நன்றி மறந்த விஜயகாந்த்: லியாகத் அலி சாடல்

Subscribe to Oneindia Tamil

ஆத்தூர்:

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த்துக்கு நெருக்கமாக இருந்துவந்தேன். ஆனால் எனக்கு கஷ்டம் வந்தபோதெல்லாம் அவர் எனக்கு உதவவில்லைஎன்று வசனகர்த்தா லியாகத் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.

விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பராகவும், அவரது படங்களின் ஆஸ்தானவசனகர்தாதவாகவும் திகழ்ந்து வந்தவர் லியாகத் அலிகான்.

ஆனால், கேப்டனின் மச்சான் சுதீஷ் தலையெடுத்ததில் இருந்து விஜய்காந்தின் பழையநண்பர்கள் எல்லோரும் ஒதுக்கப்பட்டனர்.

விஜய்காந்தின் பள்ளிக் காலத் தோழனான இப்ராகிம் ராவுத்தர், லியாகத் அலி கான்உள்பட அவருடை தோஸ்துகளை கேப்டனிடம் இருந்து பிரித்தார் சுதீஷ்.

கேப்டனின் ஆஸ்தான பினாமி தயாரிப்பாளராகவும் சுதீஷே மாறினார். இப்போதுஅரசியலுக்கு அவரை இழுத்து வந்ததிலும் சுதீசுக்கு பெரும் பங்கு உண்டு.

சுதீஷால் ஓரங்கப்பட்ட விஜய்காந்தின் தோழர்கள் எல்லோரும் ஒதுங்கிவிட்டார்கள்.சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்லியாகத் அலிகான்.

இந் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும்திண்டுக்கல் சீனிவாசனை ஆதரித்து லியாகத் அலிகான் பிரசாரம் செய்தார். அப்போது,

கடந்த 23 வருடங்களாக விஜயகாந்த்துக்காக வசனம் எழுதி வந்தேன். ஆனால்என்னை ஒரு நண்பராகவே விஜயகாந்த் நினைத்ததில்லை. எனக்கு கஷ்டம்வந்தபோதெல்லாம் எனக்கு உதவியதும் இல்லை.

ஆனால் எனக்கு சம்பந்தமே இல்லாத நடிகர் சரத்குமார் எனக்கு பல உதவிகளைச்செய்துள்ளார்.

விஜயகாந்த் ஒண்ணா நம்பர் நன்றி கெட்ட மனிதர், நன்றி மறந்தவர். நான் எழுதித் தந்தவசனங்களைப் பேசித் தான் அவர் இவ்வளவு தூரம் உயர்ந்தார்.

ஆனால், அதை அவர் மறந்து விட்டார்.விஜயகாந்த்தை திரை நட்சத்திரங்கள் யாரும்ஆதரிக்கவில்லை. காரணம், அவரை பக்கத்தில் இருந்து அவரது சுய நலத்தை நன்றாகஉணர்ந்தவர்கள் நாங்கள்.

ஆனால் அதிமுகவுக்குத்தான் திரையுலகமே ஆதரவாக இருக்கிறது என்றார் லியாகத்அலிகான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+