கட்சிகளும் நாய் பிஸ்கெட்டும்-திண்டிவனம் கடுப்பு
செங்கல்பட்டு:
நாய்க்கு பிஸ்கட் போட்டு மயக்குவது போல மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளைதிமுகவும், அதிமுகவும் மாறி மாறி அறிவித்து வருகின்றன என்று திண்டிவனம்ராமமூர்த்தி விமர்சித்துள்ளார்.
அதிமுக நம்பி காங்கிரஸை விட்டுவிட்டு வெளியே வந்து இப்போது ஹைவேஸ்ரோட்டில் தனியே நிற்கும் திண்டிவனம் ராமமூர்த்தி தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ்வேட்பாளரை ஆதரித்து பேசுகையில்,மக்களோடு கூட்டணி என்கிறார் ஜெயலலிதா. திமுகவில் ஏகப்பட்ட கட்சிகள்கூட்டணி வைத்துள்ளன. தேர்தலுக்கு முன்பே கூட்டணிக் கட்சிகளிடம்ஏதேச்சதிகரமாக நடந்து கொண்டது திமுக. யாரையும் மிரட்டி, அடக்கி வைத்துவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.
முதலில் கூட்டணி ஆட்சி குறித்துப் பேசக் கூடாது. கொடுக்கிற சீட்டை வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். ஆனால் நான் முதன் முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்த பிறகுஇறங்கி வந்து விட்டார்கள். இப்போது கூட்டணி ஆட்சியை மறுக்க மாட்டோம்,தவிர்க்க மாட்டோம் என்கிறார்கள்.
திமுகவுக்கு அடிமைகள்தான் தேவை. அங்கு அடிமைகளால்தான் இருக்க முடியும்.அதனால்தான் வாசனால் திமுகவுடன் ஒத்துப் போக முடிகிறது.
இன்று திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வாககுறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.இதைப் பார்த்தால் தேர்தல் கொள்ளை அறிவிப்பாக தெரிகிறது.
லஞ்ச ஊழலில் மலிந்த கட்சியும், இலவச வேட்டி, சேலை என லஞ்ச ஊழலில்மலிந்தவர்களும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள். இவர்கள் அறிவிக்கும்அறிவிப்புகளைப் பார்க்கும்போது நாய்க்குப் பிஸ்கட் போட்டு மயக்கி பணியவைப்பது போலத்தான் தோன்றுகிறது என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.












Click it and Unblock the Notifications