ஜாலி டூர்-3 தேர்தல் பார்வையாளர்கள் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 3 மத்திய தேர்தல் பார்வையாளர்கள்,தேர்தல் பணியைப் பார்க்காமல் இன்பச் சுற்றுலா சென்றனர். இதைத் தொடர்ந்து 3பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக தேர்தல் பார்வையாளர்களாக சுமார் 300 வட இந்திய அதிகாரிகள்வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாவர்.

இவர்களில் பலரும் இந்தப் பணியை ஜாலி டூராக மாற்றிக் கொண்டுள்ளனர்.இவர்களை நல்லபடியாக கவனிக்குமாறு கலெக்டர்களுக்கும் தமிழக அரசு உத்தரவுபோட்டுள்ளதால் ஏசி ரூம் போட்டுத் தந்து ஏசி கார்களும் தந்து சிறப்பான உணவுவழங்கப்பட்டு வருகிறது.

சிலருக்கு இத்யாதி சமாச்சாரங்களும் தரப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.சென்னையில் ஒரு பெண் அதிகாரி முழு மப்பில் ரூமுக்குள்ளேயே கலாட்டா செய்யஹோட்டல் நிர்வாகம் தந்த புகாரையடுத்து அவரை அமுக்கமாக தேர்தல் பணியில்இருந்து விடுவித்து திருப்பி அனுப்பி வைத்த சம்பவமும் நடந்தது.

இந் நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் பத்து தேர்தல்பார்வையாளர்கள் நயமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 2 செலவுக் கணக்குபார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் அரசு விருந்தினர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வட மாநிலங்களைச் சேர்ந்த இந்த அதிகாரிகளில் சிலர் தங்களது தேர்தல் பணிகளைவிட்டு விட்டு மதுரையைச் சுற்றிப் பார்ப்பது, அழகர்கோவில், அதிசயம் தீம் பார்க்உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வருவது என பொழுதைக் கழித்தனர்.

இவர்களுக்கு துணையாக நின்றது மாவட்ட நிர்வாகம். செலவும் அவர்களுடையதே.

இது தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து தேர்தல் ஆணையம் விசாரணைநடத்தியது. இதில், மதுரை கிழக்கு தொகுதி பார்வையாளரான மகாராஷ்டிர மாநிலஅதிகாரி அஸ்வினி குமார்,

திருப்பரங்குன்றம் தொகுதி பார்வையாளரான டெல்லியைச் சேர்ந்த அமித் ஜா,சமயநல்லூர் தொகுதி பார்வையாளரான அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரூப்ராம்ஜோவல் ஆகிய 3 பேரும் ஜாலி டூர் போனது உறுதியானது.

இதையடுத்து இவர்கள் தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டு திருப்பி

அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களது தொகுதிகளை மற்ற தொகுதிகளின் தேர்தல் பார்வையாளர்கள் கூடுதல்பணியாக பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+