தயாநிதியை நீக்காதது ஏன்?- பாஜக கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாடா விவகாரத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்காமல்பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காப்பது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தயாநிதி மாறன் மீதுகூறப்பட்டுள்ள புகார் சாதாரணமானது அல்ல. மிகவும் சீரியஸானது. இந்தப் புகார்குறித்து பிரதமர் விரிவான விசாரணை நடத்தி அவரை மத்திய அமைச்சர்பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

தொலைத்தொடர்புத்துறையில் மாறனின் செயல்பாடுகள், அவர் செய்த ஊழல்கள்குறித்து விசாரிக்க வேண்டும். இதை பிரதமர்தான் செய்ய வேண்டும். ஆனால் அவர்அமைதியாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

நான் மிரட்டினேன் என்று டாடா வெளிப்படையாக சொல்லவில்லையே என்றுதயாநிதி மாறன் கூறுவது கேலிக் கூத்தாக உள்ளது. ஒரு பொறுப்பான மத்தியஅமைச்சர் இவ்வாறு பேசக் கூடாது. இது நொண்டிச்சாக்காகும்.

இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பாஜக எழுப்பும் என்றார் ரவி.

கைகள் கட்டப்பட்டுள்ளன: சு.சுவாமி

இந் நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி,

மத்திய அமைச்சர் தயாநதி மாறன் தன்னை மிரட்டியது தொடர்பாக தொழிலதிபர்ரத்தன் டாடா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் அந்தக்கடிதத்தை தயாநிதி மாறனுக்கு அனுப்பி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறுகேட்டுள்ளார்.

தயாநிதி மாறன் என்ன செய்தார் தெரியுமா? அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டுநேராக சோனியா காந்தியிடம் போய் அவர் காலில் விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்துமன்மோகன்சிங்கை தொடர்பு கொண்ட சோனியா காந்தி, இந்தப் பிரச்சினையில்நீங்கள் தலையிட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டார்.

ஆனால் சொன்னபடி தயாநிதி மாறனுக்கு அவர் உதவவில்லை. அதேபோல, தயாநிதிமாறனும் பிரதமருக்கு பதில் அளிக்கவில்லை, அவரைப் போய் பார்த்து விளக்கம்சொல்லவும் இல்லை, அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இதுதான் மன்மோகன்சிங்கின் இன்றைய நிலை.

இந்தக் கடிதம் பிரதமருக்கு வரவில்லை என்று யாராவது மறுக்க முடியுமா? முடியாது,காரணம் என்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் பொய்யான கல்விச்சான்றிதழை தாக்கல் செய்துள்ளார். இதை எதிர்த்து நான் வழக்கு தொடருவேன்.

தமிழகத்தில் உள்ள அத்தனை தொலைக் காட்சிகளிலும் பிரசாரம் நடத்தப்படுகிறது.இவற்றையெல்லாம் வேட்பாளர்களின் தேர்தல் கணக்கில் சேர்க்க வேண்டும். தமிழகதேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.

நாங்கள் சற்று தாமதமாக கூட்டணி அமைத்தோம். கொஞ்சம் முன் கூட்டியேஅமைத்திருந்தால் 90 இடங்களில் நிச்சயம் வெற்றி பெற்றிப்போம் என்று சீரியஸாகபேட்டியை ஆரம்பித்து தமாஸாக முடித்தார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+