பாண்டிச்சேரி: 55 சதவீதம் வாக்குப் பதிவு
பாண்டிச்சேரி - திருவனந்தபுரம்:
புதுவை மாநிலத்தில் உள்ள மாஹே, பல்லூர் மற்றும் ஆந்திராவில் உள்ள ஏனாம்ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் நடந்தது.
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அமைதியாக நடந்த இந்த வாக்குப் பதிவில் 55 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளன.பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மற்ற 27 தொகுதிகளுக்கு தமிழகத்துடன் சேர்த்து வரும் 8ம் தேதிவாக்குப் பதிவு நடக்கவுள்ளது.
இதற்கிடையே வாக்குப் பதிவின்போது வாக்களர்களுக்குத் தருவதற்காக மதுபானம் பதுக்கி வைத்திருந்த பாஜகவேட்பாளர் கல்யாண சுந்தரத்தின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது உறவினரின் பண்ணைவீட்டில் ரெய்ட் நடத்திய போலீசார் ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கேரளத்தில் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு:
இதற்கிடையே கேரள மாநிலத்தில் இன்று இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடந்தது.
வட கேரள மாவட்டங்களான கன்னூர் மற்றும் காசர்கோட் ஆகியவற்றில் உள்ள 15 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
பாதுகாப்புப் பணியில் கேரள போலீசார் தவிர தமிழக, ராஜஸ்தான் மாநில போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.கேரளத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications