அனைத்து மத பெண்களுக்கும் தங்கம்-ஜெ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி:

இந்துப் பெண்களுக்கு மட்டும் அல்ல இலவச தங்கத் தாலி. கிறிஸ்தவ, இஸ்லாமியபெண்கள் உள்பட அனைத்து மதப் பெண்களுக்குமே 4 கிராம் தங்கம் இலவசமாகஅளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் இளம் பெண்களுக்கு அவர்களதுதிருமணத்தின்போது 4 கிராம் தங்கத் தாலி இலவசமாக வழங்கப்படும் என்றுஜெயலலிதா திடீரென அறிவித்தார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில்,

தோல்வி பயம் காரணமாக ஏட்டிக்குப் போட்டியாகவே இந்த அறிவிப்பைஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இதனால் தான் தாலிக்குத் தங்கம் இலவசம் என்றுகூறியுள்ளார். இவர் ஆழ்ந்து யோசித்து இத் திட்டத்தை அறிவித்திருந்தால் பிறமதத்தினருக்கு தாலிக்குத் தங்கத்துக்குப் பதில் என்ன கொடுப்போம் என்பதையும்கூறியிருப்பார்.

ஆனால், யாருடனும் ஆலோசிக்காமல் சும்மா பேச்சுக்கு அவசரத்துக்கு வெளியிட்டஅறிவிப்பு என்பதால் தாலிக்குத் தங்கம் என்று பொத்தாம் பொதுவாகக்கூறியிருக்கிறார் என்றார்.

இதையடுத்து ஜெயலலிதா அதற்கு விளக்கம் தந்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடந்தபிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

கடந்த 2001ம் ஆண்டு தேர்தலின்போது நான் சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும்எனது அரசு நிறைவேற்றியது. சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றினோம்.

கிருஷ்ணகிரி பகுதி மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரூ. 1005கோடி செலவில் ஓகனேக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம், தயாரிக்கப்பட்டு மத்திய அரசின்ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் இத்திட்டம்ஜப்பான் நிாட்டு நிதியுதவியுடன் நிறைவேற்றப்படும்.

இலவசத் தங்கத் தாலி திட்டம் குறித்து என் கட்சியைச் சேர்ந்த பெண்கள், ஒரேகுடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால், அனைவருக்கும்வழங்குவீர்களா என்று கேட்டனர்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தில் எத்தனை பெண்கள் இருந்தாலும்அத்தனை பேருக்கும் 4 கிராம் தங்கத் தாலி இலவசமாக வழங்கப்படும்.

இந்துப் பெண்களுக்கு மட்டும்தானா இந்தத் திட்டம்? இல்லை.

கிறிஸ்துவர்கள், முஸ்லீம்களுக்கும் 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.கிறிஸ்தவர்கள் மோதிரமாக அணிந்து கொள்ளலாம். முஸ்லீம் பெண்கள் தாங்கள்விரும்பியதை செய்து கொள்ளலாம் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+