட்டணி இப்போது திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளது.

டாடாவை நான் மிரட்டியதாக சொல்வது அப்பட்டமான பொய். இது குறித்து டாடாநிறுவனம் எந்தப் புகாரும் கூறாத நிலையில் தினமணி, த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஆகியவை வலிந்து வெளியிட்டுள்ள செய்து உள்நோக்கம் கொண்டது.

அந்த பத்திரிக்கைகள் கூட தெளிவாக குற்றம் சாட்டிட பயந்து சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியோடுயாருடையே நெருக்கடிக்கோ பயந்து இந்த தவறான செய்தியை வெளியிட்டுள்ளன.

நீதிமன்றத்தில் பொய் சொன்ன ஜெ:

இந்த செய்தியை வைத்து என்னை பதவி நீக்கச் சொல்கிறார் ஜெயலலிதா. ஆதாரமற்றஇந்த செய்தியைப் பிடித்துக் கொண்டு ஜெயலலிதா கரையேற நினைக்கும் பைத்தியக்காரத்தனத்தை அவரதுஅறிக்கையே சுட்டிக் காட்டுகிறது.

டான்சி வழக்கில் தான் போட்ட கையெழுத்தையே தனதல்ல என்று நீதிமன்றத்தில்பொய் சொன்ன ஜெயலலிதாவை நீதிமன்றமே கண்டித்தது. சிறுசேரி நிலத்தைஅடிமாட்டு விலைக்கு விற்று, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் அதை திரும்பவாங்கி நாடகம் நடத்தியவர் இந்த ஜெயலலிதா.

நீதிமன்றங்கள் கண்டித்தும் பதவி விலக முன் வராத ஜெயலலிதா இப்போது இல்லாதஒன்றை கற்பனையாக சிருஷ்டித்து என் ராஜினாமாவைக் கோருவது விலா நோகசிரிக்க வைக்கும் வேடிக்கை.

சூத்ரதாரிகளை நானறிவேன்:

இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகியவற்றில் வந்த செய்திகளின் பின்னணியில்இருந்த சூத்ரதாரிகளை நான் அறிவேன். இது போன்ற செய்திகளை வெளியிட்டுகுட்டையைக் குழப்பும் நரித்தனம் இவர்களது வாடிக்கை.

டிடிஎச் உரிமம் அளிக்கும் துறை நான் சார்ந்த துறை சார்ந்ததே அல்ல.

இந் நிலையில் இந்த ஏடுகள் மீது வழக்கு போட்டு முடிவு வெளியானால் உண்மைநாட்டு மக்களுக்கு தெரியும். நம் கவனத்தை தேர்தல் பணியில் இருந்து திசை திருப்பும்இந்த முயற்சிக்கு நாம் பலியாகாமல் நம் பணிகளைத் தொடர்வோம்.

நாணயம், ஒழுக்கம், மானம் ஆகியவை குறித்து ஜெயலலிதா தனது அறிக்கையில்மிகவும் அலட்டிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. அதை நினைத்தால் தான் சிரிப்பைஅடக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் தயாநிதி.

இந் நிலையில் திமுகவின் தினகரன் நாளிதழில், பீட்டர் மாமா பகுதியில், டாடாவை தயாநிதி மிரட்டியதாக செய்திவெளியிடச் செய்ய, முன்பு சங்கர மடத்துக்கு நெருக்கமாக இருந்து, அரசால் விசாரணை என்ற பெயரில்அலைகழிக்கப்பட்ட அந்த ஆடிட்டருக்கு பங்கு இருப்பதாக மறைமுகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தில் வழக்கு:

இந் நிலையில் தன்னைப்பற்றிய அவதூறு செய்திகளை வெளியிட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளிதழ்களுக்கு நிரந்தரத் தடைவிதிக்க வேண்டும் என்றுகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக தயாநிதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,

தேர்தல் பிரசாரத்தின்போது னனக்குக் கூடும் கூட்டத்தை ஜீரணிக்க முடியாமல் அதிமுக மற்றும் மதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் இந்த அவதூறு செய்திவெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியில் சற்றும் உண்மை இல்லை.

பொய்யான ஒரு செய்தியை திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் அது உண்மையானதாகி விட முடியாது. என் மீது சேற்றை வாரி இறைக்க உதவும் கருவிதான்இது. இந்த செய்தியால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்றஅவதூறான செய்திகளை வெளியிட இரு நாளிதழ்களுக்கும் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். மேலும் இரு நாளிதழ்களும் தலா ரூ. 15 லட்சம்நஷ்ட ஈடு தர உத்தரவிட வேண்டும்.

ஜெயா டிவி தொடர்ந்து பொய்யான செய்தியை ஒளிபரப்பி வருவதால் அந்த டிவி நிறுவனமும் என்னைப் பற்றியஅவதூறான செய்திகளை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். மேலும் ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடாக அளிக்கஉத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X