அதிமுக பேச்சாளர் மீது திமுகவினர் தாக்குதல்
திருச்சி:
திருச்சியில் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அதிமுக பேச்சாளரைதிமுகவினர் விரட்டி, விரட்டி அடித்தனர். இதையடுத்து திருச்சி 2 தொகுதியின் அதிமுகவேட்பாளர் மரியம் பிச்சை தலைமையில் அக் கட்சியின் தொண்டர்கள் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராபோர்ட் பகுதியில் நடந்த அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அப் பகுதியின்பேச்சாளர் ஒருவர் திமுகவை மிகக் கடுமையான விமர்சித்தார். திமுக தலைவர்கருணாநிதியை அவர் ஒருமையில் விமர்சித்துப் பேசவே, அங்கு ஒரு கவுன்சிலர்தலைமையில் திமுகவினர் குவிந்தனர்.பேச்சை நிறுத்து என்று கூறியபடியே அதிமுக கூட்டத்துக்குள் புகுந்து அந்த பேச்சாளரைஅடித்து, உதைத்தனர். பதிலுக்கு அதிமுகவினரும் அடிக்கவே அங்கு பெரும் ரகளைஏற்பட்டது.
பெரும் திரளாக வந்த திமுகவினர் அதிமுக பேச்சாளரை விரட்டி விரட்டி அடித்தனர்.
இதைடுத்து மரியம் பிச்சை தலைமையிலான அதிமுகவினர் மதுரை-திருச்சி சாலையில்மறியலில் குதித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுகவினரை கைதுசெய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.
போலீசார் விரைந்து வந்து மரியம் பிச்சையை சமாதானப்படுத்தி போராட்டத்தை வாபஸ்பெற வைத்தனர். திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக பிரமுகர் கொலை:
இதற்கிடையே செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் திமுகஇளைஞர் அணி துணைச் செயலாளரான ராமு (37) வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ராமு மீது பல கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு கள்ளச் சாராயவியாபாரி கடந்த ஜனவரியில் கொல்லப்பட்டார். அதில் ராமுவும் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார்.
ஒன்றரை மாதம் சிறையில் இருந்துவிட்டு இரு வாரங்களுக்கு முன் தான் ஜாமீனில்வெளியே வந்தார். இந் நிலையில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகேநண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இவரை காரில் வந்த ஒரு கும்பல் சரமாரியாகவெட்டியது.
இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அந்தக் கும்பல் காரில் ஏறித்தப்பிவிட்டது.












Click it and Unblock the Notifications