இலங்கை தமிழர்களுக்காக போராட்டம்: பழ. நெடுமாறன் உள்ளிட்ட 500 பேர் கைது
சென்னை:
தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்துசென்னையில் ஊர்வலம் செல்ல முயன்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
![]() |
இலங்கை அரசின் இன வெறித் தாக்குதலைக் கண்டிக்கும் விதமாகவும், தமிழகத்தின்கண்டனத்தைத் தெரிவிக்கும் விதமாகவும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக சென்னையில் இன்று காலை இலங்கை துணைத்தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் திட்டமிட்டபடிபழ. நெடுமாறன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே பெரும் திரளானோர்குழுமினர். அங்கிருந்து ஊர்வலமாக அவர்கள் கிளம்பினர்.
இதைத் தொடர்ந்து நெடுமாறன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீஸார்கைது செய்தனர்.
பழ. நெடுமாறன், பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மார்க்சீயபெரியாரிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஆனைமுத்து, தமிழ்த் தேசப்பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணியரசன், தமிழ் தமிழர் இயக்க் தலைவர் தியாகு,
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைவர் பொழிலன், தமிழ் தேசமார்க்சீய கட்சித் தலைவர் ராஜேந்திர சோழன், தலைநகர் தமிழ்ச் சங்கத் தலைவர்சுந்தரராஜன், ஓவியர் வீர. சந்தானம், திருச்சி செளந்ததரராஜன்,
![]() |
உலகத் தமிழர் பேரமைப்பின் பத்மநாபன், தமிழ் முழக்கம் அமைப்பின் ஷாகுல்அமீது, புலவர் இறைக்குருவனார், மா.செ. தமிழ் மணி, உலகத் தமிழர் மைய்யத்தின்புலவர் மதிவாணன், முனைவர் தமிழப்பன், புதுவை பெரியார் திராவிட கழகத்தின்லோகு.அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்ஆவர்.
கைதுக்கு முன் நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைதியான முறையில்ஆர்ப்பாட்டம் செய்ய வந்த எங்களைப் போலீஸார் தடுத்துள்ளனர்.இப்போராட்டத்திற்கு காவல்துறையும், தமிழக அரசும் அனுமதி மறுத்துள்ளன. இதன்மூலம் எங்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒவ்வொரு தமிழனும் கொதித்தெழ வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது. அதன் விளைவுதான் இந்த முதல் கட்ட ஆர்ப்பாட்டம் என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!














Click it and Unblock the Notifications