பெட்ரோல் விலை உயரும்: ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை நீண்ட காலம் தள்ளிப் போட முடியாது.கண்டிப்பாக விலையை ஏற்றியே ஆக வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டது.இருப்பினும் தேர்தல் நேரத்தில் விலையை கடுமையாக உயர்த்தினால் பாதகமாகஅமைந்து விடும் என்பதால் விலை உயர்வை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.இந் நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறுகையில்,
நீண்ட காலத்திற்கு விலை உயர்வை தள்ளிப் போட முடியாது. அது பொருளாதாரத்தைகடுமையாக பாதிக்கும். ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை 35 டாலராக உள்ளது.
இது பொருளாதார பிரச்சினை. இதை சமாளிக்க முடியும். ஆனால் பேரல் விலை 70டாலராக உயரும்போது அது அரசியல் பிரச்சினையாகி விடுகிறது. இதை சமாளிப்பதுமிகவும் கடினமாகும்.
இப்போதுள்ள நிலை அப்படித்தான் உள்ளது. இதை சமாளிக்க விலை உயர்வைசீக்கிரமே அமல்படுத்தியாக வேண்டும். இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகளும்அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications