திமுக வெற்றி பெற்றால்தான் நல்லது: காரத்
ஈரோடு
மத்திய ஆட்சியில் பங்கேற்றுள்ள திமுக தமிழகத்தில் ஜெயித்தால்தான் தமிழகத்திற்குநல்லது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
ஈரோட்டில் அவர் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மதவாத பாஜக தேசியஅரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல நல்ல விஷயங்கள்நாட்டுக்கு நடந்துள்ளன.தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் பல்வேறு அவதிக்குஆளாகினர். குறிப்பாக தொழிலாளர் வர்க்கம் பந்தாடப்பட்டது. இதுவரை எந்தமாநிலத்திலும் நடந்திராத அளவுக்கு சர்வாதிகார, கொடுங்கோல் ஆட்சியாகஜெயலலிதா ஆட்சி விளங்குகிறது.
சட்டசபை முறையாக நடக்கவில்லை. எதிர்க்கட்சிகள் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.பேச்சு சுதந்திரம் முற்றிலும் இல்லை, தொழிலாளர்களுக்கு எதிராக பல்வேறுஅடக்குறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இது ஜனநாயக நாடுதானா என்றசந்தேகம் மக்களுக்கு ஏற்படும் வகையில், நடந்து கொணடுள்ளது அதிமுக அரசு.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் திமுக உள்ளது. அதேபோல தமிழகத்திலும் திமுகதலைமையில் ஆட்சி அமையுமானால், தேசிய அளவில் நிறைவேற்றப்பட்டு வரும்பல்வேறு திட்டங்களை தமிழகத்திலும் சிறப்பாக நிறைவேற்ற முடியும்.
அப்போதுதான் குறைந்தபட்ச செயல்திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.
திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் சிறப்பான தேர்தல் அறிக்கையைவெளியிட்டுள்ளன. கிலோ அரிசி 2 ரூபாய், தரிசு நிலங்களைப் பிரித்து ஏழைகளுக்கு2 ஏக்கர் நிலம் என்ற அறிவிப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்றார் காரத்.
ஜெவால் சீரழிந்த தமிழகம்: மொய்லி
இதற்கிடையே ஸ்ரீரங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் கர்நாடகமுதல்வரும் தமிழக காங்கிரஸ் பார்வையாளருமான வீரப்ப மொய்லி கூறுகையில்,
மத்திய அரசுடன் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பவர் ஜெயலலிதா.தமிழகம் தொடர்பான எந்தத் திட்டத்திற்காகவும் மத்திய அரசை அவர் நாடியதில்லை.மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்திப்பதை விரும்பாதவர் அவர். அப்புறம்எப்படி தமிழகம் உருப்படும்?
மத்திய அரசு வழங்கிய ரூ. 8,000 கோடி நிதியை செலவழிக்காமல் அப்படியே மத்தியஅரசுக்கே திருப்பி அனுப்பி விட்டு விட்டது தமிழக அரசு. இதன் மூலம் எத்தனைதிட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம்?
ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தின் தொழில் வளம் சீரழிந்தது, விவசாயம்அழிந்தது, வர்த்தக அரங்கில் தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்தக் கட்சிதான்ஆட்சியைப் பிடிக்கும். இப்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். எனவேமக்களின் அமோக ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்கும் என்றார் மொய்லி.
திமுகவே ஜெயிக்கும்: கார்கே
இதற்கிடையே சேலம் வந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றுசாதாரண விவசாயிகள், ஏழை மக்கள், கட்சித் தொண்டர்கள் கூறுகிறார்கள்.
அதற்கு முக்கிய காரணம் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைதான். தமிழகமுதல்வர் ஜெயலலிதா மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொது மக்களிடையேபெரும் அதிருப்தி நிலவுகிறது.
அவரது ஆட்சி முறையை மக்கள் ரசிக்கவில்லை, விரும்பவில்லை. ஒரு தேக்க நிலைகாணப்படுகிறது.
மாறாக, திமுக தலைவர் கருணாநிதி, அனைவரையும் நன்கு அரவணைத்து செல்பவர்.
எனவே வருகிற தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணிக்கு அமோகவெற்றி காத்திருக்கிறது என்றார் கார்கே.












Click it and Unblock the Notifications